யாருக்கு வேண்டும் அந்த மாயக் கண்ணாடி காதல்?
எது காதல் ? எந்த பருவத்தில், எந்த சூழ்நிலையில் வருவது காதல் என்பதை உணர்ந்து, நெஞ்சம் பொழிந்த பரவச மழை தான் இந்த கவிதை. yaarukku vendum maya kannaadi kaadhal
கொஞ்சம் பொறு நெஞ்சமே !
உன் நினைவுகளை என் மனம் சுத்திகரித்துக்
கொண்டிருக்கிறது, உன் நினைவுகளை
மட்டும் எடுத்துச் செல்.
தினமும் உனைத் தேடும் வேளையில்
கண்களுக்குள் விபத்து!
உனைக் கண்ட வேளையில்
எனக்குள் விபத்து !.
விபத்துகள் ஆயிரம் கடந்தாலும்
உடல் எனதே (எனக்கே),
உயிரும் எனதே (எனக்கே).
கற்பனைக் காட்சிகளுக்கு எதற்கு
கோட்டை கட்டி காதல் என்ற பெயரில் வாழ்ந்து
நான் மடிய வேண்டும்.
கைக் கவசம் போட்டுக் கொண்ட சிறுத்தை போல
காதல் கவசம் போட்டுக் கொண்டு என் விநாடிகளை
ஏன் தின்று தீர்க்க வேண்டும்.
அலை வரும் முன் உன் பெயரை எழுதி வைத்தேன்
என் மொழியில் இருந்து உன்னை நீக்க.
ஏதோ ஒரு காரணிக்காக என் கண்கள் நனையும் முன்
உன் பிம்பம் பதித்தேன்.
உன் காட்ச்சிப்பிழைகளை என் கண்களில்
இருந்து நீக்கிவிட.
உன் மேல் கொண்ட காதல் என்ற மாயக்கண்ணாடி
உடைக்கப் பட்டு, எது வாழ்க்கை ?
எது நிஜக் கண்ணாடி !
என்பதை என் எண்ண ஏட்டில் பதித்துவிட்டேன்.
சிலர் படைத்த காதல் இலக்கணம் பொய் என்பதை சொல்ல முற்ப்பட்ட வரிகள். புறக்கவர்ச்சியால் வருவது காதல் இல்லை …. இருமணம் கொள்ளும் அகத்து உணரப்பட்ட உள்ளுணர்வே அது.
– நீரோடைமகேஷ்
யதார்த்த உண்மை அருமை கவிதை
தமிழ்மணம் முதல் வாக்கு
very nice and cute…
அருமையான கவிதை
ur lines are very nice and also very sensible…i addicted for ur lines…