கொரோனா எச்சரிக்கை – 3

கொரோனா கேள்வி

மழலை கவிஞர் நவீனா அவர்கள் எழுதிய கொரோனா விழிப்புணர்வு கவிதை – கொரோனா எச்சரிக்கை 3 ஆகா நீரோடையில்.. – corona kavidhai

corona kavidhai

கொரோனா கேள்வி

காக்கை குருவிகளுக்கெல்லாம்
சுதந்திரம்!
பின் ஏன்
வீட்டிலேயே நாமானோம்
இயந்திரம்?

corona kavidhaigal 3 korona kelvi

ஆய்வொன்றின் அறிக்கையை
சொன்னதொரு நாளேடு!
குறைந்தது காற்று மாசு
பெரும்பான்மை விழுக்காடு!
கேள்வியொன்று எழுந்தது
மனதோடு!
பின் ஏன், நாம்
திரிகின்றோம் மாஸ்க்கோடு?- corona kavidhai

என்றுமே கிடைக்காத
ஒரு நீண்ட ஓய்வு!
பின் ஏன்,
அதை அனுபவிக்கமுடியாமல்
மனதில் ஒரு தொய்வு?

எண்ணிலடங்கா கேள்விகள்
ஓராயிரம்!
மனித குலத்துக்கோ
சேதாரம் !
என்று கிடைக்குமோ
வாழ்வாதாரம் ?
காலம் சொல்லும் விடையே
ஆதாரம்.

corona kavidhai

– நவீனா பரமகுரு, 7ம் வகுப்பு, வல்லபா வித்யாலயா, மதுரை.


You may also like...

4 Responses

  1. தமிழ் மொழி says:

    அருமை

  2. SANGEETHA says:

    மழலை கவிஞர் நவீனா அவர்களுக்கு,

    ஆகா!!!
    கன்னித்தமிழ் இன்று தலை வணங்குதம்மா உன் மழலை கவி கண்டு
    உள்ளமெல்லாம் உவகை கொள்ளுதம்மா உன் அழகு தமிழ் நயம் நின்று. வெண்முகிலே, வெள்ளிச்சரமே, வெள்ளமெனக் கவி பாடி, விரும்பிய வாழ்வு கொண்டு இன்ப தமிழோடு இசைந்து வெகுநாள் வாழ இறை வேண்டி வாழ்த்துதம்மா என் இதயம்

  3. ஜோதிடர் முத்துசாமி says:

    உன் பிஞ்சுக்கை விரல் பேசும் மொழிகள் சிறக்க தொடர்ந்து எழுதம்மா !

  4. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி
    தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்…