ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்

பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child

அன்று முதலாளி மகள் பிறந்தநாள்,
பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என
எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன
முதலாளி மகளின் முகத்தை மட்டுமே பார்க்கும் தகுதியில் நான்.

முகம் காட்டி நான் உனக்கா என்ற கேள்விகள்
தாங்கி பாத்திரம் வழிய எட்டிப் பார்க்கும்
அதிரசங்கள்!

naavaranda sorkkam hell poem child

விலைபோகாத என் கௌரவம் தடுக்கும் நிலையில்..,,
அனால் ஊற்றாய் நாவை நனைக்கும் உமிழ் ஊற்று.
அங்கு ஊறுகிறது அதிரசம் சர்க்கரைப்பாகில்,
இங்கும் ஊறுகிறது உமிழ் நீரில் என் நாக்கு !!

வெறும் உமிழ் நீரால் வயிற்றை நிரப்பும் நாட்கள்
எத்தனை முறைதான் தொடர்ந்து கொண்டே இருக்கும் ?

நான் துவைத்துப் போட்ட முதலாளி மகள்
சீருடை கூட ஏளனம் செய்கிறது
“நான் கூட பள்ளி செல்கிறேன் என்று.”

எந்தன் நிலைபொழுது
தினமும் ஆற்றங்கரை கூலாங்கலாய் சுடும் காரணங்கள்.
வெறும் ஏக்கங்களுக்கு மட்டுமே சொந்தக்காரி நான்.

நாவரண்டு சொர்க்கத்தில் தவிக்கும் மனம்.

naavaranda sorkkam hell poem child

– நீரோடைமகேஷ்

You may also like...

7 Responses

  1. வறுமையின் கொடுமையிலும்
    தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாமல்
    தவிப்பதை
    அழகாகச் சொல்லும்
    மனம் கனக்கச் செய்யும் கவிதை…..

  2. sasi says:

    machi nallrukkuda

  3. sasi says:

    machi nallarukkuda

  4. sasi says:

    machi nallrukku da

  5. Anonymous says:

    nalla irukudu machi 🙂

    ==Ram

  6. //நான் துவைத்துப் போட்ட முதலாளி மகள்
    சீருடை கூட ஏளனம் செய்கிறது
    "நான் கூட பள்ளி செல்கிறேன் என்று."//

    என்னை விட அருமையா சொல்லியிருக்கீங்க நண்பா. கண்கலங்க வைக்குது உங்கள் வரிகள். நன்றி நண்பா.

  7. நண்பரே, தங்களின் தளம் மிக அருமையாக உள்ளது. நேரம் இருக்கும் போது படித்து கருத்திடுகிறேன். என் தளம் வந்து கருத்திட்டமிக்கு மிக்க நன்றி. தொடர்பில் இருங்கள். வாழ்த்துக்கள்.