பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்கியமான தருணமும் கூட. இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். இவ் உடல் எடை பிரசவத்திற்குப் பின்னும் குறையாமல் அப்படியே இருந்தால் அது, அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டி மன அமைதியை குறைக்கும் . ஆகவே பிரசவத்திற்குப் பின்னர் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைப்பதற்கு சில இயற்கையான வழிகள் உள்ளது . அதை பின்பற்றினால் நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் – prasavathukku pin udal edai kuraiya.
ஆரோக்கியமான “டயட்”
பிரசவத்திற்கு பின் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அது, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பிரச்சினையை ஏற்படுத்தும். உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பது
தாய்ப்பால் கொடுத்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வொன்று சொல்கிறது. ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் உடல் எடையானது குறையும்.
உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப்பெறவேண்டும். ஏனெனில் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு சில நாட்கள் ஆகும். எனவே காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியல் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும்.
போதிய அளவு உறக்கம்
பிரசவத்திற்குப் பின்னர் உடல் எடையைக் குறைப்பதில் போதுமான உறக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது.எப்படியெனில் சரியான அளவில் உறக்கத்தை மேற்கொள்வதால், உடலானது “ரிலாக்ஸ்” அடைந்து, ஹார்மோன்கள் சீராக இருக்கும். அதிலும் இந்த செயலை குழந்தை உறங்கும் போது சரியாக பயன்படுத்தி கொள்வது நல்லது.
தண்ணீர் குடிப்பது
தாய்ப்பால் கொடுக்கும் போது, பெண்கள் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதோடு, பாலின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். மேலும் தண்ணீர் அதிகம் குடிப்பதால் வயிறு நிறைவடையும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி உடலை ஆரோக்கியமனதாக மாற்றிக்கொள்ளலாம்.