இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்
தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண ஓவியமாக சொற்களால் அலங்கரிக்கப்பட்டு, உருவமாற்றம் பெறுகின்றன… – iyalbanavargalukku mattum nool vimarsanam
அத்தகைய சிறப்புமிக்க படைப்பாளர்களின் படைப்புகள் மதிக்கப்பட்டு, பாராட்டப் பட வேண்டியது மிக அவசியம் ஆகும்.
இச்சேவையை செய்யும் நீரோடை குழுமத்திற்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
நல்ல சீமையாம் நெல்லைச் சீமையில் உதித்த அற்புதக் கவிஞரிவர். “நெருப்பு விழிகள் “என சிறப்பு பெயர் பெற்றவர். விழிகளில் அன்பும், சக்தியையும் வேலையும் தன் பெயரோடு கொண்ட மகத்தான கவிஞர் சக்தி வேலாயுதம் அவர்கள்.
வங்கி ஊழியராக பணிபுரியும் இவர் தன் கற்பனைகளையும், எண்ணத்தின் தோன்றும் கவிகளையும் தன்னுள் சேமித்து வைத்து சமூகம் மாண்புற புத்தகமாக வெளியிட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இவருடைய முதல் படைப்பை வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அண்ணனின் முதல் படைப்பான இயல்பானவர்களுக்கு மட்டும் என்ற கவிதொகுப்பிலிருந்து சில கவிகள்….
ஒரு புத்தகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடுகள் இல்லாமல் படைக்கப்பட்ட ஓர் இயல்பான நூல். வாழ்விற்கு வழிவகுக்கும் நற்கருத்துகளை உச்சியில் உரைப்பது போல் நச்சென்று சொல்வதில் கவிதைகள் முதன்மை பெறுகின்றது. நான்கு வரிகளானாலும் மனித இயல்பை இயல்பாகவே தன் கவிதைகளில் சுட்டிகாட்டியிருப்பதில் கவிஞருக்கு நிகர் அவரே.
நேர்மை, பொய்மை, இயற்கை, காதல், அன்பு, மௌனம், என்று யதார்த்த வாழ்வியலே பற்றிய இயல்பான எண்ணங்களை கவியாக பகிர்ந்தளித்துள்ளார் விழிகளார்…. – iyalbanavargalukku mattum nool vimarsanam
என்னை ஈர்த்த சில கவிகள்..
” வாய்ப்புகளைத் தவற விட்டு
வாழ்க்கையைத் தேடுவதே
நமது வாடிக்கை
புரிந்து கொள்வோமே
வாய்ப்புகளே
நமது வாழ்க்கை என்று”…
வாய்ப்பின் உன்னதம் உணர்த்தும் கவி.
” உன் மௌனம்
பலரை வெல்கிறது …
என்னை கொல்கிறது …
மௌனம் கொள்பவள் நீ….
மௌனத்தால் கொள்பவளும் நீ..”
ஆஹா ….. காதலில்லாத கவியும் இல்லை…. எழுதாத கவிஞருமில்லை….
நெருப்பு விழிகள் கொண்டு கவிதைகளில் அனைத்தையும் காட்சிபடுத்தி காயங்கள் ஆற்றுகிறார்
கவிஞர். முரண்பட்ட விழிகள் சுட்டுவிடாமல் குளிர்விக்கிறது இதயங்களை…
அழகான கவிகள்
அளவான வரிகள்….
எளிமையான நூல்……
அனைத்தும் வரிகளும் இனிமை கூட்டும் இயல்பானவர்களுக்கு மட்டும்……
அனபால் இணைந்த அண்ணனின் புத்தகத்தை ஆசையோடு விமர்சிக்க விரும்பிய அன்பு தங்கை.
– கவி தேவிகா, தென்காசி.
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும் பெற்றுத்தர முயல்கிறோம்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
சகோதரி தேவிகாவின் புத்தக விமர்சனமே ஒரு கவிதையாய் மலர்கிறது.யதார்த்த கவிதைகளே இன்றைய நாளில் மிக அதிகமாக மனதை கவர்கின்றன.சகோதரர் சக்திவேல் அவர்ளுக்கு வாழ்த்துகள்.கவிதைகள் இன்னும் மலரட்டும்…
அருமையான. விமர்சனம்
Super Kavi