தேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு
கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu.
கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையை
திக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒரு
சேர தேன் கூடாய் சேர்த்திருக்கும் இராணித்தேனீயான தென்காசி
ராமலெட்சுமிக்கு முதலில் வாழ்த்துகள்
உன் எழுத்துகளில் சமூக நலன், இயற்கையை, யதார்த்தத்தை
உன்னிப்பாய் காண முடிகிறது.ஆங்காங்கே எதுகையும் மோனையும்
துள்ளிவிளையாடுகிறது. தமிழ்தாயில் தொடங்கி கைம்பெண்ணில்
முடிக்கும் உனது வரிகளில் அவ்வப்போது புரட்சியும் வெடிக்கிறது.
எல்லோரும் சொல்வதைக்கூட நீ அழுத்தமாய் சொல்லி இருப்பதால்
அவற்றின் ஆழம் புரிகிறது.
பேச்சொன்று செயலொன்று என்பதை படம்பிடித்துக்காட்டும்
உன் “முரண்பாடு” கவிதைக்கு என் முதல் கைத்தட்டல்.
பூ மொழியாய் “பூக்கள்”மொழி சொன்ன இந்த சின்னப்பூவிற்கு
சலாம் – then koodu nool mathipeedu.
உதயகாவியம் சொல்லிய உன்னத காவியத்திற்கு பாராட்டுக்கள்.
நாதியற்று ஓடும் நதிகளை இணைக்க உன் வரிகள் அற்புதம்.
பட்டுப்பாவாடை நியாபகங்கள்
மின்னல் பளிச்சீடு போல
மரங்கள் மழைகளும் உள்ளத்தின் குறியீடுகளாய்
பெண் குழந்தை வரிகள் புரட்சி வாசம்.
திருநங்கை பற்றிய வரிகள் அழகும் ஆழமும்.
தங்கையே..இது எனைக்கவர்ந்த தொகுப்பு என்பதை விட எல்லோரையும்
கவரும் தொகுப்பே.
உன் வீரிய வரிகளால் வீழ்ந்து கிடப்போரெல்லாம் எழுந்து காட்டட்டும்.
இன்னும் பல ஆற்றல் மிகு தொகுப்புகளை படித்துப்பார்க்க அவா உடன்
அன்பு அண்ணனாய் அடியேன்.
தொடரட்டும் உன் வீரிய எழுத்துப்பயணம். வாழ்த்துகள் கவி தேவிகா.
– ம.சக்திவேலாயுதம், நெருப்பு விழிகள்
புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும் பெற்றுத்தர முயல்கிறோம்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com
தேன் கூட்டில் கல் எறிந்தால் எட்டுத் திக்கும் பறக்கும் தேனீக்கள் போல் நூல் மதிப்பீட்டிலேயே எல்லோரையும் கவர்ந்து வந்து தேன் கூட்டில் உட்கார வைக்கும் அளவிற்கு அருமையான விமர்சனங்கள்.
தேன் கூடு கட்டிய கவி தேவிகாவிற்கு வாழ்த்துக்கள் .எண்ணங்களை எழுத்தில் கொண்டு வருவது எளிது. அதுவே கவிதையாய்.. எதுகை மோனையுடன் கொண்டுவருதல் மிகச் சிலருக்கே சாத்தியம். தாங்கள் அதை சாதித்து விட்டீர்கள் பாராட்டுக்கள்.கவிஞர் சக்தி வேலாயுதம் அவர்கள் திறனாய்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா!
தேன்கூடு தேனாய் படிப்பவர்களுக்கு இனிக்கும்
vimarsanam arumai, keep going
கவிதை வரிகளை வாசிக்க ஆர்வத்தை தூண்டும் பதிவு. வாழ்த்துக்கள் தேவிகா
வணக்கம் ரங்கராஜன் சென்னை அம்பத்தூரில் இருந்து.கவிஞர் திருமதி.தேவிகா என்கிற இராமலஷ்மி எழுதிய கவிதை 2017 ல் வெளியானது.தென்காசி நூலகர் மூலம் புத்தகம் வரப்பெற்று விமர்சனம் அனுப்பி விட்டேன்
வாழ்த்துகள் அக்கா💐💐💐👍👌👏
தேன் கூடு கவிதை நூலை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகளின் இனிமை மனதில் தேனாய் இனிக்கிறது……
தேன் கூட்டீன் அனைத்து கவிதையும் அருமை….
தேன் கூடு உலகெங்கும் அதன் இனிமையை பரப்பட்டும் வாழ்த்துகள்…..
இந்த கவிதை நூல் வெளியிட ஒத்துழைத்த அனைத்து நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
வாழ்த்துகள் அக்கா💐💐💐👍👌👏
தேன் கூடு கவிதை நூலை வாசிக்கும் பொழுது அந்த வார்த்தைகளின் இனிமை மனதில் தேனாய் இனிக்கிறது……
தேன் கூட்டின் அனைத்து கவிதையும் அருமை….
தேன் கூடு உலகெங்கும் அதன் இனிமையை பரப்பட்டும் வாழ்த்துகள்…..
இந்த கவிதை நூல் வெளியிட ஒத்துழைத்த அனைத்து நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏