கவிதை தொகுப்பு – 31
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31
வயல் வாழ்க்கை
பொழுதொட எழுந்து
பொழப்ப பாக்க போன மக்க
மடிமறைக்க சிறுதுணியும்
மண்வெட்டி துணையிருக்க
மண்பாக்க நடந்தவக
கண்டு நின்ன காட்சியென்ன?
வாடி நின்ன பயிரை – கண்
கண்டதுவும் சொன்னதென்ன
கண்கலங்க நேரமில்ல
வாங்கி வந்த வரமுமில்ல
விதை தேடி விதச்சதெல்லாம்
பாழாகி போனதெங்கே?
கலை கட்டும் நிலங்களாடா – வய
காலிழந்து நிக்குதிங்கே
பொன்னி புரண்டு ஓடவில்ல
வானங் கருணை காட்டவில்ல
கடனகட்ட ஆளுமில்ல
காரிருளும் போகவில்ல
தை சிறக்க வழியுமில்ல
தைரியத்தை தரவுமில்ல
காலங்க கடந்து போயிடுச்சு
காங்க இங்க ஆளுமில்ல
போக போறன் மண்ணுக்குள்ள
போன மக்க போனவதா
போய் வரவும் போவதில்ல
எவன் செத்த எனக்கென்ன
ஏலனமாய் போனதெல்லாம்
விடைதெரியா வாழ்க்கையிலே
வினையாய் வந்து சேருமடா
போனதெல்லாம் போதுமடா-நீ
பொறுப்பேற்க வேண்டுமட
வயலருகே வாழ்க்கையெல்லாம்
வயனம் காண வேண்டுமடா – இனி
வயனம் காண வேண்டுமடா..
– ஸ்ரீராம் பழனிசாமி
நியதியின் மீறல்கள்
இரவும் பகலும்
இயல்பாய் இயங்குகிறோம்
எவ்வித மாற்றங்களுமின்றியே……
நிமிடங்களை பின்தொடரும்
நியாயமாய் விநாடிகள்
எந்திர சூத்திரமறிந்தே…..
உன் படைப்புகளனைத்துமே
கடமைகள் தவறவில்லையே!!!!!…
மானிடா!!!?????
உன்னதமான உன்னைத்தவிர…. – kavithai thoguppu 31
– கவி தேவிகா, தென்காசி
எதிர்பார்ப்பு
பரிசளித்த
பூவின் வாசங்களை…
இடைவெளியின்றி
நிரப்புகிறது காற்று…
மௌன தாழிட்டு
கடந்துபோன பின்னும்
வெற்று புன்னகை
மிச்சமிருக்கிறது ரணங்களாய்..
கடக்க முடியாத
கனமான நொடிகளை…
நினைவுகள்
நிரப்பி விடுகிறது
எதிர்பார்ப்பில்…
இயல்பை தொலைத்தும்
நிவர்த்தி செய்கிறேன்…
நம்பிக்கையின் வேர்களை
பற்றியபடியே…
– குடைக்குள் மழை சலீம்
எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கிறது
பரிசளித்த
பூவின் வாசங்களை…
இடைவெளியின்றி
நிரப்புகிறது காற்று…
மௌன தாழிட்டு
கடந்துபோன பின்னும்
வெற்று புன்னகை
மிச்சமிருக்கிறது ரணங்களாய்..
கடக்க முடியாத
கனமான நொடிகளை…
நினைவுகள்
நிரப்பி விடுகிறது
எதிர்பார்ப்பில்…
அருமை.. அருமை..😍😍 உணர்வுபூர்வமான வரிகள்..💐💐 அனைத்து கவிதைகளும் சிறப்பு.. வாழ்த்துகள் 💐💐
அனைத்து கவிதைகளும் அருமை ..கவிஞர்களுக்கு என் பாராட்டுகளும் …வாழ்த்துகளும்…
கவிதைகள் எல்லாம் யதார்த்த நிலையினை அப்படியே நம் கண் முன் வந்து காட்டுகிறது.
ஒவ்வொரு கவிதையும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று
அனைத்து கவிதைகளும் அருமை