“துர்(ன்) முகி” தமிழ் புத்தாண்டு
“துர்(ன்) முகி” தமிழ் புத்தாண்டு tamil new year 2016 thunmugi
“துர்முகி ” என்ற பெயர் தாங்கி வருகிறதே , அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை . “துர்முகி ” என்று இருக்கிறதே, என்ற அச்சம் பலருக்கு இருக்கும். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது . “துர்முகி” புத்தாண்டின் பெயரில்தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை பார்போம் .
இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்கு துணையாய் இருந்து வழிகாட்ட இருப்பதால் ,ஸ்ரீஹயக்ரீவர் பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு “துர்முகி ” என்ற பெயர் உருவானது .