நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை
ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள், (மேலும் சிலர்) வழங்கிய திறனாய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodaippen kavithai thiranaivu
நீரோடை மகேஷ் எழுதிய கவிதை புத்தகத்தின் என் பார்வை…!
அவர் தன் கவிதையை ஒவ்வொரு பக்கமாக செதுக்கியிருக்கிறார் இக்கவிதை நூலில்
தன் தாய் தந்தையரை
போற்றி இருக்கிறார்..
இது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று …
பின்னர் நீரோடை பெண் என்ற தலைப்பில் தனது அனுபவங்களை அருமையாக தொகுத்திருக்கிறார்….
ஒரு கவிஞனின் படைப்புகளை மிக அழகாக கற்பனையோடு கலந்து இயற்கையோடு இணைந்து எழுதியிருக்கிறார்..
பொக்கிஷம் என்ற கவிதையில்
கற்பனையை காதலை கவிதையை சுமந்து விண்ணில் தவழும் அந்த நட்சத்திரங்கள் நிலைநிறுத்தப்பட்ட உயிர் ஓவியமாக ….
என்ற பல வரிகள் என்னை தொட்டது ..
அடுத்து நீரோடை நிலா என்ற தலைப்பில் அவருடைய கவிதை மிக அருமை .
மேலும் காதல் ஊற்று இது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று .
அவருடைய வாழ்விலும் காதல் விளையாடியிருக்கிறது… மரகதப் பெண்ணே மறக்க முடியாத ஒன்று,
எனக்காக அவள் வடித்த கவிதை தன்னுடைய இளமைக் காலத்தை அருமையாக கவிதைகளாய் பொறித்து இருக்கிறார்.
குறிப்பாக ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைந்துவிட்ட என்னை ஜென்மங்கள் தாண்டி தேடிக்கொண்டே …மன புலம்பல்கள் என்னை எழுத வைத்த கவி களாக …
என்ற வரிகள் மிகவும் அருமை
நான் வாழ்ந்த சொர்க்க பூமி
நான் வாழ்ந்த சொர்க்க பூமி ஒவ்வொரு கவிஞனும் தான் பிறந்த ஊரில் வாழ்கிறான் வீழ்கிறான் ஆனால் நீரோடை மகேஷ் தன் பூமியின் பெருமையை தன்னுடைய இளமைக்கால நினைவுகளை சிறப்பாக நான் எப்படி நினைக்கிறேனோ என் மனதில் என்ன உள்ளதோ அதையே அவர் எழுதியது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று… – neerodaippen kavithai thiranaivu
உறவுகளை மதிக்கின்ற பண்பும்
அடுத்ததாக கடைக்கண் மேற்பார்வையில் இது தன்னுடைய இளமைக் காலத்தில் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மேலும் பல கவிதைகள் அவருடைய கற்பனை திறனும் அவர் காதல் மீது கொண்டுள்ள அன்பும் இயற்கை மீது கொண்டுள்ள பற்றும் உறவுகள் நட்புகளை மதிக்கின்ற பண்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.,
இறுதியாக தன் இணையின் பற்றிய ஒரு கவிதை மிக அருமை மேலும் தன் அன்பு மகளை பற்றிய ஒரு நடப்பு கவிதை வந்து மிக மிக அருமை …
வாழ்த்துக்கள்..! நீரோடை மகேஷ் அவர்களே..! தொடர்ந்து தங்கள் கவிதை பயணத்தை தொடருங்கள்… தமிழுக்கு சேவை ஆற்றுங்கள்..
– கவிஞர் ஆ.சிவா, சேலம்
மிக அருமையான விமர்சனம். வாழ்த்துகள் நூலாசிரியர் மற்றும் விமர்சன ஆசிரியர் அவர்களுக்கும்
நன்று . ஆழ்ந்து அனுபவித்து எழுதிய கவிஞனுக்கு அதை ஆழமாய் படித்தறிந்த வாசகன் தரும் விமர்சனத்தை விட பெரும் பெருமை ஏதுமில்லை … வாழ்க கவி … வளர்க தமிழ் …
வாழ்த்துகள்..மேலும் நீங்கள்…சிகரம் நோக்கி நடைபோடுங்கள்…சகோ…
மிக அருமையான விமர்சனம்…எழுதிய
நூலாசிரியர் இளம் கவிக்கு மிகவும் ஊக்கம் தரும் வண்ணம் அமைந்துள்ளது …விமர்சன ஆசிரியருக்கும் நூலாசிரியருக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
அருமை. பாராட்டுகள்.