திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்????
சரி கதவை தாளிட்டு பின் படுத்துக் கொண்டே என் எண்ண ஓடையை ஓடவிட்டேன்.
the boundary of imagination
சில நிமிடங்களில் கதவின் கீழ் உள்ள சந்து வழியாக ஒரு கடப்பாரை உருண்டு வந்தது என்னைக் கடந்து கட்டில் அடிப்புறம் சென்றது ..
அந்த சத்தம் எதோ இரயில் பாலத்தின் அடியில் இருப்பது போல ஒரு உணர்வு தந்தது…
என்னால் எழுந்து பார்க்க முடியவில்லை யாரோ கட்டி போட்டது போல் ஒரு உணர்வு, எழுந்து பார்க்க முயற்சி செய்தும் முடியவில்லை.
இருட்டில் முகம் தெரியாத ஒரு உருவம் என் கழுத்தை நெரித்துக் கொள்ள வந்தது.

இது போன்ற நிகழ்வுகளில் சிலர் கதவோ அல்லது எழுந்து ஓடவோ செய்வர் .. நானும் கத்தினேன் அதற்கு முன் மனதில் ஒரு யோசனை வந்தது.கடப்பாறையை தானே உருட்டி விட்டான், பிறகு ஏன் என் கழுத்தை நெரிக்க வருகிறான்  என்று…..அதன் பிறகு தான் கத்தவே ஆரம்பித்தேன்…
திடீரென அவனைக்காணவில்லை …

இந்த அனுபவத்தை எழுதும்போதே, என் எழுதுகோல் மை  கூட பயத்தில் வெளிவராமல் கிறுக்கிக் கொண்டு இருந்தேன்.

டொக் டொக் !!!!
யாரோ கதவைத் தட்டுகிறார்கள், பயத்தில் விடுதி நண்பர்   ஒவ்வொருவரின்  பெயரை சொல்லியும் பதில் இல்லை ….
சிறு இடைவெளியில் நான் தான் என்ற பதில்…மட்டும்…
அப்போது தான் உணர்ந்தேன் கண்டது கனவாக இருக்கலாமோ…
கனவே தான். முடிவு செய்தேன்…

திறந்து பார்த்தல் புது முகம்… ஓஹ ஒருவேளை இவர்தான் அந்த ஆயுதத்தை உருட்டிவிட்டுருப்பாரோ என்ற பயம் வேறு மனதில்.
கட்டில் அடியில் அந்த ஆயுதம் இருப்பது போலவே ஒரு சந்தேகம்.

வந்தவர் எழுதுகோல் இருக்க நண்பரே என்றார்..நான் இந்த அனுபவங்களை எழுதிய காகிதத்தை பார்த்தவர்,  (பயத்தில் தானே எழுத்துகள் சரி இல்லையே )
இது சரிவராது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இதை கதையாக சொல்லவோ, கனவில் வந்ததை பகிர மட்டுமோ இந்த பதிவை இடவில்லை….
சரி என்னதான் சொல்ல வருகிறாய் என்ற கேள்விதானே? உங்களிடம்…
????????????????????????????
சொல்கிறேன்……….
நான் கண்ட கனவும் உண்மை, தூக்கம் களைந்து எழுதியதும் உண்மை…
அந்த இருட்டு அறையில் கனவில் இருக்கும் பொது (கடப்பாரை) ஆயுதம் உருண்டு வந்ததும்  கண்களை விழித்துக் கொண்டேன், ஆனால் கனவு தொடர்ந்தது , அந்த உருவம்  மட்டும் தெரிந்தது இருட்டில் முகம் தெரியவில்லை…
ஒரு நிமிடம் கவுண்டமணி அண்ணன் கூப்பிடுகிறார் :

 

கவுண்ட மணி : என்னதாண்ட சொல்ல வர்ற ????
சந்தானம் : அதனால எல்லாரும் தூங்கும் பொது light போட்டுட்டு தூங்குங்க சரியா ???
நன்றி சந்தானம் ………
சரி நான் விசயத்துக்கு வருகிறேன்.
கண்களை விழித்தும் நினைவு ஓட்டம் மட்டும் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது, என்ன விந்தையாக இருக்கிறதா ?
ஆம்
கிராமங்களில் சிலர், நான் குட்டி சாத்தானைப் பார்த்தேன் என்றெல்லாம் சொல்வார்கள், நானும் கேட்டு இருக்கிறேன் . குட்டிசாத்தானையோ அல்லது ஏதேனும் ஒரு பயமுறுத்தும் உருவத்தையோ மற்றவர் சொல்லக் கேட்டு அது இப்படி தான் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கும் பொது,,,,,,,
 இரவில் 2 வது ஆழ் மனதில் ஓடும் எண்ணமே கனவாக வரும் அது அவர்கள் கண்களை விழித்தலும் தொடரும்.
சிலர் விழித்துக் கொண்டே இருக்கும் போதே அதுபோன்ற அனுபவங்களும் ஏற்படும்,, அவர்கள் மனதில் நான் குட்டி சாத்தானை பார்த்தேன் என்று பதிந்து விடும்..
இது போன்ற நிகழ்வுகளை சிலர் சொல்லும்போது, அவர் நீங்கள் சொல்வதை கேட்பவராக இருந்தால்,
அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்.அவர்களும் இந்த உண்மையின் ஆழத்தை அறியட்டும்…
மகேஷ்…………………….
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் …..

You may also like...

2 Responses

  1. Chitra says:

    very interesting…..

  2. Maheswaran.M says:

    நன்றி தோழி சித்ரா அவர்களே.
    மனதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறேன்.. கூடிய சீக்கிரம் சில முக்கிய தகவல்களுடன் சந்திக்கிறேன்