கோலப்போட்டி 2020 முடிவுகள்
கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் போடப்பட்டன – kolam potti results.
சிலர் தை முதலாம் நாள் (மார்கழி முடிந்த பின்னர்) அனுப்பினர், அதை இந்த போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை. அடுத்த போட்டிக்கு (தமிழ் புத்தாண்டிற்கு) அதை சேர்த்துக்கொள்வோம்.
kolam potti results பரிசுகள்
போட்டியில் இரண்டு அல்லது மூன்று பரிசுகள் தர முடிவு செய்து இருந்தது நமது குழு. ஆனால் அனைத்து படைப்புகளும் அருமை என்பதால், பரிசுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்தோம். கலந்துகொண்டோரின் குறிப்புகளை நமது நீரோடை வலைத்தளத்தில், பாட்டிவைத்தியம், பாரம்பரியம் காப்போம், நலம் வாழ (மேலும் பல) தலைப்புகளில் மூன்று கட்டுரைகளாக வெளியிடுகிறோம்.
ஐந்து பேருக்கு பரிசுகள்
போட்டியில் கலந்துகொண்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்டோரில் ஐந்து பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன – kolam potti results.
விஜயராணி, செட்டிச்சத்திரம், திருவாரூர்
உஷா முத்துராமன், சௌபாக்கியா நகர், மதுரை
ஆகிய இருவருக்கு முதல் பரிசும்.
பிருந்தா இரமணி – மதுரை, மாலதி நாராயணன் – சென்னை, முத்து சசிரேகா – திருநெல்வேலி ஆகிய மூவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
கலந்துகொண்ட அனைவரையும் நன்றி கூறி வணங்குகிறோம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து குறிப்புகள் மற்றும் கட்டுரைகளை அனுப்பலாம்.
கோலப்போட்டி கலந்துகொண்டோரின் குறிப்புகளில் சில:
முருங்கை இலையை சாறு ளடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் பயத்தமாவு குழைத்து கண்களை சுற்றி தடவி ஊறிய பிறகு கழுவி வந்தால் கண்களை சுற்றி உள்ள கரு வளையம் போய் விடும்.
வாழைப்பூவை நறுக்கியவுடன் மோர்/ சுண்ணாம்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும். கத்தரிக்காய், வாழைக்காய் போன்றவைகளை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
தேங்காயைத் துருவும்போது அதன் உட்புறம் ஓடு வரை துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத் தூள் உணவுடன் உள்ளே சென்றால், குடல்களில் புண்களை உண்டாக்கி விடும்.