கவிதை போட்டி 2022_03 | மற்றும் போட்டி 2022_02 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-03

kavithai potti

கவிதை போட்டி 2022-02 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
மு முருகேஸ்வரி
அபி

வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர் செந்தமிழ் அவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நடுவர் வாழ்த்துச் செய்தியும், வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

“கற்றுக் கொள்பவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் கற்றுக்கொண்டு அவர்களை கைதூக்கி விடுவதும் கல்விமான்களுக்கே உரிய அரிய பண்புகளாம்

அதை வாழும் காலத்தில் நீரைடைக்குழுமமும் அதைச்சார்ந்த உறவுகளும் வளமை படுத்துவதில் வளர்ச்சி காணுதில் மகிழ்ச்சி அடைகிறது மனித உள்ளங்கள்.

நமது நீரோடைக் குடும்பத்தின் இரண்டாம் ஆண்டு இரண்டாவது போட்டியில் நடுவர் பணிசெய்வதற்கு பணித்த முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நீரோடை மகேஸ்வரன் ஐயா, மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் மகிழ்வுடன் பணிவான நன்றிகளும்.

கவிபடைக்கும் கவிஞர்கள் வேற்றுமொழிச் சொற்கள் ஒற்றுப்பிழைகளை சரிபார்த்து கவிதை படைப்பின், கவிச்சுவையும் இனிமையும் கூடிடும் என்பதில் கவனத்தில் கொண்டு, வேற்றுமொழிச் சொற்கள் ஒற்றுப்பிழைகள் தவிர்த்தல் நலம்.”

முகப்புக் கவிதை..

வாழ்க நற்றமிழ் நாடு
வளர்க அதன் பொலிவும் புதுமையம்
ஓங்குக அதன் பொருளும் புகழும்
மலர்க அதன் மண்ணும் மனிதரும்

உயிரில் ஒலி எடுத்து
மெய்யில் சொற்கள் தொடுத்து
சுவையெனும் மிகுதியோடிணைத்து
கவிதை எனும் மாலை கோர்த்து
தமிழுக்கு சார்த்தும்
எழுத்தோவியர்களே வருக

அகப்பெட்டகம் திறந்து
அறிவுசார் ஒளிர
புதுக் கவிதை படைக்கும்
புதுமையின் புதல்வர்களே வருக

அறிவின் வளம் பெருக
அதன் தரம் உயர
நீரோடைக் குடும்பத்தில் நாமும் இணைந்தே
அறிவின்
வளமையை பெற்றிடுவோம்…

ஓய்ந்திடாத அலைகள் போல்
ஒவ்வொரு உள்ளமும்
ஓய்ந்துபோகும் வரை

ஓய்ந்திடாமல்
மலரும்
கவிதைகளைப் பாடலாம் வாருங்கள்…!! – செந்தமிழ்….

வெற்றிக்குரியதாக கீழ்க்கண்ட இரண்டு கவிதைகளைத் தேர்ந்தெடுக்க
மூன்று விடயங்கள்…
ஒன்று : தனித்த சொல்லாடல்கள்
இரண்டு : செப்பனிடப்பட்ட சொற்கோர்வைகள்
மூன்று : பல தரவாகப் பிரியும் பொருட்சுவையை சிறிய சொற்களில் அடைத்திருப்பது. என்ற விடயங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.



கவிதை போட்டி 2022_03 அறிவிப்பு

  • திருமணம்
  • எல்லாம் அவன் செயல்
  • மூன்றாம் உலகப்போர்
  • சந்திர தரிசனம்
  • அன்னை தெரசா
  • பாட்டியும் கேப்பை களியும்
  • பங்குனி உத்திரம்
  • வேப்பம்பூ
  • கோடைக் காலம்
  • மாம்பழம்
  • ஹோலிப்பண்டிகை
  • விரும்பிய தலைப்பு

தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-03. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

29 Responses

  1. மு.இளங்கோவன் says:

    திருமணம்
    ————-

    நெகிழிப் பந்தலின்
    கீழே

    போலி மகிழ்ச்சியை
    முகத்தில் பூசி

    பன்னீர் தெளித்து
    வணக்கம் வைக்கும்

    வாடகை
    வரவேற்பாளர்கள்

    சமூக இடைவெளியில்
    சுற்றங்கள்

    முகக்கவசங்களில்
    முகம் மறைத்து

    ஆசையாய் கைபற்றி
    அளவளாவவும் அச்சம்

    கலகலவென
    மண்டபத்தில்
    ஓடி ஆடிய பிள்ளைகள் எங்கே?

    தலைகுனிந்து
    அலைபேசியில்
    முகம் பதிக்கும்
    பிஞ்சுகள்தான்
    இங்கே

    பட்டுடுத்தி
    கொட்டமடிக்கும்
    இளஞ்சிட்டுகள்
    எங்கே?

    பட்டுடுத்திய மொட்டுகளை
    வட்டமிடும் வண்டுகளாய் விடலைகள் எங்கே?

    வட்டமடித்தமர்ந்து
    பூக்கட்டும்
    பூவையர்கள் எங்கே?

    திருவிழாக்கோலமாய்
    இருந்த திருமண
    மண்டபங்கள்

    ஒரு ஆளும்
    முகம் கொடுத்துப்
    பேசா மெளன ஊர்வலம்
    போல

    சில மணி நேரமென்றாலும்
    முகம் மலர சிரித்து
    பேசி கடந்த நாம்

    முகம் மறைத்து சில மணித்துளிகளில்
    சீக்கிரம் கடக்கின்றோம்

    ஒரு வாரம் முதலே
    வீட்டை அடைக்கும்
    சுற்றங்களெல்லாம்

    தாலிகட்டும்
    நேரம் தலையை
    காட்டி சிட்டாய்
    பறக்கும்
    அவசர உலகமாகிப்போக

    வாசனை சுண்டி இழுக்கும்
    அப்பளம் வடை பாயாசமும்
    கலந்து படைக்கும் வாழை இலை
    அற்புத விருந்தெங்கே

    ஒற்றை உபயோகத்தட்டில்
    பல பண்டமிட்டு
    தந்தாலும்
    தொண்டைக்குள்
    இறங்க மறுக்குதிங்கே

    கல்யாண வீடென்றால்
    கலகலப்பை மட்டுமே கண்ட நாங்கள்

    கால மாற்றம்
    கண்டதினால்
    களையிழந்து
    முகம் வாடி
    சென்று
    திரும்புகிறோம்!,,

    இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
    அந்தியூர்

  2. Soraiyur Rangarajan says:

    மனைவி ‌. தாய்க்குப் பின் தாரம் என்பது சொல வடை அதை உண்மை என்று நிருபிப்பவள் தான் உண்மையான மனைவி

  3. Geetha says:

    உயிரற்றதாயினும்
    இரண்டாம் தாய்மடியாகிறது
    பெண்களின் கண்ணீரை
    ஏந்திக் கொள்வதால்…
    தலையணை

    இனி இப்படி
    செய்யக்கூடாது
    என்ற கட்டளையுடன்
    முத்தங்களை மட்டுமே
    தண்டனையாய் தருகிறது
    குழந்தை தன்
    பொம்மையின் தவறுகளுக்கு…
    சுடர் (புனை பெயர்)

  4. மைத்ரவர்ஷினி ல செ says:

    ஆள்த்துளை கிணறா ஆட்கொள்ளி கிணறா!!! (விரும்பிய தலைப்பு)

    “அய்யோ” என்றொரு சத்தம்
    ஒலி தூரத்திலும் அல்ல;
    பக்கத்திலும் அல்ல;
    நானே அவ்வொலிக்கு சொந்தக்காரன்
    என்றறிய வினாடிகள் சில தேவை ஆயிற்று…

    இமை மூடி திறப்பதிற்குள்
    ஏதோ பல நடந்திற்று;
    சரசரவென யாரோ என்னை
    கீழே இழுக்க;
    ஏதும் புரியாவண்ணம்
    எங்கோ பயணிக்கிறேன்;
    சிறிது நேரத்தில் ஏதேதோ சப்தங்கள்
    பல அடிக்கு மேலே.

    விபரம் எதும் புரியவில்லை;
    விழிக்கு எதும் புலப்படவில்லை;
    செவிக்கு எதும் கேட்கவில்லை…
    என் அம்மாவின் குரலில்
    என் பெயர் ஈனஸ்வரத்தில் கேட்க;
    “அம்மா” என்று நான் அலற
    பாவம் அவளோ அதை அறியவில்லை.

    இரைச்சல் கூடிற்று கயிறு போலொன்று
    என்னைத் தொட முயற்சி செய்திற்று.
    நேரம் கடக்க கடக்க
    மேனி முழுதும் ஈரமாகி கிடக்க
    கண்கள் சொருக
    மயக்கமா உறக்கமா தெரியவில்லை;
    அதுவரை சத்தம் இரைச்சல்
    யாவும் மறைந்து நிசப்தம் ஆயிற்று…

    விபரம் ஏதும் அறியா வயதில்
    விளையாடியது-என் குற்றமா?!
    என்ன விளையாடச் சொல்லி
    வயிற்றுப் பிழைப்புக்கு வயல் வேலைக்கு
    சென்ற-என் பெற்றோர் குற்றமா?!

    தவறு எதுவாயினும்
    ஒலியற்ற ஒளியற்ற
    அறையில் இப்போது நான்!!!

  5. தாரா says:

    தலைப்பு: திருமணம்

    ஆயிரம் காலத்து பயிர்

    வாழயாடி வாழையாக வளரும் பயிர்

    இரு மனங்கள் ஒன்றாக

    இரு குடும்பங்கள் சங்கமம்மாக

    இன்ப துன்பத்தில் இணையாக

    நீயே என் வாழ்க்கை துணையாக

    நானே உன்னில் பாதியாக

    அக்னி சாட்சியாக

    கைப்பிடிக்கும் திருநாள்

    நாம் வாழ்வின் மணநாள்

  6. நித்யாநரேஷ் says:

    விரும்பிய தலைப்பு: ஹைக்கூ
    கரையில் பாறைகள்//
    தகர்த்திடும் முயற்சியில் ஓயவில்லை//
    அலைகள்//

    செந்நிற பந்து//
    மெல்ல மூழ்கியது கடலில்//
    மாலை சூரியன்//

  7. செந்தமிழ்... says:

    தலைப்பு :  திருமணம்

    ஆயிரங் காலப் பயிரென்று
    ஆயிரங்காலமாக
    அனைவரும் நம்புவது

    நாகரீகம் பெருகப்பெருக
    அநாகரீகம்
    அழகான ஆடையணிந்து
    நாகரீகமாய் உருப்பெற்றது

    ஆயிரங் காலப்பயிர்கள்
    அற்ப ஆயுளில் முடிய
    முதன்மைக் காரணங்களில்
    அதுவே
    முதன்மையானது..

    உள்ளத்தில் வேண்டிய
    அழகு
    உருவத்தில் தேடிய பிறகு
    உறவெனும் பிணைப்பு
    உரு மாறிடத்தான் செய்தது

    செல்வம் என்பது
    குணமாக இருந்ததை
    பணமாக மாற்றியதும்
    மனம் ஒத்துப்போவதற்கு
    மனங்கள் ஒத்துப்போவதில்லை

    நெருங்கிய உறவுகள் முன்
    நெருப்பை சாட்சியாக்கி
    விண்மீன் பெயரால்
    மொழிந்த   உறுதிகள்

    நொறுங்கிப் போவதற்கு
    நெடுங்காலம் தேவையில்லை

    பெண்ணை மணக்க
    பொன்னை அளந்து
    தன்னை இழக்கும்
    தன்மையை மாற்றி

    விண்ணைப் போன்று
    விரிந்து பரந்த
    வாழ்வை இரசித்தால்
    வாழ்க்கை ருசிக்கும்…!!

    செந்தமிழ்… கோவை.

  8. M. Loganathan says:

    தனிமை

    உனக்கும் எனக்குமான கதைகள் ஏராளம் ……….

    தனிமைப்படுத்தப்பட்ட கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட கனவுகளும் அறுவடைக்காகவே காத்திருக்கிறது…….

    கிழவியிடம் வாங்கிய நவாப்பழம்,
    கடைவீதியில் தேய்ந்த ரப்பர் செருப்பு,
    பின்னொரு நாளில் பெய்த மழையில் விரல்களுக்கிடையே மின்னலலை பார்த்த கணங்கள் எல்லாம் நிந்தையில் பறக்கும் சிறகுகள்………..

    சதுரங்களில் போடப்பட்ட நாற்காலியில் நீ இல்லாமல் என் நினைவுகளில் ஓடும் கதைகள் காற்று தொடாத மழைத்துளிகள்………..

    நான் உன்னிடம் கேட்பதெல்லாம் வனத்தில் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி பூக்களில் இளைப்பாறும் நேரம் மட்டுமே………..

    நேற்று முடிவடைந்த இரவுகள் வரை நானும் என் நாற்காலியும் அந்நியப்பட்டே நகர்கிறோம்……………

  9. தாரா says:

    தலைப்பு: இயற்கை அன்னை

    அழகிய நிலப்பரப்பு, அதன் நான்கு

    திசைகளிலும் இருக்கும்

    சமுத்திரங்கள், பச்சை நிற போர்வை

    போல அமைந்திருக்கும் காடுகளும்,

    பூத்துக்குலுங்கும் மலர்களையும்,

    வெள்ளி நிறம் போன்ற நீர்

    வீழ்ச்சிகள், மான் போன்று துள்ளி

    குதித்து ஓடும் ஆறுகளையும்

    கொண்டுள்ளது.மனிதர்கள்,

    விலங்குகள், பறவைகள், பூச்சிகளில்

    ஆரம்பித்து புழுக்கள் வரை

    அனைத்தும் இந்த இயற்கையோடு

    ஒன்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

  10. கார்டிலியா மோகன்பாபு says:

    நீயாய் மாறிவிட்டேன்
    முழுவதுமாய் நான்!!
    உணர்கிறேன் உன்னை
    அணுஅணுவாய் இப்போது!!!

    எல்லோர்க்கும்
    எளிதாய் கிடைத்துவிட்ட
    பொக்கிஷம் நீ!!!

    தூக்கம் தொலைத்தேன்…
    உன் ஞாபகம்!!
    உண்ண மறந்தேன்…
    உன் ஞாபகம்!!
    பிடித்ததெல்லாம் புதைத்தேன்…
    உன் ஞாபகம்!!
    வலி மறைத்தேன்…
    உன் ஞாபகம்!!

    உணர்ந்தேன்…
    நீயாய் இருப்பது
    அவ்வளவு எளிதல்ல
    என்று!!!

    இருந்தும்
    உன்னை உணரும்
    ஒவ்வொருத் தருணமும்
    சுகம் எனக்கு!!!
    ….. அம்மாவாக மகள்…..

  11. பாவலர்.கமலாபார்த்தசாரதி says:

    பெளர்ணமி நிலவு

    தாரகைசேடிகள் புடைசூழ
    தளர்நடை பயில்கிறாள் நிலவரசி!
    வெண்பட்டு மேகங்களின்
    வெள்ளிஇரதம் ஏறி
    ஒளிமுகம் விகசிக்க
    உலா வருகிறாள் நிலவரசி!

    வானவீதியில் நீலப் பட்டுடுத்தி
    ஊர்வலம் போகிறாள் நிலவரசி!
    அழகுமுகம் கண்டு
    கடலலைகள் ஆர்ப்பரிக்க
    கவிஞர் மனங்களில்
    கவிதைப் பூப்பூக்க
    காண்போர் உள்ளங்களைக்
    கொள்ளை கொள்ள
    பவனி வருகிறாள்
    காவிய தேவதை நிலவரசி!

    இரவின் மடியில் நறுமணம் பரப்பும்
    மலர்களை மலர்விக்க
    பூமியைக் குளிர்விக்க
    தாயன்போடு கவின்நடை
    பழகுகிறாள் நிலவரசி!

  12. ஜா.பா.ரா says:

    சிவராத்திரி

    ஆட்டத்தில் ஜெயித்ததாய்
    நினைத்த சிவன்
    காலை இறக்கியபடியே
    காளியைத் தேடிக்கொண்டு
    நோட்டமிட்டான்

    தீயாய் காளி அமர்ந்திருந்தாள்
    மெல்ல நடந்த சிவன்
    கொஞ்சம் தீயை எடுத்து
    தன் நெற்றி நடுவில்
    அப்பிக்கொண்டான்
    தன் இரு கண்களையும்
    மூடியபடியே
    காளியை நோக்கி
    இரவு முழுதும்
    நின்ற சிவன்
    மெல்ல மெல்ல
    தன் கண்களைத்
    திறந்தான்

    அப்போது அனல்
    அம்பிகையாய்
    மாறியிருந்தது

  13. ராமகிருஷ்ணன் says:

    காதலர் தினம்

    எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
    தங்கும் இன்பம் தரணியாளுமென நினைத்தேனா
    பொங்கும் காதல் புனல் ஊற்றாய் மாறியதே
    எங்கும் நீ எதிலும் நீ என்ற உன்மத்த நிலையாக

    பார்க்கும் பொருள்களில் நீ பேசும் மொழியும் நீ
    ஈர்க்கும் உன் முகம் எதையும் பார்க்க விடுமா
    கோர்க்கும் மணிகளாய் உன் நினைவுகள் வழியே
    வார்க்கும் வனப்புச் சோலைகளில் திரிகிறேனே

    புரிதல் மனமே புதுப்பூவே பொன்னிற நிலவே
    அரிய இருப்பாய் அரவணைக்கும் ஆரணங்கே
    விரிந்த உன்னிதயம் என்னை உள்வாங்கியதே
    புரிந்த என்னிதயமும் அதில் கரைந்து போனதே

    எனக்குள் எப்படிப் புகுந்தாய் என்னன்பே
    தனக்குள் தானே பேசிடும் நிலையானதே
    மனதில் கரைந்து மாயமான மாயாவியே
    தினமும் என்னுள் உறைந்தே வாழ்கிறாயே

    மயக்கும் மந்திரம் கற்றதெங்கே கண்மணியே
    இயக்கும் இயக்கம் அறிந்த இளவரசியே
    தயக்கம் இல்லையடி தஞ்சை பொம்மையடி
    வியக்கும் இதயம் சார்ந்திருக்கு உன்னையடி

    உடல் எனதாயிருக்க உயிராய் ஆனாயே
    கடலென காலகாலங்கள் இதே நிலைதானோ
    சுடலைக்குப் போகும்வரை சுகிக்கும் காதலோ
    தடம் மாறா காதலடி காதலர் தின மகிழ்வடி

    கவிஞர் ராம்க்ருஷ்

  14. வே. கீர்த்தி says:

    விதூஷகன்:
    கைத்தட்டலும், சிரிப்பும்,
    கூச்சலும் அரங்கமெங்கும்,
    எதிரொலித்து ஆர்ப்பரிக்க,
    முகம் நிறைய,
    மை குழைத்துப் பூசி,
    பல வண்ணங்களை ஆடையாய்,
    தைய்த்துப் பின்னி,
    ஆடியும், பாடியும்,
    வித்தை காட்டிக் கொண்டிருந்தான் அந்த விதூஷகன்…
    உதட்டில் புறப்பட்ட சிரிப்பு,
    காது வரை வளைந்தோட,
    கண்கள் மட்டும் ஈரமாய்,
    வலியைக் கடத்த,
    எல்லோருக்கும் கேலிக்கையை தெரிந்தவன்,
    கோதாவில் சின்னஞ்சிறு சந்தோஷங்களின்,
    நாயகனாய் கோமாளி உடையில்,
    காது கிழியும் கரகோஷத்தின் மத்தியில்,
    சிங்கத்தை சீண்டி சிரித்துக் கொண்டிருந்தான்…

  15. தாரா says:

    தலைப்பு: கோடைக்காலம்

    கோடைகாலம் வெயிலின் தாக்கம்

    கதிரவனின் கோபம் மக்கள் மிக

    பாவம் நீர் எல்லாம் ஆவியாகும்

    நிலம் எல்லாம் வறண்டு போகும்

    வியர்வை துளிகள் வந்து போகும்

    உடல் சக்தி குறைந்து விடும்

    உஷ்ணம் தலைக்கு ஏறும்

    தாகம் எடுத்து விடும்

    வெள்ளரிக்காய் தர்பூசணி

    கோடையில் வரும்

    கோடைவந்தால் குழந்தைகள் மனம்

    குளிர்ந்து விடும்

    வெயிலில் விளையாடுவது

    பழகிவிடும்

    மழை வந்தால் வெப்பம் தணிந்து

    விடும்

  16. அ.செந்தில்குமார் says:

    இயற்கை மன்னிக்கும்…!
    *******************************

    தானியம் விளைந்த நிலங்களையெல்லாம்
    நன்றி மறந்து…
    தரிசு நிலங்களாக்கி விட்டோம்..!
    வழிந்து ஓடிய ஆறுகளையெல்லாம்
    மணலை சுரண்டி
    மயானங்களாக்கிவிட்டோம்…!
    சாலையோர விருட்சங்களையெல்லாம்
    சாலை விரிவாக்கமென..
    சாமர்த்தியமாக வீழ்த்திவிட்டோம்..!
    வாகனங்களை பெருகவிட்டு
    வளிமண்டலத்திற்கு..
    வஞ்சகம் செய்துவிட்டோம்..!
    மண்ணைக்கொட்டி மேடாக்கி..
    குளங்களையெல்லாம்..
    மனைப்பிரிவுகளாக்கிவிட்டோம்..!
    நன்றி மறந்து நாம் செய்த
    தவறுகளை இயற்கை மன்னிக்கும்
    என்ற நம்பிக்கையோடு- இனி
    புறப்படுவோம் பூமியை வளமாக்க…!

    **********************************************

  17. *அன்னை தெரசா*
    அன்பின் பண்பின் அகரம்
    சேவையின் பாசத்தின் சிகரம்

    இரண்டாம் உலகப் போரின் போது
    காயமடைந்த வீரர்களுக்கு உதவி செய்ய
    செஞ்சிலுவை சங்கம் மூலம்
    இந்தியா பயணம் வந்தார்

    கொல்கத்தாவில் திருச்சபை நிறுவினார்
    45 ஆண்டுகள் இறைபணி
    மக்களுக்கு உதவும் தொண்டு
    அன்பில் உருகும் மெழுகுவர்த்தி

    ஏழை அநாதைகளுக்கு இல்லம்
    பெண்கள் கல்வி வேலை முன்னேற்றம்
    நோய் தீர்க்கும் மருத்துவம்
    அன்பின் பணியாளர் இயக்கம்

    123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனம்
    1979ல் அமைதி நோபல் பரிசு
    1980ல் பாரத ரத்னா விருது
    உலகம் உள்ள வரை
    அன்பு அன்னை தெரேசா புகழ் பாடும்

    எஸ் வீ ராகவன் சென்னை

  18. *வண்ணங்கள் பண்டிகை ஹோலி*

    நல்லவை என்றால் வெள்ளை
    கெட்டவை என்றால் கருப்பு

    கடல் வானம் நீலம்
    வயல்வெளிகள்‌ பச்சை

    நிறத்தில் மனநிலை மாறும்
    பிரச்சினைகளை தீர்க்கும்

    எல்லாம் கலந்தது வாழ்க்கை
    வானவில்லின் சேர்க்கை

    வண்ணங்கள்
    சிறப்பானால்
    எண்ணங்கள் சிறப்பாகும்

    மனது வெள்ளையானால்
    வாழ்க்கை வளமாகும்

    உடைகளில் நிறம் அடையாளம்
    உழைப்பு நிறம் காக்கி

    வெள்ளை உடை நேர்மை
    காவி உடை தூய்மை

    மஞ்சள் தரும் மருத்துவம்
    மங்களத்தின் மகத்துவம்

    வெள்ளை சிரிப்பில்
    சிவந்த முகமும் மாறிவிடும்

    ஒவ்வொன்றும் ஒருவிதம்
    இணைந்தால்
    தனித்துவம்

    வண்ணம் கலந்து ஓவியம்
    நினைவில் நிற்கும் காவியம்

    ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்
    எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் ஆகட்டும்

    எஸ் வீ ராகவன் சென்னை

  19. *திருமணம்*
    தூரம் அதிகமில்லை
    மேடு பள்ளம் கவலையில்லை
    என்னருகில் நீயிருந்தால்.

    இளமையில் துள்ளாட்டம்
    முதுமையில் தள்ளாட்டம்
    தேவை துணை உன்னாட்டம்

    உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
    (ஒருத்தி)

    ஊன்றுகோல் தேவையில்லை
    கை சேர்த்து
    தோள் தரும் போது…

    பாலை சோலையாகும்
    காலை இனிமையாகும்
    மாலை தோள் சேரும்

    எஸ் வீ ராகவன் சென்னை

  20. *தலைப்பு தடுமாற்றமும் புது‌மாற்றமும்*

    கொரோனா ஊரடங்கு வந்தது
    உலகம் வீட்டில் அடங்கியது
    போக்குவரத்து கட்டுப்பாட்டு
    உணவு பொருட்கள் தட்டுப்பாடு

    பொருளாதார சிக்கல் தடுமாற்றம்
    வந்தது புது மாற்றங்கள்
    வங்கியும் கடைவீதி எல்லாம்
    இணையம் மூலம் வீட்டில் வரும்

    வேளாவேளைக்கு பராம்பரிய உணவு
    சித்த ஆயுர்வேத மருத்துவம்
    இறப்புகள் சேதாரம் ஏராளம்
    பழமை மீண்டும் வர வேண்டும்

    இருப்பினும் பள்ளி கல்லூரி இல்லை
    வீட்டில் ரொம்ப தொலலை
    மாற வேண்டும் இந்த நிலை
    வரவேண்டும் சகஜ நிலை

    எஸ் வீ ராகவன் சென்னை

  21. அபி says:

    அபி

    தலைப்பு : பாட்டியும் கேப்பை களியும்

    எங்கள் முகங்களில்
    அவள் தேடல்…

    எப்போதும்
    சிறு அசைவுடனே
    காணும் தலை;

    கிழிந்த காதில்
    அழகான பூச்சுக்கூடு;

    பொக்கை வாய்
    புன்னகை;

    பனந்தட்டில்
    அவள் நிறக் களியும்,
    கீரைக்குழம்பும்;

    எப்போதும் இடைவேளையில்,
    அவளைச் சுற்றி மொய்க்கும்
    நாங்கள்;

    அவள் தேடல்
    கிடைத்ததோ? என்னவோ? ….

    இப்போது,
    எங்கள் முகங்களில்
    அவள் தேடல்…

  22. மைத்ரவர்ஷினி ல செ says:

    மீண்டும் வா தலைவா… (விரும்பிய தலைப்பு)

    எழுந்திரு!!
    இன்று.. இந்த வாரம்..
    இந்த மாதம்.. இந்த வருடம்..
    செய்ய வேண்டிய செயல் பல உண்டு…
    எழுந்திரு!!
    இன்று செய்கிறேன் என்று நேற்று
    தள்ளிப்போட்ட வேலைகள் பல உண்டு…
    எழுந்திரு!!
    இந்த வருடம் வருவாய் என்று
    அம்மா காத்திருப்பாள் எழு;
    உன் வரவை ஆவலாக
    எதிர்பார்த்திருப்பார் அப்பா எழு;
    தன் மகனை காட்ட தவிப்பாய் உன் தங்கை
    காத்திருக்கிறாள் எழுந்திரு;
    ஏன் இப்படி திடீர் நித்திரை கொண்டாய்
    எவ்வாறு உன் உற்றாரை
    ஏமாற்ற முடியும் உன்னால்;

    எழு உறக்கம் போதும் எழு;
    விழித்தெழு வீரனே!!!
    உன் வாழ்வு முடியக் கூடாது;
    உனக்கான கடமையை ஆற்று;
    உன் காலம் முடியவில்லை…
    நாட்டுக்கான உன் வேலையை
    செவ்வனே செய்தாய்;
    உனக்கானவர்களை எப்பொழுது
    பார்ப்பாய் தீரனே…

    எழு, உன் கை தடத்திற்காக காத்திருக்கும்
    உன் துப்பாக்கிகாக எழு;
    உன்னிடம் ஒட்டிக்கொள்ள ஏங்கும்
    உன் கம்பீர உடைக்காக எழு;
    விழி, உன் சிம்ம குரல் ஆணைக்கு
    அடிபணியும் எங்களுக்காக விழி…

    நாட்டுக்காக நீ
    செய்தவை அளப்பரியது!!!
    உன் பெயரைக் கேட்டாலே
    அஞ்சி நடுங்கும் எதிரிப் படையினர்
    இனி எக்காளமிடுவரே!!!
    சிங்கத்தின் கர்ஜனையும் தோற்றுவிடும்
    உன் கோபக்கனலின் முன்னே!!!

    சக வீரனாய்
    சக தோழனாய்
    நற் தலைவனாய்
    தட்டிக்கொடுத்து தூக்கி சென்றாயே;

    உன் சயன சத்தம்
    இருதயத்தை பிளக்கின்றது!!!
    வா தலைவா!!!
    மீண்டு(ம்) வா…

  23. கபில் மு says:

    இரும்பு பெண்மணி

    அன்னைப் பெண்ணே!
    ஆயிராயிரம் பிரச்சனைத் தீர்க்கும் ஐ.நா தலைவியே !
    இங்கோ உன் பிள்ளையை வளர்க்க -உன் வாழ்வில்
    ஈட்டி ஏந்தியப் போராட்டம்
    உண்மையிலே நீ என் நிகழ் தெய்வம்
    ஊரார்க்கும் உதவும் பெண் தெய்வம்
    என்றுமே நீ ! ஒரு போராளி ஏன் என கேட்பவனோ கோமாளி
    ஐயமில்லை உன் வாழ்வு உனக்கன்றோ
    ஒருபுறமோ குடியடிமை, மறுபுறமோ சந்தேக பேதை
    ஓட்டம் ஒன்றே உன் வாழ்வில் அதுவும், உனக்கன்றோ
    ஔவை ஒரு பெண்ணே ! இது என் பெறுமைக்கோ உண்மை.

  24. அசோக்பிரபு says:

    வேப்பம்பூ

    அண்டத்தில் இல்லாத
    ஆயிரம் நட்சத்திரம்
    எங்கள் வீட்டு முற்றத்தில்
    இருக்கும் முதிர்ந்த
    வேப்பமரத்தின் அடியில்
    உதிர்ந்து கிடக்கின்றன

    இது வேப்பங்கிளை விரலில்
    வெக்கையில் பூத்த
    வெள்ளைக் கொப்புளங்கள்

    வேப்பமுத்துகளின்
    வெள்ளைச் சிப்பிகள்
    அசுரக்கசிப்பின்
    அமுத குப்பிகள்

    மகுடத்திற்கு மதிப்பளிக்க
    பாண்டியர்கள் வேண்டியே சூடிய
    மரம் தந்த மயிலிறகு

    அரும்பாகி மலர்ந்த போது
    சுரும்பொன்று இதழ் சுவைத்து
    கரும்பென்று தித்தித்த பூதான்
    இன்புற்று வேப்பம்பூ

  25. Sudharsan says:

    💝 இன்னிசை இறைவி ஸ்ரேயா கோஷல் 💝

    💝 தெய்வம் தந்த தெய்வீக குரலோ உன் வசம்

    நேரங்கள் கடந்தும் திகட்டாமல் கேட்கிறேன் உன் அமுத குரலை 💕

    மனதை மயக்கும் மாய குரலில் மதுரம் பாய்ந்ததோ என் மனதில் 💕

    இரண்டு அடியில் வடித்துவிட்டான் வள்ளுவன் திருக் ‘ குறளை ‘ 💕

    அடிகளுக்கு முடிவில்லை வர்ணிக்கும்பொழுது உன் திரு ‘ குரலை ‘ 💕

    குரலுக்கென எடுத்தாயோ இந்த பிறவி 💕

    இசை உலகில் உன்னைப் போல் இல்லை ஒரு இன்னிசை இறைவி 💝

    Sudharsan ✍🏻

  26. கவிப்பார்வை லதா says:

    எல்லைக் கோடுகளற்ற உலகு
    ************************************

    நீ யார்? எது உன் அடையாளம்?
    மதமா?சாதியா? இனமா? மொழியா?
    அடைந்த செல்வமா? பதில் சொல்!
    நாம் என்பதன் பொருளென்ன?
    ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?
    மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்
    கலவர நெடி வீசுவதேன்?
    தொழிலால் பிறந்த சாதி 
    வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?
    தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி
    எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?
    சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்
    சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?
    தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற
    தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற
    மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு
    அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு
    மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை
    மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற
    மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை
    வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்
    பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்
    ஆம்… மனிதா! நீ யாரென்பதை
    உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!

  27. கவிப்பார்வை லதா says:

    எல்லைக் கோடுகளற்ற உலகு
    ************************************

    நீ யார்? எது உன் அடையாளம்?
    மதமா?சாதியா? இனமா? மொழியா?
    அடைந்த செல்வமா? பதில் சொல்!
    நாம் என்பதன் பொருளென்ன?
    ஒரே நாடா? இல்லை ஒரே மனித சமுதாயமா?
    மனிதம் காக்கப் பிறந்த மதங்களில்
    கலவர நெடி வீசுவதேன்?
    தொழிலால் பிறந்த சாதி 
    வலுக்கட்டாயமாக தொடர்வதேன்?
    தொடர்பு கொள்ளப் பிறந்த மொழி
    எல்லைக் கோடுகளாகி தொடர்பறுப்பதேன்?
    சமூகப் பரிமாற்றத்தில் பிறந்த பொருளாதாரம்
    சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதேன்?
    தொழில்களனைத்தும் சம முக்கியத்துவம் பெற
    தொழிலாளர் பாதுகாப்பு உரிமைகள் பெற
    மறையுமே பொருளாதார ஏற்றத்தாழ்வு
    அதைத் தொடர்ந்து மறையுமே சாதிப் பாகுபாடு
    மனிதநேயம் களையுமே மத இனச்சண்டைகளை
    மொழிகளைக் கலைகளாகக் கற்றுத் தேற
    மொழிக்காதல் களையுமே வேற்றுமைகளை
    வேறுபாடுகளை மதித்தால் நீ இந்தியன்
    பாகுபாடுகளை மிதித்தால் நீ மனிதன்
    ஆம்… மனிதா! நீ யாரென்பதை
    உன்  பிறப்பல்ல செயல்கள் தீர்மானிக்கட்டும்!

  28. C.Rajapandi says:

    கீறல்கள்

    வானில் வீசிய வெற்று காகிதங்கள்
    வெகு நாட்கள் பயணித்தும் நனையாமல் திரும்பியது
    முதிராத நெற்பயிரின் இரத்தகீறல்களோடு

    இழப்பதற்கு ஒன்றுமில்லை
    மானம் மறைக்க துண்டுமில்லை
    விதி வந்தால் சாவேன்
    அதுவரையில் விதைப்பேன்.

    விற்பனை இல்லா என் கவிதைகள்,
    கரையான்கள் படிக்கின்றன,
    காய்ந்த தேகமாய் நான்.

  29. Venkatesan says:

    உணவு :

    நீ பொன்னாடை போர்த்தி கவர நினைத்ததும் அல்ல,
    பூமாலை போட்டு வாழ்த்த வந்ததும் அல்ல,
    நகைகலன் அணிந்து கவர்ந்ததும் அல்ல,
    பார்த்து, நகைத்து நகர்ந்ததும் அல்ல,
    இருந்தாலும் உன்மேனி தொட…
    ஏங்குகிறார்கள் ஏராளமானோர்….

    ஆஹா என்பார்கள்,
    அடடா என்பார்கள்,
    அய்யோ என்பார்கள், உனைப்பார்த்து..
    சீ சீ என்பார்கள்,
    வை வை என்பார்கள்,
    ம்ம் ம்ம் என மெல்வார்கள் …

    நீ இல்லை என்றாலோ , நான் இல்லை என புலம்புவார்கள்.
    நீ இருந்தாலோ, இதுவோ என உதறுவார்கள்..
    அம்மா என்றாலே உன் பேச்சு..
    நீ என்றே அம்மாவின் வழக்கம் ஆச்சு…
    உன் கவிதையில் கூட அம்மாவிற்கு இடமில்லை..
    ஆனால், அம்மா கவிதைக்கு… நீயோ ஒரு தலைப்பு..

    நீ பத்திரமாய் பிறப்பது பாத்திரத்தில்..
    அழகாய் வளர்வது அடுபடியில்..
    தத்தி தத்தி நடக்கும் நீ தட்டிற்கு உரியவள்
    நீ பேசும் மொழி குக்கரின் மொழி..
    நீயே எங்கள் உலக ராணி..
    நாங்கள் வருவோம் உனை தேடி..
    ஏனென்றால் நீயோ பிம்பமடி…
    நீ இல்லையென்றால்,
    என்னாவதடி ?