இறந்த தோழமைக்கு உயிர்கொடுத்த மானசீகம்

மகேசும், ரமேசும், நெருங்கிய நண்பர்கள். குவா குவா சத்தம் முதல், மழலை பேச்சில் தொடங்கிய அவர்களது நட்பு இருபத்தி இரண்டு வயதாகியும் (கல்லூரி மூன்றாம் ஆண்டு ) தொடர்கிறது அவர்களின் இனிமையான நட்பு. irantha thozhanukku uyir kodutha manam

 மகேசுக்கு ரமேஷ் இருந்தால் உலகமே கையில் அடங்குவதாய் உணர்வான்.

தோள் கொடுக்க தோழன் உண்டு என்பதால் எதிர்கால வாழ்கை பற்றி இருவருமே பயமில்லாமல் தைரியமாக, மற்றவரிடம் இருந்து வேறுபட்டு இருந்தனர்.

இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே வாரிசு என்றாலும் இரண்டு வீட்டாரும் எனக்கு இரண்டு மகன்கள் என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு இரு பெற்றோருக்குமே பாச பிள்ளைகளாய் வலம் வந்தார்கள்.

ஒருநாள் இருவருமே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கே, நிலை தடுமாறி ஒரு லாரி வந்து கொண்டிருக்க, வழியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை பார்த்து 5 மாத தாய் ஓடிவர அதை பார்த்த ரமேஷ் அவர்களை கடக்கும் போது மகேஷை கிழே தள்ளிவிட்டு தான் மட்டும் அந்த லாரிக்குள் பாய்கிறான் அவனது தலையை பதம்பார்த்து  அடுத்த மூன்றாவது அடியில் லாரி நிற்கிறது. மூன்று உயிர்களையும் தனது நண்பனையும் வாழவைக்க தனது உயிரை இழந்தான் ரமேஷ் .

irantha thozhanukku uyir kodutha manam

நமக்கெல்லாம் நமது ஒருவரின் வாழ்கை நினைவுகளே நினைவில் இருக்கும் சொந்தம் . ஆனால் அந்த நண்பர்கள் இருவருக்கும் இருவரின் நினைவுகளும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு சம்பவங்களும் .

ரமேஷின் இழப்பை தாங்க முடியாத மகேஷ் அன்று முதல் இதுவரை நடந்த நிகழ்வுகளில் ரமேஷின் நினைவுகளை மட்டும் கொண்டு உடல் அளவில் மகேஷாக மனதளவில் ரமேஷாக வாழ தொடங்கினான் . இரண்டு குடும்பங்களுக்கும் பிள்ளையாக தனது நினைவுகளை அழித்துவிட்டு நண்பனின் நினைவுகளோடு அவனாகவே வாழ்கிறான்.

நிஜத்தில் இருந்து மறைந்த  ரமேசின் நட்புகாக இந்த கற்பனை கதை.

irantha thozhanukku uyir kodutha manam

You may also like...