கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06

kavithai potti

கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
கவிமோகனம், கோவை
காயத்ரி நிமலன்

வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கவிதை போட்டி முடிவுகளுக்கென தனி பக்கம் உருவாக்கப்படுகிறது

கவிதை போட்டி 2022_06 அறிவிப்பு

சுற்றுச்சூழல்
கோடைமழை
இன்னா செய்தாரை ஒறுத்தல்
மகாகவி
பொறுத்தார் பூமியாள்வார்
மேலும் தங்கள் விரும்பிய தலைப்பு

தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-06. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

9 Responses

  1. Venkatesan says:

    வாழ்க்கை

    இருதயம் இப்–பயணம்
    போகும் வழி துயரம்…
    தூரமும் முகம் சுழிக்கும்…
    நீ போகும் வரை தகனம் ….
    நாள் முடியும் இரவில் ..
    உதிக்காது தரணி….
    தினந்தோறும் கனவில்…
    நடக்காதே …..
    நாம் பார்த்து இருக்கும்
    இந்த உலகம் பிம்பம்…
    அதை புரிந்த கொண்டு
    நீ ஓடு…

    நடிக்கின்ற மனிதனின் எண்ணம் புரிந்து..
    சிரிகின்ற மனிதன் போலே நடித்து பழகு…
    நாளைய நாடும் கொடியது அதை புரிந்து..
    இன்றே உன்னை அறிந்து நீ நகரு…
    ரக்கை இருக்கிற உயிரே தான்..
    வானில் பறந்து விளையாடும்..
    தன்னம்–பிக்கையை கொண்டே- தான்
    நீயும் பறந்து விளையாடு…
    செயலின் முடிவே எப்போதும்,
    இங்கு எதார்த்தம்..

    வான்-கொண்ட நீரும் பூமி சேர நினைக்கும்..
    பூமியில் புதைந்த விதையும் மேல்செல்ல துடிக்கும்..
    மகிழ்ச்சியும் கூட உன்னை வெறுத்து இருக்கும்..
    நீரையும் விதையும் போல.. நீயும் அதை துரத்து…
    வலிகள் நிறைந்த உலகம் தான்
    சுற்ற தவறவில்லை எந்நாளும்..
    காற்றை போலவே உன்னை தான்
    நினைத்து நகர்ந்து விடு எப்போதும்..
    வாழ்த்து எப்போவும், வாழ வைக்காது
    யாரையும்….

  2. அனந்தி சூலூர் says:

    புத்தகம்
    நான் பூவாக இருந்தேன்,
    நீ- மாலையாக்கினாய்.
    நான் நீராக இருந்தேன்,
    நீ- நதியாக்கினாய்.
    நான் உலகம் சுற்ற விரும்பினேன்,
    நீ- வழிகாட்டியானாய்.
    நான் ‘ போதும்’ என நொந்து போனேன்,
    நீ- புது வாழ்வளித்தாய்.
    நான் போராட நினைத்த போது,
    நீ- ஆயுதம் ஆனாய்.
    நான் வீழ்ந்து கிடந்தேன்,
    நீ- நம்பிக்கையானாய்.
    நான் நோய்வாய்ப்பட்ட போது,
    நீ- மூலிகையானாய்.
    நான் செல்வத்தை தேடினேன்,
    நீ-பரம்பரை சொத்தானாய்.
    நான் புதையலை தேடினேன்,
    நீ-பொக்கிசமானாய்.
    நான் வாசகனாக எண்ணினேன்,
    நீ- எழுத்தாளனாக்கினாய்.
    மற்றவர்களின் அனுவப்பாடம் -நீ
    எனக்கு வாழ்க்கை பாடமானாய் .

  3. ரேவதி மகேஷ் says:

    சப்தங்கள்!
    நிசப்தங்களை உடைக்கும்…
    அசந்தர்ப்ப சப்தங்கள்….
    அடங்கப் போவதில்லை!

    பல சபதங்களின்…
    பின்னணி சப்தங்கள்….
    அரங்கேறுகின்றன அளவின்றி!

    பல விவாத சப்தங்களினூடே…
    நான் எனும் எண்ணம்…
    எட்டிப்பார்த்து….
    வெற்றுச்சாதனைகளை..
    அள்ளியிறைக்கிறது!

    பேசு பொருள் மறந்து
    திசைமாறிப்போன…
    பல்வேறு சப்தங்கள்….
    கனமாய்க் குடிகொள்கின்றன..
    வீதிகளில்!

    பிறர்சொல் கேளா..
    பெருஞ்சப்தங்களில்…
    சிலருக்கு….
    தலையில் கிரீடம்…
    தோளில் இறக்கை…
    காலில் சக்கரம்….
    எனப் பலவும் முளைக்கின்றன!

    சப்தங்கள் கலைத்துப் போட்ட…
    பேசா மௌனம்…
    அமைதியாய்…
    உடைந்து போயிருக்கிறது…
    உள்ளுக்குள்!

  4. ரேவதி மகேஷ் says:

    காலம்!

    நிர்ப்பந்தங்களினூடே…
    தீப்பந்தம் ஏந்திக் கடக்கிறது…
    அதி வேகமாய்…
    காலம்!

    ஒன்றன்பின் ஒன்றாய்….
    விளைவுகள் கிளைபரப்ப…
    தலைவிரித்தாடியே….
    கடந்து போகிறது…
    காலம்!

    பின்னப்பட்ட சதிவலைகளில்…
    வெளிச்சம் மறைந்து…
    கவிகிறது காரிருள்!

    வெற்றிக் கதவருகில்….
    எப்போதும் தடுக்கப்படுவது..
    மரபாகிறது!

    இறந்தகால…
    புற்றீசல் நினைவுகளை…
    திரை மூடும் நிகழ்காலம்….
    எதிர்காலம் நோக்கி..
    இழுக்கிறது!

    கடந்து போகிறது காலம்….
    விடைகள் பலவற்றை…..
    விளக்கியும் விளக்காமலும்!

  5. ரேவதி மகேஷ் says:

    தென்றல்!

    முகர்ந்து முகம் தொட்டு
    ஸ்பரிசங்களை….
    குழைந்து கூட்டியது!

    வழித்துணை..
    நிலவு நடந்த…
    விசால வீதிகளில்….
    விலாசங்கள்…
    கேளாமல் நுழைந்து….
    வருடிப்போனது!

    பெருமரங்களின்….
    ஊஞ்சலாட்டங்களில்…
    ஊசலாடா மனங்களெங்கும்…
    ஊடுருவியிருந்தது!

    உறவுக்களிப்புகளில்…
    உடை தொட்டு…
    உரிமை கொண்டாடியது!

    கோபுரஉச்சி…..
    கார்மேகம் தீண்டி….
    மழைச்செய்தி….
    காதில் சொன்னது!

    காலக்குடுவை மணல்…
    வேகமாய்…
    விழுந்து தீர்க்க…
    தக்கவைக்க…
    முடியாத்தருணங்களை….
    தென்றலோடு…
    இழந்த மனிதன். .
    புலம்புவது….
    கைபேசிச்செய்திகளில்…
    குளிர்சாதனத்தின் தயவில்!

  6. அனந்தி, சூலூர் says:

    குடும்பம்
    அன்பையும், அமைதியையும் அள்ளித்தரும் – அட்சய பாத்திரம்.
    உறவுகளின் கலவையால் பின்னிப் பிணைந்த – கதம்பம்.
    விட்டுக்கொடுப்பதால் உயர்ந்த – அழகிய வசந்தமாளிகை.
    மனங்களின் ஒற்றுமையான உணர்வுகளின் – சங்கமம்.
    மன்னிப்பையும், மாண்பையும் கற்றுத்தரும் – கல்விக்கூடம்.
    வாழ்க்கையை வரமாகவும், சாபமாகவும் மாற்றும் – அதிசயமந்திரம்.
    நிறை குறைகளை வெளிகாட்டும் சலனமில்லாத – தெளிந்த நீரோடை.
    சுமையில்லா, சுகமான பயணத்தின் இனிய அடித்தளம் – குடும்பம்

  7. அவிநாசி சோமு சாவித்திரி says:

    ஒளி விளக்கும் அனைத்து போனதம்மா

    தங்கமே தவிக்கின்றேன்
    செல்வமே எழுந்திடு
    வைரமே துடிக்கின்றேன்
    துயரத்தில் பாரம்மா..

    ஒளி விளக்கும் அணைந்து போனதம்மா
    ஒரு கிளியின் சிறகு உடைந்து வாடுதம்மா.

    விதிகளும் ஊஞ்சலிலே விளையாடி
    வினை என்று சிறைபட்டு போனதம்மா…

    தாயென்னும் வீட்டினிலே குடியிருந்தேன்
    தாரம் எனும் அன்பினிலே மகிழ்ந்தேனம்மா.

    கள்ளம் இல்லா பிள்ளை ஒன்றை வளர்த்து வந்தேன்
    அவள் கால்களிலே சலங்கை கட்டி வைத்து இருந்தேன்
    எருமை என்னும் வாகனத்தில் வந்த யமன்
    எப்படியும் கொண்டு போனானம்மா…

  8. G SIVAKUMAR says:

    இன்னா செய்தாரை ஒறுத்தல்…
    என் மன இறுக்கங்களை
    இறக்கி வைக்கி்ன்றேன்
    வாங்க ஆளில்லை..
    .மரமாய் மற்றவர்க்கு
    நிழல் தருகின்றேன் …
    பூத்துக் காய்த்துப் பருத்துக் கிடப்பதினால் என்னையே வீழ்த்த நினைக்கிறது சுற்றியுள்ள உலகம்…அறமே நீயே அரவமற்றுக் கிடக்கையில் எனக்கெங்கு போயிற்று அறிவு…வரம் தந்த சாமி மேலேயே கை வைத்துப் பார்த்திடும் உலகத்திடையே பரம சாதுவாய் என் நகர்வுகள்…
    கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதற்காக அறத்தை அர்த்தமற்றதாக்கிக் கொள்ள ஆவி மறுக்கிறது …இன்னா செய்வார் என்று தெரிந்தும் இனியவே செய்திட மனம் எழுகிறது …ஆயினும் இன்னா செய்வார் ஒருவர் கூட என் பக்கம் இப்போதெல்லாம் வருவதில்லை…ஏன்…? ஆய்ந்து பார்க்கையில் …..
    என் காட்டில் இப்போதெல்லாம் மழையில்லை.. ..வறண்டு கிடக்கிறது பொருளாதாரம்…வறுமை ஆட்சி செய்யும் எம் பகுதிக்கு தொகுதிக்கே வருகை தராத துரோகிகளாய் இன்னா செய்தவர்கள் …மனம் கடையேழு வள்ளல்களாய் கருணையோடு கசிந்து கிடக்கிறது …பணமோ பாதாள உலகத்தில் பதுங்கிக் கிடக்கிறது …காதற்ற ஊசியாய் …கடைத்தெருவில் வறுமை கொலுவீற்றிருக்க என் பயணங்கள்…புறமுதுகிடுகின்ற சுற்றத்திற்கு முன்னே கற்றுக் கொண்டேன் ஓர் அறம் …ஆணியே புடுங்காமலிரு …தானியங்கி எந்திரமாய் பொருட்பின் சென்றுழலும தன்னலம் படைத்தவர் முன்பு ஆணியே புடுங்காமலிரு …

  9. சா.மெஹபூப் சானியா says:

    இயற்கை

    காற்றை சுவாசிக்கலாம்
    ஆனால் பிடிக்கமுடியாது
    மரத்தை வளர்க்கலாம்
    ஆனால் அழிக்ககூடாது
    சூரியனை பார்க்கலாம்
    ஆனால் நெருங்கமுடியாது
    மழைத்துளியை ரசிக்கலாம்
    ஆனால் எண்ணமுடியாது
    மனிதர்களின் குணத்தை அறியலாம் ஆனால் அதுபோல் வாழமுடியாது.

    சா மெஹபூப் சானியா