கொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்
சென்ற வாரம் வெளியிட்ட “நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்” பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் – golu aanmeega vilakkam
முதல் படியில் புல் செடி கொடி ஆகிய தாவர வகை பொம்மைகள் நாம் இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இரண்டாம் படியில் சங்கு நத்தை போன்ற பொம்மைகள் நத்தை போல் நிதானமாக வாழ்ந்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
மூன்றாம் படியில் கறையான் எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் எறும்பு போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. இதுபோன்ற மனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி பெறுவதை உணர்த்துகிறது.
நான்காம் படியில் நண்டு வண்டு ,தேனி போன்ற பொம்மைகள் ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஐந்தாம் படியில் மிருகங்கள் பறவைகளின் பொம்மைகள் மிருக குணத்தை விட்டு பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஆறாம் படியில் உள்ள மனித பொம்மைகள் முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களை கடைப்பிடிக்க முழு மனிதன் அந்தஸ்தைப் பெறலாம் என்பதை உணர்த்துகிறது.
ஏழாம் படியில் உள்ள மகான்கள் யானைகளின் பொம்மைகள் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை உணர்த்துகின்றது. அடியில் உள்ள நாயன்மார்கள் சமயக்குரவர்கள் ஆழ்வார்கள் போன்ற குழுக்கள் தவம் யோகம் போன்றவற்றை நாம் கடைபிடித்து தேவ நிலைக்கு உயர வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஒன்பதாம் படியில் உள்ள பிரம்மா விஷ்ணு சிவன் பார்வதி போன்ற குழுக்கள் வேலைக்கு சென்ற உயிர்கள் தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
பொதுவாகவே இப்படி வைக்கப்படும் கொலுவைப் பார்க்க அக்கம்பக்கத்தார், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அன்றைய நிவேதனப் பொருளையும், மஞ்சள்-குங்குமம்- வெற்றிலை-பாக்கு என்று மங்கலப் பொருட்களையும் வழங்கி சந்தோஷப்படுத்துவார்கள், சந்தோஷப்படுவார்கள். இப்படி பிறரை குறிப்பாக சுமங்கலிப் பெண்களையும், கன்னிப் பெண்களையும், சிறுமிகளையும் அழைத்து அவர்களுக்கு ‘மரியாதை’ செய்வதிலும் ஒரு தத்துவம் உள்ளடங்கியிருக்கிறது.
அதாவது, அப்படி வரும் பெண்களோடு அம்பாள் தானும் உடன் வருகிறாள், அவளும் நம் ‘மரியாதை’யை ஏற்றுக்கொள்கிறாள் என்ற நம்பிக்கைதான் அது! நவராத்திரி விரத பூஜையின் மகிமையால் உங்கள் இல்லம் சிறக்கும்; மங்களங்கள் பெருகும்.
கொலுக்கள் தரும் ஆன்மிக சிந்தனைகள்
நமக்குள் இருக்கும் குழந்தை தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஒரு அற்புதமான நிகழ்வாக நவராத்திரி கொலு திருவிழா அமைகின்றது. பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது பெரியவர்களையும் கவர்கின்றது.
ஆதிசங்கரரின் அழகிய ஸ்ரீ மூகாம்பிகை ஸ்ரீராமானுஜரின் பாசத்திற்கு அகப்பட்ட ராமன் சத்குரு ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூல ராமர் நாயன்மார் போன்றோர் பாடிப் பரவிய தில்லை-நடராஜர் போன்றவைகள் அனைத்துமே ஆன்மீக குழுக்களாக உள்ளன. இவைகளை பார்க்கும் போது நவராத்திரிகள் நமக்கு உயரிய ஆன்மீக பரவசத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அறிவியல் ரீதியான தத்துவம் விளக்கம்
இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் எதையும் அறிவியல் ரீதியாகவே அணுகும் முறையை கையாள்வதால் அறிவியல் ரீதியான சில விளக்க தத்துவத்தையும் இதனுடன் இணைத்துள்ளேன் – golu aanmeega vilakkam.
புரட்டாசி மாதம் வெயிலும் மழையும் காற்றும் ஆக இந்த மூன்று பருவ நிலைகளையும் மாறிமாறி நிகழ்த்தும் அற்புதம் அதற்கேற்றாற்போல் நம் உடல் நிலைகளையும் கிருமித் தொற்றுகள் இடமிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்காக தான் நமது முன்னோர்கள் தெய்வ வழிபாடு செய்வதன் மூலமாக சில ஆன்மீக காரியங்களாக நம்மை பாதுகாத்துக் கொள்ள பல உள்ளார்ந்த அர்த்தத்தோடு வழிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளனர் குறிப்பாக இந்த நவராத்திரி நாட்களில் வீட்டில் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவார்கள்.
வீட்டில் மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தமாக வைத்திருப்பர் மேலும் வேப்பிலை தோரணங்கள் மாவிலை தோரணங்கள் கட்டுவதன் மூலம் வெளியிலிருந்து வரக்கூடிய அனைத்து கிருமிகளும் அழிந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவி செய்கிறது..
இந்த விரதங்கள் பண்டிகைகள் மூலமாக நம் உறவுகள் நண்பர்கள் ஆகியோருடன் நட்புடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும் பல நல்ல விஷயங்களையும் நல்ல அணுகுமுறைகளையும் உளவியல் ரீதியாக நாம் உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும் நம் இன்ப துன்பங்களை பரிமாறிக்கொள்ள அவ்வப்போது இதைப் போன்ற விழாக்கள் நமக்கு துணை செய்யும் எப்படி இன்னும் பல அறிவியல் ரீதியான உள்ளர்த்தங்களை உள்ளடக்கிய விரதங்களையும் பண்டிகைகளையும் நம் முன்னோர்கள் ஆன்மீகத்தின் வழியாக நமக்கு உணர்த்தி சென்றுள்ளனர் என்றே கூறலாம்.
உளவியல் ரீதியான தத்துவம்
இன்பத்தையும் துன்பத்தையும் வாழ்வில் சரிசமமாக பார்த்து அவற்றை கடந்து தன்னம்பிக்கையோடு தைரியமாக முன்னேறிச் செல்வதற்கு இந்த பண்டிகைகள் பேருதவியாக இருக்கும்.
பொறுமை ,தியாகம் ,பொதுநலம் குரோதம் இன்மை, நற் செயல்கள், நல்லெண்ணங்கள் மனதில் தோன்றி இவற்றையெல்லாம் நற்பண்போடு நாம் வாழ்வில் மேற்கொண்ட பல போராட்டங்களை தவிர்த்து தகர்த்து இன்னல்கள் களைந்து வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை இறை நம்பிக்கையாக மாற்றி நம் முன்னோர்கள் நமக்கு வரப்பிரசாதமாக பண்டிகைகளையும் விழாக்களையும் நடைமுறை படுத்தி இருக்கிறார் கள் எனலாம்.. – golu aanmeega vilakkam
எந்த ஒரு நற் செயலையும் தர்மத்தின் வழி படி முறையாக நல்லெண்ணம் கொண்டு செய்வோமானால் என்றும் யாவருக்கும் நன்மையே விளையும் இறையருளை குருவருளை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைந்து மற்றவருக்கு முன் முன்மாதிரியாக விளங்கி வாழ்வில் இன்பம் பெறுவோமாக……. நன்றி.
நவராத்திரி விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நவராத்திரி விரத மகிமை …பல தத்துவங்கள் …எல்லாவற்றையும் இப்பதிவு அருமையாக விளக்கியது.. அனேக விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அருமை.