வார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10
சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal may 17 – may 23.
மேஷம் (Aries):
செவ்வாய் பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். நிலம் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும். குடும்பத்தின் தேவை பூர்த்தி செய்யப்படும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும். கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும். நவக்கிரக வழிபாடு செய்யவும்.
ரிஷபம் (Taurus):
சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் இனிதே அமையும். குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம் கவனம் தேவை. பணியாளர்கள் கூடுதல் பணி செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் லாப நஷ்டம் இன்றி இயங்கும். கலைஞர்கள் தேவையை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.
மிதுனம் (GEMINI):
சுக்கிரபகவான் நன்மையே செய்வார். கணவன் மனைவி உறவு மேம்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் சிறு இழப்பை சந்திக்க நேரிடும். விவசாயத்தில் கால்நடை மூலம் ஆதாயம் கிடைக்கும். தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்யவும்.
கடகம் (Cancer):
சூரியபகவான் அனைத்து நன்மைகளையும் செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரலாம். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது . பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படும். தொழில் வியாபாரம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர்கள் இடையூறுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
சிம்மம் (LEO):
சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வாரத்தின் முதல் பாதி எந்த புதிய செயலையும் செய்யவேண்டாம். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வாரத்தின் பின்பகுதி வெற்றியை கொடுக்கும். பணியாளர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் நல்ல பாதையில் செல்வார்கள். விவசாயம் செல்வாக்கை கொடுக்கும். சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி (Virgo):
புதன் பகவான் பல நன்மைகளை செய்வார்.. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்படுவார்கள். வியாபாரம் போட்டியாளர்கள் மத்தியில் நிதானம் தேவை. கலைஞர்கள் அமைதி காக்கவும். மாணவர்கள் சிறப்படைவார்கள். விவசாயம் கூட்டாளிகள் மத்தியில் கவனமாக இருக்கவும். குலதெய்வ வழிபாடு செய்யவும்.
துலாம் (Libra):
சுக்கிர பகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்வார்கள். வியாபாரம் லாபம் நஷ்டம் இருக்கலாம் . கலைஞர்கள் எப்படியாவது வாய்ப்பை பெறுவார்கள். மாணவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். விவசாயம் நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.
விருச்சிகம் (Scorpio):
புதன் பகவான் நன்மையே செய்வார், எதிர்பார்த்தது நிறைவேறும், உடல் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம் மந்தமாக இருக்கும். கலைஞர்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் சுமாரான பலனையே எதிர்பார்க்கலாம். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.
தனுசு (Sagittarius):
பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இல்லாததால் நிதானமாகவும், கவனமாகவும் செயல்படவும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது. பணியாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வியாபாரம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை, கலைஞர்கள் சிறப்படைவார்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி காண்பார்கள். விவசாயம் லாபம் ஈட்டித்தரும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.
மகரம் (Capricorn):`
புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியடையும், பணவரவு சுமாராகவே இருக்கும். உறவினர் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் சுமாரான லாபத்தை எதிர்பார்க்கலாம், கலைஞர்கள் சுமாரான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் லாபம் ஈட்டித்தரும். சிவ வழிபாடு செய்யவும்.
கும்பம் (Aquarius):
சனி பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும், பழைய பாக்கிகள் வசூலாகும், வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் செல்வாக்கு பெறுவார்கள். தொழில் வியாபாரம் இனிதே நடக்கும். கலைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயம் சொத்து பிரச்சனை நீங்கும். பெருமாள் வழிபாடு செய்யவும்.
மீனம் (Pisces):
குரு பகவான் நன்மை செய்வார் . பணவரவு நன்றாக இருக்கும், உடல் ஆரோக்கியமாக காணப்படும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் அமையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரம் இனிதே நடக்கும். கலைஞர்கள் அமைதி காக்க வேண்டும். மாணவர்கள் திறமையாக செயல் படுவார்கள். விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் கவனம் தேவை. நவகிரக வழிபாடு தேவை – rasi palangal may 17 – may 23.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)