நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்
தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam.
தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி மகிழ்வதில்தான் கவிஞனுக்கு பெருமிதம்…..
நெற்கதிர்கள் விளையும் நற்பெயர் பெற்ற நெல்லை சீமையின் கவிஞர் திரு. சக்தி வேலாயுதம் எனதருமை அண்ணின் நூலை பற்றிய சிறு விமர்சனமிங்கே …. உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்…
முன்னமே நம் அனைவருக்கும் தனது முதல் நூலால் இயல்பான அவர்களுக்கு மட்டும் என்ற கவிதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமான கவிஞர் திரு சக்தி வேலாயுதம் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு “ நீங்களும் கிடைப்பீர்கள்” அந்த கவிதை தொகுப்பில் இருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு வாழ்வின் நுட்பமான செய்தியை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் கவிஞர் அவர்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாச்சு என்பதற்கு பதிலாக அவளை ஒரு வழியாக கரையை ஏத்தியாச்சு என்று பெருமூச்சுடன் சொல்லும் பெற்றோர்கள் வாழும் தேசம் அல்லவா இது
“வாழ்க்கையை
கழிப்பதற்கும் வாழ்வதற்கும்
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
சிலர் வெல்கிறார்கள்
சிலர் தோற்கிறார்கள்…”
மனிதன் பல சமயங்களில் தனது ஈகோ காரணமாகவே பலரின் சாபத்திற்கு ஆளாகி விட்டுக் கொடுத்தல் என்பது இல்லாத காரணத்தினால் அந்த காரணங்களுக்காக என தம்பதிகள் விவாகரத்து பெறுகின்றனர்.
“பிரியமானவர்களை
மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காததும்
பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பதும்
வாழ்க்கையை அழகாக்கி விடுகிறது “
என்று வாழ்வியல் அழகை விட்டுக்கொடுக்கும் வாழ்க்கையை உரத்த சொல்லாமல் மென்மையாய் சொல்லுகிறார் .
ஆங்காங்கே சில காதல் கவிதைகளும் விரவிக்கிடக்கின்றன காதலும் வீரமும் தானே தமிழ் மரபோடு பின்னிக் கிடக்கின்றன
“ என்னை இறந்ததாக உணர்கிறேன்
உன்னோடு சின்ன சின்ன சண்டைகள்
இல்லாத தருணங்களில் எல்லாம்……
மனிதனாய் வாழ வேண்டும் என்பதை ,
“ நகல்கள் ஆயிரம் இருக்கலாம்
அசல் ஒன்றுதான்
அசலாய் வாழுங்கள்” – neengalum kidaipergal nool vimarsanam
என்று மனிதர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் .
இங்கே ஒரு சில துளிகளை மட்டும் உங்கள் மேல் தெளித்து உள்ளேன் மற்றவற்றை நீங்களே நுகர்ந்து களியுங்கள்….
பல வேளைகளில் அடுத்தவர்களிடம் நம்மை தேடுகிறோம்
” நிழல் தேடும் மரம்” போல
சில வேளைகளில் நம்மிடமே நம்மை தேடுகிறோம்
“இயல்பாக இருங்கள் “
“நீங்களும் கிடைப்பீர்கள்”….
அன்பு அண்ணன் சக்தி வேலாயுதம் அவர்களின் கவிதை பயணம் மேலும் சிறக்க, அன்பு தங்கையின் மனமார்ந்த.வாழ்த்துகள்….
படிப்பவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் இக்கவிதைநூல்
நல்லதோர் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை….
– கவி தேவிகா, தென்காசி.
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும் பெற்றுத்தர முயல்கிறோம்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
புத்தக விமர்சனம் மிக அருமை! கவி தேவிகா அவர்கள் சொற்களைக் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது.
ரக்ஷா பந்தன் நாளில் அண்ணனுடைய புத்தக விமர்சனத்தை பதிவு செய்தமைக்கு நீரோடைக்கு என் மனமார்ந்த நன்றிகள்…
நேர்த்தியாக எழுதப்பட்ட விமர்சனம்..
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
கவி தேவிகாவின் விமர்சனம் அருமை…கவிதை வரிகளை மேற்கோள் காட்டியிருப்பது இன்னும் சிறப்பு..நூலாசிரியர் மேலும் பல நூல்கள் எழுத வாழ்த்துகள்.
விமர்சனத்தைப் படிக்கும் போதே புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. அருமையான விமர்சனம். பாராட்டுக்கள்
தேவிகா அவர்கள் மிக அழகாக விமர்சனம் செய்துள்ளார் நம் மனதை வெளிப்படுத்தியுள்ளார்