தவத்திரு மருத்துவர் ஏ.ஆர்.பழனியப்பன்
கடந்த கட்டுரையில் பதினெட்டு சித்தர்களை பற்றி பார்த்தோம், மக்களோடு மக்களாக இல்லற வாழ்வையும் துறவற வாழ்வையும் வாழ்வின் இரு பகுதிகளாக கொண்டு வாழ்ந்த மகன்கள் பலரை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் தானே. மகா ஈஸ்வரன் ஆகிய அவன் ஆசி பெற்ற அவனாசியில் (திருப்புக்கொளியூர்) வாழ்ந்த பழனியப்பன் அய்யா அவர்கள், மருத்துவராக, நல்ல குடும்ப தலைவராக, நல்ல தந்தையாக, குருவாக மக்கள் மனதில் வாழும் மகான் ஆவார் – Thavathiru Dr AR Pazhaniappan.
திருப்பூர் மாவட்டம் திருப்புக்கொழியூர் (அவிநாசி) இல் 20-02-1926 அன்று பிறந்தார். அடிப்படையில் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவரான இவர் பல தீராத நோய்களையும் தீர்த்து வைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 46 வது வயதில் தன் மனைவியின் அனுமதியோடு இல்லர வாழ்வை துறந்து, இல்லறத்திலேயே துறவற வாழ்க்கையை தொடங்கினார். தவத்திரு சித்திர முத்து அடிகளின் ஆஸ்தான சீடராக விளங்கியதோடு அவரிடமிருந்து பெற்ற ஞானத்தை மக்களுக்கு நன்மை செய்ய பநண்படுத்தினார்.
அவர் அருளிய வெண்பா,
கருவாகி உருவாகி அருவுருவம் தானாகி
திருவாகி தங்கித் திளைத்து குருவாகி
எப்போதும் அப்பன் எழில் பழனி மலை மீது
முப்பால் கடந்த முடிவு
அருவாய் உருவாய் அருவுருவம் தானாகி
திருவாகி எத்திசையுங் காணச் சுடரொளியாய்
ஜோதியாய் சுடராய் நிர்மல சொரூபனாகி
சொல்லொணாக் காலங்கடந்த கந்தப் பெருமாளே போற்றி போற்றி!
மும் மூலங்கொண்ட முருகன் முதன் அணுவில் கருவாகி உடலுயிருமாகி
மும் மூல கற்ப சாதனை முடிவும் பெற்று முழுமையாகி
மூவுலக்கிற்கும் முதல் வனாகி மதியமிர்த முண்டு அருவுருவமு தானாகி
முத்தொழிலுக்கும் வித்தகனாம் முழு முதற் கடவுளாமே.
அருளை நாடிய என் மன நிறைவின்றி சிதறுண்டு
ஆடி யலைந்து திசை தப்பிய பறவைபோல்
திரிந்துழன்ற மனமதை ஒரு நொடியில் தன்
திருக்கரத்தின் செகையால் நிலை நிறுத்திய என்
சிந்தையில் குடி கொண்ட தெய்வமே
சித்ர முத்தான குருவே போற்றி போற்றி
சித்தார்களும் தானும் உட் கொண்ட
– டாக்டர் ஏ ஆர் பழனியப்பன்
முத்தான கற்ப சாதனை தனை யான் புரிய
அத்தன் சற்குருவாம் சித்ரமுத்தன் எனக்கு
அருளிய காயகற்ப சாதனை அரிதினும் அரிதே.
நீடித்த ஆயுளை பெறும் வழிமுறை தெரிந்திருந்தும், தனது வாழ்நாளின் கடைசி பதினெட்டு ஆண்டுகள் ஒரு வேலை மட்டும் சிறிது சர்க்கரை பொங்கல் உடன் மூப்பு கலந்து உட்கொண்டு தான் குறித்து வைத்த நாளான 18-04-2009 அன்று அவிநாசியில் விண்ணுலகம் சேர்ந்தார் – Thavathiru Dr AR Pazhaniappan.
குரு பூஜை மற்றும் இலவச யோகா வகுப்புகள்:
அவர் வாழ்ந்த வரை அவர் பிறந்தநாளை குரு காணிக்கையாக குறைந்தது ஐநூறு பேருக்கு அன்னதானம் செய்து கடைபிடித்து வந்த அவரது மகன் டாக்டர் எ.ஆர்.பி லோகநாதன் அவர்கள், அவரது மறைவுக்கு பிறகு குரு பூஜையாக நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு அந்த குரு பூஜை விழா பத்தாம் ஆண்டு விழாவாக அவிநாசியில் (திருப்புக்கொளியூர்) உள்ள குலாலர் திருமண மண்டபத்தில் வரும் விகாரி சித்திரை 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (28-04-2019) காலை நடைபெற உள்ளது. குறிப்பாக கீழ்கண்ட மஹான்களின் வருகை மற்றும் சொற்பொழிவு கூடுதல் சிறப்பு,
தவத்திரு கயிலை மாமணி பேரூர் ஆதினம் – சுந்தரலிங்க மருதாசல அடிகளார்,
தவத்திரு சிரவை ஆதீனம் – குமரகுருபர சுவாமிகள் (கௌமாரமடாலயம்),
தவத்திரு காமாட்சிபுரி ஆதீனம் ஞான சாக்த – ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்,
தவத்திரு காமாட்சி தாச சுவாமிகள் – அருள்மிகு திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் அவிநாசி,மேலும் பல சான்றோர்கள் அருளுரையுடன் சிறப்பாக குரு பூஜை விழா நடைபெற உள்ளது.
மேலும் வரும் 21-04-2019 முதல் 27-04-2019 வரை இரவு 7 மணி முதல் 9 வரை இலவச யோகா வகுப்புகள் நடைபெறவுள்ளது. தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.