வீட்டிலேயே மாலை சிற்றுண்டி
இயற்கையான முறையில் ஸ்நாக்ஸ், குர்குரேவை மிஞ்சும் சுவை – evening snacks in tamil
தேவையான பொருட்கள்
கேரட் – இரண்டு
உருளைக்கிழங்கு – பெரிதாய் ஒன்று
அரிசி மாவு ஒரு கப்
கொத்தமல்லி தழை
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி (ஸ்பூன்)
வீட்டு மசாலா அல்லது கரம் மசாலா – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கேரட் மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக வேகா வைத்துக்கொள்ள வேண்டும். வேக வைத்த கேரட் மற்றும் உருளைக்கிழங்கை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக ஊற வைத்த அரிசியை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த கேரட் மற்றும் உருளைக்கிழங்கு பசை போல இருக்கும், அதனுடன் நன்றாக சிறிது சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி கலந்து கலக்கவும், உடன் அரிசி மாவை கலந்து நிறம் மாறும் வரை கலக்கவும்.
தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள். மஞ்சள் தூள், வீட்டு மசாலா கலந்து நன்றாக கலக்கவும். பால் அல்லது பருப்பு வாங்கி வரும் கவரின் அடிப்பகுதியில் ஒருபுறம் துளையிட்டுக்கொண்டு அதில் கலந்து வைத்த மாவை போட்டு முறுக்கு பிழிவது போல சிறு சிறு துண்டுகளாக எண்ணெயில் போட்டு சிவந்த நிறம் வந்ததும் பரிமாறி சுவைக்கவும். மாலை நேரத்தில் சுவை மயக்கும் சிற்றுண்டி தயார்.
இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு ரசிக்க.
This is something good and different.