கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06

கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள்
இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
கவிமோகனம், கோவை
காயத்ரி நிமலன்
வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கவிதை போட்டி 2022_04 அறிவிப்பு
சுற்றுச்சூழல்
கோடைமழை
இன்னா செய்தாரை ஒறுத்தல்
மகாகவி
பொறுத்தார் பூமியாள்வார்
மேலும் தங்கள் விரும்பிய தலைப்பு
தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-06. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
வாழ்க்கை
இருதயம் இப்–பயணம்
போகும் வழி துயரம்…
தூரமும் முகம் சுழிக்கும்…
நீ போகும் வரை தகனம் ….
நாள் முடியும் இரவில் ..
உதிக்காது தரணி….
தினந்தோறும் கனவில்…
நடக்காதே …..
நாம் பார்த்து இருக்கும்
இந்த உலகம் பிம்பம்…
அதை புரிந்த கொண்டு
நீ ஓடு…
நடிக்கின்ற மனிதனின் எண்ணம் புரிந்து..
சிரிகின்ற மனிதன் போலே நடித்து பழகு…
நாளைய நாடும் கொடியது அதை புரிந்து..
இன்றே உன்னை அறிந்து நீ நகரு…
ரக்கை இருக்கிற உயிரே தான்..
வானில் பறந்து விளையாடும்..
தன்னம்–பிக்கையை கொண்டே- தான்
நீயும் பறந்து விளையாடு…
செயலின் முடிவே எப்போதும்,
இங்கு எதார்த்தம்..
வான்-கொண்ட நீரும் பூமி சேர நினைக்கும்..
பூமியில் புதைந்த விதையும் மேல்செல்ல துடிக்கும்..
மகிழ்ச்சியும் கூட உன்னை வெறுத்து இருக்கும்..
நீரையும் விதையும் போல.. நீயும் அதை துரத்து…
வலிகள் நிறைந்த உலகம் தான்
சுற்ற தவறவில்லை எந்நாளும்..
காற்றை போலவே உன்னை தான்
நினைத்து நகர்ந்து விடு எப்போதும்..
வாழ்த்து எப்போவும், வாழ வைக்காது
யாரையும்….
புத்தகம்
நான் பூவாக இருந்தேன்,
நீ- மாலையாக்கினாய்.
நான் நீராக இருந்தேன்,
நீ- நதியாக்கினாய்.
நான் உலகம் சுற்ற விரும்பினேன்,
நீ- வழிகாட்டியானாய்.
நான் ‘ போதும்’ என நொந்து போனேன்,
நீ- புது வாழ்வளித்தாய்.
நான் போராட நினைத்த போது,
நீ- ஆயுதம் ஆனாய்.
நான் வீழ்ந்து கிடந்தேன்,
நீ- நம்பிக்கையானாய்.
நான் நோய்வாய்ப்பட்ட போது,
நீ- மூலிகையானாய்.
நான் செல்வத்தை தேடினேன்,
நீ-பரம்பரை சொத்தானாய்.
நான் புதையலை தேடினேன்,
நீ-பொக்கிசமானாய்.
நான் வாசகனாக எண்ணினேன்,
நீ- எழுத்தாளனாக்கினாய்.
மற்றவர்களின் அனுவப்பாடம் -நீ
எனக்கு வாழ்க்கை பாடமானாய் .