வார ராசிபலன் கார்த்திகை 21 – கார்த்திகை 27


கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க
இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-06 to dec-12.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. மனதில் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது, குடும்பத்தில் அமைதி நிலவும், பணவரவு நன்றாகவே அமையும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடலில் இருந்து வந்த பிணிகள் நீங்கும். எல்லா செயலிலும் நல்ல வெற்றியை அடைவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வரும். பணியாளர்கள் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் மத்தியில் பகைமை உணர்வு தென்படும். மாணவர்கள் நிதானமாக செயல்படவும். விவசாயத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நிகழும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயம் நன்கு செழிப்படையும்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். உறவினர் வருகையால் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கை சீராக தொடரும். உங்கள் தாயின்  உடல் நலம் பாதிக்கும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வெற்றியை குவிப்பார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயம் நன்கு செழிப்படையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு அமையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் நிகழும். உடல்நலத்தில் நன்கு அக்கறை கொள்ளவும். பிறர் உதவியை கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்தில் லாபத்திற்கு பஞ்சமிருக்காது.  கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் முழுமூச்சுடன் செயல்படுவார்கள். விவசாயத்தில் சிரமம் ஏற்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சிறப்பாக அமையும். சொந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சேமிப்பு உயரும் பணியாளர்கள் நேர்கோட்டில் செல்வார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும்.  கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயிகள் காய்கறி உற்பத்தி அதிகரிக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு தேவையை பூர்த்தி செய்யும். உறவினர் வருகை நன்மையாகவே இருக்கும். அண்டை வீட்டார்கள் மத்தியில் நல்லுறவு நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணியாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். வியாபாரம் காய்கறி சம்பந்தமான வியாபாரம் அதிக லாபம் கிடைக்கும். கலைஞர்கள் உச்சம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் பெறலாம்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்ப குழப்பங்கள் அகலும். பணவரவு நன்றாகவே இருக்கும். பிரயாணத்தின் போது கவனமாக இருக்கவும். சகோதர சகோதரிகள் ஆதரவு பெருகும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் தங்கம் வெள்ளி சம்பந்தப்பட்டவை அதிக லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டமே எதிர்கொள்வார்கள். மாணவர்கள் சமநிலையில் காணப்படுவார்கள். விவசாயிகள் புதிய வீடு வாங்க யோகம் உள்ளது.
பரிகாரம்: திங்கள் வெள்ளி கிழமைகளில் சிவ வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு போதிய அளவு எதிர்பார்க்கலாம். எதை செய்யும் போதும் நிதானமாக செயல்படவும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பணியில் நிம்மதி அடைவார்கள். வியாபாரத்தில்  லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியே அடைவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் வருமானம் உயரும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு போதிய அளவு அமையும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வெற்றி அடைவார்கள். மாணவர்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: அன்னதானம் செய்தல் நல்ல பரிகாரமாக இருக்கும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். மனதில் நல்லா உறுதி தென்படும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்புள்ளது. வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பிறர் உதவியை நாடுவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். எப்போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வீட்டில் விசேஷம் ஒன்று நடைபெறும். பணியாளர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைஞர்கள் நஷ்டமே காண்பார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நன்கு உயர்வு அடையும்.பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal dec-06 to dec-12.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    மிக அருமையான பலன்களை வாரம்தோறும் அருளும் ஐயா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்…

  2. தி.வள்ளி says:

    ராசி பலன் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி