தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!”

காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி!
அது… – ulaga thaai mozhi dhinam
நேற்று முடிந்த இறந்தகாலம்,
இன்று நடக்கும் நிகழ்காலம்,
நாளைய எதிர்காலம் என
முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி!
காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி!
அது…

நம்மை நல்வழி நடத்தி சென்று
செம்மையான பாதை காட்டும் ஆசான் !
காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி!
அது…

அவை தளர்ந்த பொழுதில்
நம் மனம் புதைத்தாலும்
ஆன்மாவை விழிக்க செய்யும் நம்பிக்கை!
காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி!
அது… – ulaga thaai mozhi dhinam

இயற்கை செயல்களையும்
செயற்கை நகல்களையும்
படம் பிடிக்க உதவும் விஞ்ஞானி!
காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி!
அது…

வாழ்க்கை என்ற மேடையில்
நடிக்க சொல்லிக் கொடுக்கும்
துடிப்புள்ள இயக்குனர்!
எப்பொழுதும் தாய் மொழியாம் தமிழ் மொழியில்
பேசுவோம்!வளமாகவாழ்வோம்!

– உஷாமுத்துராமன், திருநகர்


en veettu theivam amma kavithai

தமிழமுது

குழலும் மயங்கும் யாழும் கிறங்கும்
சங்கம் வளர்த்த தமிழோசையில்
உயிருக்கு ஒப்பாய் உயிரெழுத்து
தனித்து இயங்கா மெய்யெழுத்து
உடம்புடன் கலந்த உயிரே போல்
உருவான உயிர் மெய் பலவே
அப்பாவின் உச்சரிப்பில் வருமே வல்லினம்
அம்மாவின் மென்மையில் மெல்லினம்
வாழ்வில் உண்டெனக் காட்டும் இடையினம்
முக்கனிச் சுவையாய் மூவினம்
எழுத்துக்கள் கூட்டுச் சேர வார்த்தை
வார்த்தைகள் கோர்க்க வாக்கியம்
முத்தான இயல், இசை, நாடகம்
முத்தமிழ் மணக்கும் பெட்டகம்
பண்பாடு போதிக்கும் தொன்மை நூல்கள்
எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினென்கீழ் கணக்கு
அழியாக் காவியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள்
அழகு தமிழ் சூடிய மணிமகுடங்கள்
அமுதத் தமிழ் தரும் ஆனந்தம்
அவனியில் இல்லை வேறெங்கும்.. – ulaga thaai mozhi dhinam

– என்.கோமதி, நெல்லை

You may also like...

1 Response

  1. G. Poomani says:

    சிறந்த கவிதை !வாழ்த்துக்கள்