வாசகர் கடிதம் – மகா பெரியவருடன் ஒரு அனுபவம்

வணக்கம் ரங்கராஜன் சென்னை அம்பத்தூரில் இருந்து, எனக்கு வயது 64. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் 1971-1975 வரை படித்த காலத்தில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று தேனம்பாக்கம் சென்று மகாப் பெரியவர் அவர்களை தரிசனம் செய்து விட்டு வருவேன் – vasagar kaditham.

vasagar kaditham

1977 அக்டோபர் மாதம் எங்களின் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள காஞ்சிபுரம் சென்று சமயத்தில் நான் மட்டும் தனியாக தேனம்பாக்கம் சென்று மகாப் பெரியவர் அவர்களை தரிசனம் செய்ய சென்ற போது மகா ஸ்வாமிகள் என்னைப் பற்றி விசாரித்தார். பிறகு மகா ஸ்வாமிகள் சங்கர மடத்திற்கு ஒரு மூட்டை அரிசி வாங்கி தரச் சொன்னார். நான் அந்த சமயத்தில் சரியான வேலை கிடைக்காமல் இருந்தேன். ஸ்வாமிகள் என்னிடம் சென்னைக்கு சென்றதும்
தொல்லியல் துறையில் அதிகாரியாக பணி புரிந்து கொண்டு இருந்த திரு.நாகசாமி அவர்களைப் போய் பார்க்க சொன்னார்.

1008 முறை காயத்ரி ஜெபம்

நானும் சென்னைக்கு வந்த பிறகு திரு.நாகசாமி அவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் அதன் பின்னர் அவரைப் போய் பார்க்க இயலவில்லை. பிறகு வேலைக்குச் சென்று விட்டேன். 1983 டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலையில் பணிபுரிந்த சமயத்தில் மாதம் ஒரு முறை காஞ்சீபுரத்தில் உள்ள மகாப் பெரியவர் அவர்களை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. 1988 ல் ஒரு முறை திருவண்ணாமலையில் இருந்து காஞ்சீபுரம் சென்ற போது ஏதோ ஒரு காரணத்தால் மகா ஸ்வாமிகளை தரிசனம் செய்ய போக இயலவில்லை.

திருவண்ணாமலைக்கு வந்தும் மறுநாள் இரவு என் கனவில் ஸ்வாமிகள் வந்தார். உடனே அந்த வார சனிக் கிழமை காலை நேராக சங்கர மடம் சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்த போது ஸ்வாமி கள் சந்நியாசி கள் கனவில் வரக்கூடாது எனவே நீயும் உன் தந்தையும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 1008 முறை காயத்ரி ஜெபம் செய்ய சொல்லி அனுப்பினார் – vasagar kaditham

அன்று முதல் இன்று வரை நானும் என் தந்தையும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் 1008 காயத்ரி ஜெபம் செய்து வருகிறோம். மகாஸ்வாமிகள் கேட்ட ஒரு மூட்டை அரிசி 1999 பிப்ரவரி மாதம் வாங்கி கொடுத்தேன்.

ரங்கராஜன் சென்னை அம்பத்தூரில் இருந்து..

Sharing is caring!

You may also like...

10 Responses

 1. R. Brinda says:

  மஹா பெரியவா கருணையே கருணை!!
  ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!

 2. உஷாமுத்துராமன் says:

  ரங்கராஜன் அவர்களின் அனுபவம் மெய் சிலிர்ப்பூட்டும் அனுபவம். படித்தவடன் மனநிறைவை கொடுத்தது. பாராட்டுக்கள்.

 3. ராஜகுமாரி போருர் says:

  காயத்ரி மந்திரம் பெருமை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி

 4. தி.வள்ளி says:

  மகா பெரியவாவுடனான அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.. குருவருள் கிடைக்க திருவருள் தேவை..

 5. மாலதி நாராயணன் says:

  மகா பெரியவா அனுபவம் மிகவும் அருமை பெரியவா அனுபவம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

 6. N.கோமதி says:

  ரங்க ராஜனின் அனுபவம், நிறைவைத் தருகிறது.

 7. Nithyalakshmi says:

  அருமை

 8. பிரபு சங்கர் says:

  மஹா ஸ்வாமிகளின் தரிசனமே பெரும் பாக்கியம். அவர் காயத்ரி ஜபம் இயற்றுமாறு அறிவுரை பகன்றதும் பெரும் பேறு. மகாப் பெரியவரின் அருளாசிப்படி நீங்களும், தங்கள் தந்தையாரும் ஞாயிறு தோறும் காயத்ரி ஜபம் இயற்றுவது இந்த அகிலத்துக்கே பெரும் புண்ணியம்.

 9. Gs says:

  Sahasra Gayathri will ensure freedom from all ills and worries.

 10. Boomadevi says:

  பெரும் பாக்கியசாலி பக்தர் ரங்கராஜன் ஸார்.கனவிலும் நிஜத்திலும் பெரியவாவைக் கண்டது மிகக் கொடுப்பிணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares