அரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை
பத்தே நிமிடத்தில் வெறும் அரிசி மாவினால் செய்யக்கூடிய, குழந்தைகள் விரும்பும், மாலை சிற்றுண்டி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் பாப்போம் – arisi special chips.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீர் கொதிக்க ஆரமிக்கும் போது அரிசி மாவை சேர்த்து கிளற ஆரமிக்கவும். அது கெட்டி ஆகும்போது இறக்கி வைத்து, பூரி மாவு பக்குவத்தில் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும் – arisi special chips.
உருண்டைகளாக பிடித்து, பூரி – சப்பாத்தி கட்டையில் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மாலை சிற்றுண்டி தயார். அதனுடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குலுக்கி பரிமாறினால் சுவையான அரிசி ஸ்பெசல் சிப்ஸ் தயார்.
வலையொளி (YouTube) காணொளி
இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/TNQIaxSSwtk
எளிமையான, சுவையான ஸ்நாக்ஸ்
கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவை
எளிதான., சுவையான பலகாரம்..குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் மிகவும் விரும்புவர்.