நாலடியார் (28) ஈயாமை
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-28
பொருட்பால் – துன்பவியல்
28. ஈயாமை
செய்யுள் – 01
“எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் மற்றை
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்”
விளக்கம்: எவ்வளவாயினும் தம்மால் முடிந்த அளவில் சிறிய அறத்தை செய்தவர் மேன்மை அடைவர். அவ்வாறு இல்லாமல் ‘அறத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனக் கருதியிருப்பவர், பிறரது பழியாகிய துன்பக் கடலில் மூழ்கி அழிந்தவர் ஆவார்.
செய்யுள் – 02
“எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் மற்றை
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்”
விளக்கம்: எவ்வளவாயினும் தம்மால் முடிந்த அளவில் சிறிய அறத்தை செய்தவர் மேன்மை அடைவர். அவ்வாறு இல்லாமல் ‘அறத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ எனக் கருதியிருப்பவர், பிறரது பழியாகிய துன்பக் கடலில் மூழ்கி அழிந்தவர் ஆவார்.
செய்யுள் – 04
“கொடுத்தலும் துய்த்தலும் தேற்றீ இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலாள் துய்க்கப் படும்”
விளக்கம்: பிறருக்கு கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணம் உடையவன் பெற்ற செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்ணை பருவ காலத்தில் அயலானால் அனுபவிப்பதற்கு ஒப்பாகும்.
செய்யுள் – 05
“எறிநீர் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை”
விளக்கம்: மக்கள், மோதுகின்ற அலைகளை உடைய கடல் நீரை பயன் படுத்தாமல், அடிக்கடி வற்றிப் போகிற கிணற்று ஊற்றினை தேடிச் சென்று பருகுவர். ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்யாதவரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே மேலானது.
செய்யுள் – 06
“எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும் – தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது”
விளக்கம்: அறிவில்லாதவன் தான் சேர்த்த பொருளை, ‘ என்னுடையது என்னுடையது’ எனச் சொல்லிக் கொண்டிருப்பான். நானும் அதே பொருளை என்னுடையது என எண்ணிக் கொண்டிருப்பேன். அப்பொருள் இருவராலும் அனுபவிக்காமலும் பிறர்க்கு தரபடாமலும் வீணானதே.
செய்யுள் – 07
“வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார்ங- உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல”
விளக்கம்: ஒருவருக்கு ஒன்றையும் கொடாத செல்வந்தரை விட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்தும் தப்பித்தவர் ஆவார். எல்வாறெனில், வறுமையாளர் உலகோர் பழிச் சொல்லிலிருந்தும், செல்வத்தை காப்பதிலிருந்தும், பிறர் அறியாதவாறு புதைப்பதிலிருந்தும், துன்பத்திலிருந்தும் தப்பிப்பார்.
செய்யுள் – 08
“தனதாகத் தான்கெடான் தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர் தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து”
விளக்கம்: ஒரு பொருள் தனதாக இருக்கும் போது உலோபி பிறருக்கு கொடுக்க மாட்டான். அவன் இறந்த பின் அதை அனுபவிக்கும் பங்காளிகளும் பிறருக்கு கொடுக்கவில்லை எனில் அவன் உயிரோடு இருக்கும் காலத்தில் பிறருக்கு கொடுத்தால் அவன் பங்காளிகள் தடுக்கப் போவதில்லை. இறந்த பின் அவன் பங்காளிகள் பிறருக்கு கொடுப்பதாக இருந்தால் அவனால் தடுக்க இயலாது. அப்படியிருக்க அவர்கள் கொடாமைக்கு காரணம் யாதோ?
செய்யுள் – 09
“இரவலர் கன்றாக ஈவாரா வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை – விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்லைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்”
விளக்கம்: இரப்பவர் கன்றாக இருக்க, கொடுப்பவர் பசுவாக இருந்து கொடுப்பதே சிறந்த கொடையாகும். அவ்வாறில்லாமல் கோலால் அடிப்பதால் அது பால் தருவது போல, கொடையளிப்பது கீழ்மக்கள் இயல்பாகும்.
செய்யுள் – 10
“ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்”
விளக்கம்: பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளை காப்பதும் துன்பம்; காக்கப்படும் பொருள் சிறிது குறைந்தாலும் துன்பம்; முழுவதும் அழிந்தால் மிகவும் துன்பம்; ஆதலால் அந்த பொருள் இவ்வாறான துன்பத்திற்கெல்லாம் காரணம் ஆகும்.
– கோமகன்