கவிதை தொகுப்பு 67
சேலம் தாரா அவர்களின் ஐந்து கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பை வெளியிடுகிறோம் – kavithai thoguppu 67
“மதிப்பு இல்லாத மனிதன்”
பாடுபட்டு வாழ வழி இல்லை
பாட்டன் சொத்து என்று ஏதுவும்
இல்லை
வேலை செய்தால் கூட கூலி
கிடைக்கவில்லை
கூலும் காஞ்சியும் கொதிக்க அடுப்பு
இல்லை
அரிசி வாங்க கையில் பணம்
இல்லை
பெற்ற பிள்ளையின் முகம் பார்க்க
மனம் இல்லை
மனைவியின் தாலியை அடகு
வைப்பேன் என நினைக்கவில்லை
வறுமை என்ற வார்த்தை
பிடிக்கவில்லை
வஞ்சகம் இல்ல உலகம் கடவுள் ஏன்
படைக்க வில்லை
காசு என்ற வார்த்தைக்கு இருக்கும்
மதிப்பு இன்று மனிதனுக்கு இல்லை
ஏழை பணக்காரன் என்ற
வார்த்தைக்கு இனி இடம் இல்லை
“பணம் தான் வாழக்கை”
ஏன் பிறந்தேன் என தெரியவில்லை
வாழ்க்கை என்பது புரியவில்லை
அன்புக்கும் பாசத்திற்கும் இடம்
இல்லை
அடையாளம் இல்ல வாழ்வு அர்த்தம்
இல்லை
பேராசை இல்லாத மனிதன் யாரும்
இல்லை
அவமானத்திற்கு நான்
தத்துப்பிள்ளை
பணத்திற்கு ஏன் என்னை
பிடிக்கவில்லை
பரதேசியாய் வாழ என்ன பாவம்
செய்தேன் என தெரியவில்லை
“நம்பிக்கை தான் வாழக்கை”
காற்று இல்லமால் வாழ
முடியவில்லை
பணம் இல்லாமல் இருக்காக
முடியாவில்லை
வெற்றிக்கும் எனக்கும் தூரம்
இல்லை
வேலை எனக்கு கிடைக்கவில்லை
வேதனை சொல்ல வார்த்தை
வரவில்லை
முகமுடி அணிந்த வாழ்க்கை பிடிக்க
வில்லை
கேள்விக்கு பதில் கிடைக்க வில்லை
லட்சியத்திற்கு தடையில்லை
வெற்றியை நான் விடவில்லை
“வாழ்க்கை ரசிக்க வேண்டும்”
அழகான வாழ்க்கையை ரசிக்க
வேண்டும்
சிறக்கு விரித்து பறக்க வேண்டும்
கனவுகளை சுமக்க வேண்டும்
வெற்றி பாதையில் நீ நடக்க
வேண்டும்
மற்றவர்கள் முன் வாழவேண்டும்
தரணியில் உன் புகழ் பறக்க
வேண்டும்
பொறுமையாய் நீ இருக்க
வேண்டும்
ஓடும் நதி போல் நீ ஒட வேண்டும்
வாழ்க்கையை நீ காதலிக்க
வேண்டும்
“வாழ்க்கை”
போராட்டம் இல்லாத வாழ்க்கை
இல்லை
போராட என்னால் முடியவில்லை
நீரும் நெருப்பும் இணைவது
இல்லை
நிம்மதிக்கு அர்த்தம்
தெரியவில்லை
நிதானமாக யோசிக்க
முடியவில்லை
வாழ்க்கையில் விடியல் பிறக்க
வில்லை
நம்பிக்கையை நான்
இழக்கவில்லை – kavithai thoguppu 67
– தாரா சேலம்