ஒற்றைத் தளிர் காதல் கொடியாக கவிதை

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக

என்னில் பூத்த ஒற்றைத் தளிரே
நீ மட்டுமே நிலைத்திருக்க .
உனக்காகக நான் வெறும்
ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே.

என்னை அலங்கரிக்கத் தோன்றிய
என் படைப்பிலக்கியமே.

என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே,
நீ மட்டுமே நிலைத்திருக்க .
என்னில் பூக்கத் துடித்த தளிர்கள் யாவும்
அங்கீகாரம் பெறாமல் இன்னும்
வெளியேற்றப்பட்ட எதிர் கட்சி உறுப்பினர்களாய்.

mahes kavithai kaathal kavithai

நீயாகவோ, தற்செயலாலோ,
என் காதலை அணுக்களாகப் பிளந்து
தூக்கி வீசினாலும் , அமீபாவின் சுழற்சியில்
அந்த காதல் விதைகள் சொல்லும்
என் விருட்சமாகி நின்றவள் நீ தான் என்று.

– நீரோடைமகேஷ்

You may also like...

6 Responses

  1. கவதை அருமை நண்பா..

  2. வாருங்கள் நண்பரே…
    இனி தொடருவோம்…
    கவிதையால்..

  3. திருவள்ளூர் வீரராகவர் சகல வைபவங்களுடன் அம்சமாக இருக்கிறார்…

    தங்கள் வருகையாலட பொருமையடைகிறேன்..
    தங்கள் வருகைக்கு நன்றி..

    பாலோவர் பட்டன் வேலை செய்யவில்லை பிறகு வந்து இணைந்துக் கொள்கிறேன்..

  4. Maheswaran.M says:

    கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.
    கூடிய விரைவில் திருவள்ளுவர் வருவேன் நண்பரே
    soundar.

  5. Anonymous says:

    Kavithai nalla irukku friend

    Thozhar : Pugazhendhi