கவிதை போட்டி 2023_08
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-08
வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.
கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.
கவிதை போட்டி அறிவிப்பு
- எது சுதந்திரம்
- வந்தே மாதரம்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- மகாத்மா காந்தி
- நீரோடையை பற்றி சில வரிகள்
- விரும்பிய தலைப்பு
கல்விக்கண் திறந்த மகான் பிறந்தநாள் சிறப்பாக இந்த மாத போட்டி அறிவிக்கப்படுகிறது
மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-08. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
கல்யாண வைபோகம் கண்டு
காலங்கள் கழிந்து போக
கண்டோர் கண்டது ஏச
கண்கள் களங்கி நின்றவளின்
கைகளில் கதிரவனாக வந்தவனே…..
ஒரு துளியில் உருவாகி
கருப்பையின் கதவு திறக்க
எனக்குள்ளே கருவாகியநாள்
கருங்கல்லாக இருந்த நான்
கற்பினி சிலையேன மாறினேன்…
மான் போல குதித்தோடிய
என்பாதங்கள் மழை நேரத்து
மயில் போல் நடந்தனவே
ரவையாக இருந்த நான்
சற்று இனிப்பேரி கேசரியாக மாறினேனடா என் சர்க்கரையே
முதல் மாதம்…
பானையில் சோறு இருந்தும்
வயிற்றில் பசி இருந்தும்
வாயிம் வயிறுமேன இல்லாது
சங்கடத்துடன் எழுந்து சென்ற
நாட்களுக்கும் சேர்த்து
அரும்பசி எடுக்குதடா இரண்டாம் மாதம்….
ஓரு பார்வை
திகடுவதெயில்லை
நீ பார்க்காமல் பார்க்கும் அப்பார்வை
அக்காத்தின் மடல்கள் தீச்சுடும் கோடை வெயில்
திகட்டுகின்ற அந்த தாக்கதில்
ஒவ்வொரு நொடியும் புதிதாய் இருக்க
உன்னை காதலித்து திகடவும் பார்கிறேன்
முடிவதே இல்லை….