கவிதை தொகுப்பு 66
இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சுப்பிரமணிபாரத், கவிஞர் கார்டிலியா மோகன்பாபு அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 66
கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம்
பாறையோடு பல நாள்
போராடி முட்டி மோதி
வெளி வரும்
சிறு செடியின் வெற்றி
ஆச்சரியத்துக்குரியதே!!
பாராட்டப்படவேண்டியதே!!
எனினும்!!!
தன் இயல்புத் தன்மையை
கொஞ்சம் இளக்கிக் கொண்டு
செடியின் வெற்றிக்கு காரணமான
அந்த பாறையின் ஒத்துழைப்பும்
கவனத்துக்குரியதே!!
பாராட்டுதலுக்குரியதே!!!
– கார்டிலியா மோகன்பாபு
குடியரசு இந்தியா
சமய இருட்டில் தடுக்கி!
ஜாதி சகதியில் எழுந்து
வெள்ளையனின்
“அதிகாரத்தை”மீட்டேடுத்து
நமக்கான சட்டயுரிமையே நிலைநாட்டி!!
குடிகள்ஒன்று சேர்ந்து குதுகளிக்கும்
இன்ப திருநாள் குடியரசு தினம்!!!
நாட்டின் நிலைமையே நினைத்து
என்னோடு சேர்ந்து “மெழுகுவர்த்தியும்”
கண்ணீர் வடிக்கும் இந்த மெல்லிய இரவில்
என் கவிதையில் விழும் கண்ணீர் சொட்டு!!!
பாறையின் மீது உருண்டுவிழும்
பறவையின் “முட்டைப்போல”
சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில்
மட்டும் தேசப்பற்று!!!
மலராய் ஜனிக்காமல் கனியாய் பிறக்காமல்
மரத்தை தாங்கி பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை
நம் நாட்டை காக்கும் இராணுவவீரர்களும் அப்படியே!!!
துப்பாக்கி கண்டதும்
பயந்துநடுங்கும் கூட்டமில்லை!!
வாழ்வு சாவு மத்தியில் உயிரேனும் தோட்டாவில்
எதிர்த்து நிற்பவரை
கலங்கசெய்யும் கூட்டம்!!
மரணம் வரைக்கும் சென்றவிதை
இன்னொரு “ஜனனம்” காண்பது போல
நிலக்கரிக்குள் “உயிரூட்டி”
எந்திரம் தள்ளும் நெருப்புதான் இராணுவம்!!
தன்னினும் “வலியது” தாங்கி சுமக்கும்
“தண்டவலமாய்” இராணுவவீரர்கள்!!
நம்பிக்கையில் உயிரை ஊறவைத்து!!
பேய் மழையிலும்!! கடும் குளிரிலும்!” உறைந்த பணியிலும்!!
நத்தை சாகும் வரை தன்கூட்டை காயட்டாமல் இருப்பது போல!!
உயிர் பிரியும் வரை எல்லைக்கோட்டில்
எங்களுக்குகாக சீருடையை கயற்றதா நாட்டை
பாதுகாக்கும்!! என் ராணுவ ரத்தமே!என்னமும் ஏக்கமும்
நிறைவேற!! இந்தியனாய் வேற்றுமை கலைத்து
ஒற்றுமையாய் வாழ
உறுதிகொள்வோம்…
ஜெய்ஹிந்த் – kavithai thoguppu 66
– சுப்பிரமணிபாரத்