பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு
மருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil.
வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும்.
தாமதமாகும் மாதவிடாய்க்கு – முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
மலடே மலடாகி பெண்களுக்கு தாய்மை மலர கத்தரிக்காய் அதிகம் பயன்படுத்தலாம்.
வெண்பூசணி அதிகம் பயன்படுத்தினால் – சரியான கால இடைவெளி இன்றி வரும் மாதவிடாய் போக்கு தவிர்க்கப்படும். மேலும் இந்த காய் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது – pengal prachanai tamil.
தைராய்டு கோளாறுகள் – எலுமிச்சை சேர்த்துக் கொள்வதால் சரியாகிறது.
தனியா துவையல் – காய்ச்சலுக்கு ஏற்ற ஒன்று
தேவையான பொருட்கள்:
தனியா (மல்லி) 50 கிராம்
பூண்டு 3 பற்கள்
வற்றல் (மிளகாய்) 5
புளி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
மல்லி பூண்டு மிளகு வற்றல் புளி அனைத்தையும் மணம் வரும் வரை வறுக்கவும், பின்னர் அதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நல்ல மணமான காரசாரமான துவையல் தயார், காய்ச்சலுக்கு ஏற்றது.
சிறந்த மருத்துவ குறிப்புகள்
- வில்வ இலை சுக்கு மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் எந்த வித காய்ச்சலும் நீங்கும்.
- கொள்ளு முளைகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
- வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் எரிச்சல் நீங்கும்.
- வேப்ப விதையில் வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
- முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
- ஆண்மை தன்மை அதிகரிக்க திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- கோரைக்கிழங்கு பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புத்திக்கூர்மை உண்டாகும்.
- தினசரி 5 ஆவாரம்பூ மென்று வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- இரத்த அழுத்தம் சீராக ஒரு குவளை மோரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்து வரலாம்.
- இலந்தை பழம் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
- இலந்தை இலையை தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை அருந்தி வர உடல் எடை குறையும்.
- பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர பசி உண்டாகும்.
- அல்சர் நோய் குணமாக தினமும் ஒரு குவளை திராட்சை பழச்சாறு குடிக்கவும்.
- உடல் பலம் பெற தினமும் தொடர்ந்து 40 நாட்கள் அத்திப் பழம் சாப்பிடவும.
- முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் நோய் குணமாகும்.
- வரட்டு இருமல் குணமாக எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
- முலாம்பழம் அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீரகக் கோளாறுகள் தவிர்க்கப்படும் சுகமான எளிதில் தூக்கம் வர கசகசா, கற்கண்டு பயன்படுத்தி வரவும்.
- பித்தம் நீங்கி உடல் நலம் பெற, பணங்கிழங்கு சாப்பிடலாம்.
- வயிற்றுப்போக்கு, பேதி நீங்க கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
- பணங்கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வீரியம் தணியும்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
பயனுள்ள தகவல்கள்.. நன்றி…