வெள்ளைப் பூசணி பச்சடி
காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi.
தேவையான பொருட்கள்
பூசணி கீற்று – 1 (பெரியது)
தயிர் – 1 குவளை.
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பூசணியை தோல் எடுத்து தகடு போல் மெல்லியதாக நறுக்கவும்.
பின்னர் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.பின்னர் ஒரு கடாயில்ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் (நறுக்கியது) சேர்தது தாளித்து கெட்டித் தயிரில் கலக்கவும்.
பின்னர்.பூசணித் துண்டுகளையும் சேர்த்து உப்பு சேர்த்து கலக்கவும், கூடவே மல்லித்தழைகளைத் தூவவும்.
அருமையான பச்சடி தயார்.காரம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
நன்றி சகோதரி! பூசணி கூட்டு போரடிச்சு போச்சு..இது ஒரு மாறுதலாக இருக்கும்.
புதுசா வித்தியாசமா இருக்கே, நன்றி
Pachadi super
எளிதாக செய்யக்கூடிய ஒரு பச்சடி .மிகவும் அருமை.
கொஞ்சம் தேங்காய் நன்றாக அரைத்து அதோடு கலர்ந்து ஒரு கொதி வந்ததும் தயிர் சேர்த்து பின் தாளித்து பாருங்கள் நன்றாக இருக்கும். மல்லி இலை சேர்த்தால் நன்றாக இருக்காது.
பின்னூட்டம் அளித்து உற்சாகப் படுத்திய உஙகளுக்கு என் நன்றி.