கவிதை போட்டி 2022_12

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-12

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2022_12 அறிவிப்பு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
திருநங்கை
மகாகவி
கார்த்திகை தீபம்
பகத் சிங்
தாங்கள் விரும்பும் தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-12. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

20 Responses

  1. லோகநாயகிசுரேஷ் says:

    துணிந்து எழுந்து பார்!
    எரிமலையும் சிறு பொடியே.!
    மலையைக் கொடையும் உளியாய் மாறிப்பார்!
    மலையும் உமக்கு தூசியே/

    ஓட ஓட விரட்டுவோரை!
    ஒரு நிமிடம் நின்று முறைத்துப்பார் !
    அன்றே நீ வல்லவனே.”
    இடிமேல் இடி வாங்கும் வானமாய் !
    தோல்வியைக் கண்டு
    தயங்காமல் முயன்று பார் !
    இடையூறு கொடுப்போரின் !
    தொடை நடுங்குமே /

    விழாமல் நடக்க முற்படாதே!
    விழுந்து எழுந்து பார்- உன்
    பாதத்தின் பலம் உமக்குப் புரியுமே.!
    கெஞ்சி இருக்காதே !
    உரியதை தட்டிக் கேட்டுப்பார் !
    எட்டி நிற்பான் எதிரியும்…..!!!

  2. லோகனாயகிசுரேஷ் says:

    பெண்ணியம் போற்றுவோம்…..

    மீட்ட மறந்த வீணை
    பாட மறந்த ராகம்
    பேச மறந்த இதழ்கள்
    பார்க்க மறந்த விழிகள்….!
    பஞ்சு பொதி மேகங்களோ
    பண் பாடவில்லை கொஞ்சிப்
    பேசும் பறவைகளோ இங்கு
    குரல் எழுப்பி இசை பரப்பவில்லை
    நிரோட்டம் கூட நின்றுவிட்டது பெண்களின்
    போராட்டமே மண்ணில் வென்றுவிட்டது….!
    தாலாட்டும் ஆகாயம்கூட தரைமீது
    தடுக்கி வீழ்ந்து விட்டது,
    தவறாக சில பெண்கள் எடுத்த முடிவுகளால்
    தடம் மாறிப்போன சுவடுகளால்
    விலை பேச வந்த கயவர்களால்
    விலை போகத்துணிந்தது பெண்மனம்.
    இருளான பாதை தான் தெரிகிறது
    பொருள் புரியாத வாழ்க்கை இது
    எல்லாமே எனக்குப்புரிகிறது
    வறுமையை உண்டு உண்டு வாழும் பெண்கள் எத்தனையோ…!
    தவறு செய்யாதவர் யாருமே இல்லைய்யா
    கை தூக்கி விடவும் யாருமில்லை
    சீ போவென்று சொல்லப்பலர் உண்டு
    கண்ணியம் பேசமட்டும் கோடிபேர் உண்டு….!
    பெண்ணியம் பேசும் பெரியோரே
    பெண்ணை பெண்ணாக வாழ விடுங்கள்…..!

  3. லோகநாயகிசுரேஷ் says:

    மகள் அதிகாரம்

    அறை அதிரும் அழுகையோடு
    அழகாய் தொடங்குகிறது
    இந்த அகிலத்தில் அவள் வரவு”

    “தத்தி நடக்கும் நடை அழகு
    சிரித்து பேசும் மொழி அழகு
    சின்ன சின்ன கண் உருட்டி
    சித்திரம் போல் இருக்கும் சின்ன தேவதை தான் எத்தனை அழகு”

    “அப்பாவின் அழகி
    அம்மாவின் மாமியார்
    அண்டை வீட்டாருக்கு அவள் ஒரு அதிசயம்”

    “கொலுசு ஒலி ஊரை கூட்ட
    பூமியில் அவள் பாதம் பதிய
    பறவையாய் அவள் பறக்க
    பார்ப்பவர்கள் தான் வியந்து நிற்க
    நாம் சொக்கிட தான் சிரிப்பு ஒன்று உதிர்த்திடுவாள்”
    “பட்டு பாவாடையில் அவள் பவனி வரும் போதெல்லாம்

    ஊர் கண் பட்டுவிடுமோ என்று பதறுகிறது
    பெற்றவள் நெஞ்சம்”
    “மழலையில் அவள் அனைவரையும்
    மிரட்டிடும் அழகில்
    மயங்கி நிற்கிறது என் நெஞ்சம்”…

  4. ஜோசி says:

    பிறப்பிடம் வேறு என்ற போதிலும்
    அலுவலகம் நம்மை ஒன்று சேர்த்தது!
    தமிழ்நாடு
    கேரளா
    கர்நாடகா
    மூன்று மாநிலமும் சங்கமித்த
    ஓர் இடம் ” நம் அலுவலகம் ”
    மொழி தெரியாது என்ற போதிலும்
    அரைகுறையாக கற்று கொண்டு
    அதை ஆணித்தரமாக பேசிய அவளின் மொழி ,
    அது புது மொழி !
    நம் மூவரின் மொழி

  5. ஜோசி says:

    கோபம் என்ற போதிலும் நேரிடையாக காட்டிய அவள்!
    காயப்பட்ட போது என்னை தேற்றிய அவள்!
    சிறிது இடைவெளி கிடைத்தாலும் என்னை கலாய்த்த அவள்!
    உயர்பணியாளர் என்ற போதும்
    கூட்டணி அமைத்து கேலி செய்த அந்த நாட்கள்!
    கேலியும் கிண்டலும் புன்னகையும் நிறைந்து இருந்த அந்த
    “புன்னகை காலம் ”
    எத்துனை பொன் கொடுத்தாலும் திரும்பாத அந்த
    “பொன்னான காலம் “

  6. பி.வி says:

    #இரண்டாம் திருமனம்

    அன்பு தாயே! கனவு கண்டேன்
    புரியா கனா கண்டன்..,

    மாமதுரையில் யானைமுகன் தன்முன்னிலையில் சொக்கன்திருமணம்.
    வேல்பிடித்தயிளையமகன் வாசலில்வாணவரை வரவேற்க கண்டேன்,
    வண்ணமயில் இறக்குவண்ணப் பட்டணிந்து
    மீனாட்சிவர
    நீலகண்டன் அன்னை திருகரம் பிடித்தானே!

    தவறில்லை மகளே
    நானும் கானா கண்டேன், மகிழ்ச்சி உலாகண்டேன்!

    பதிவலகில் பதிவாளர் தன்முன்னிலையில்
    உன்திருமணம்,
    இரண்டாம்தந்தை கரம்பிடித்து இளையமகன் நடந்துவரகக்கண்டேன்,
    வெள்ள புடைவைலிருந்து, வண்ணப் பட்டணித்துயிருந்தாய்.
    நெற்றிகுளிர குங்குமம் அவர் வைக்க கண்டேன்,

    காலம் தவிர்க்காமல் கரம்பிடி
    மகளே!

  7. திவ்யா says:

    தலைப்பு: என் நிலவே!!!
    கவிதை: நான் நிலவை ரசிப்பதை விட
    உன்னை நித்தமும் ரசிக்கிறேன்!!!
    வேலை இல்லை எனக்கு!!!
    என் அழகிய நிலாமுகனே!!!
    உன்னை ரசிப்பதை தவிர
    வேறு வேலை இல்லை எனக்கு!!!
    கல்லூரி நாட்களில் ஒளிராத நட்சத்திரம் போல
    ஒளிந்து கொண்டேன் உன்னை கண்டதும்!!!
    இரவில் தோன்றும் விண்மீன்களில்
    நிலவை தேடுவது போல
    இடைவேளை நேரத்தில் உன்னை தேடும் என் விழிகள்!!!
    இருளில் ஒளி பூக்கும் மின்மினிப் பூச்சிகளாய்
    உன்னை கண்டதும் முகம் மலர்கிறேன்!!!
    வளர்பிறையாய் வளர்ந்து வந்த நம் காதலில்
    யார் கண் பட்டதோ தெரியவில்லை!!!
    நிலவும் சுடும் என்று உன் கோபத்தில் அறிந்தேன்!!!
    தேய்பிறை நிலவாய் சில நாட்களாக என்னைவிட்டு
    கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கின்றாயே!!!
    எப்பொழுது மீண்டும் பௌர்ணமி ஆவாயோ!!!
    என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறேன் நான்!!!
    நிலவு தோன்றாத அமாவாசை இரவில் ( நீ என்னுடன் பேசாத நாட்களில்)
    நம் நினைவுகளை கொண்டு மனதை தேற்றுகிறேன்!!!

  8. ஜோதிலட்சுமி கூட்டேல் says:

    பொல்லாத சொப்பனம்…..

    சோகத்தில் மேகத்தில்
    மறைந்தாடும் நிலவே.
    கண்ட கனவெல்லாம் பலிக்காது
    கவலை விடு இக்கணமே.

    வாழைத்தோப்பு அழிந்ததோ
    வாசமல்லி வாடியதோ
    வஞ்சி முடி கலைந்ததோ
    வெள்ளைக் காகம் பறந்ததோ

    விரைவில் பூக்கும் பூவை எண்ணி
    பட்டாம்பூச்சிக்கேன் கவலை.
    இன்றைக்கு விரிந்த மலரின்
    செந்தேன் உன் கையிலே.

    வசந்தம் வாசல் தேடி வரும்
    வஞ்சிக்கொடியே தென்றல் தீண்டும்.
    வாஞ்சை எல்லாம் மலரும்.
    வருங்காலம் இனிக்கும்.

    நேற்றைய கசப்பால்
    நாளைய சோகத்தால்
    இன்றைய இனிப்பை
    இழந்து விடுவதோ….

    நாலை விடியும் என்று
    நம்பிக்கை இருக்கையில்
    நம்மால் முடியும் என்று
    நல்ல முயற்சி பாதையில் செல்லலாம் ‌…

  9. Unknown tamizhan says:

    பேருந்து பயணத்தில் ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்…..
    பயணம் தொடங்கியது, பேருந்து மட்டும் அல்ல, என் காதலும் தான்….
    சில்லென்று காற்று வருடியது என் உடலை மட்டும் அல்ல…. என் உள்ளதையும் தான்…..
    திரும்பி பார்த்தேன்! புத்தக பையை மட்டும் சுமக்காமல் பேரழகையும் சுமந்து கொண்டிருந்தாய்….
    சுமந்தது என்னோவோ நீதான்… ஆனால், வலிகள் மட்டும் சேர்ந்தது என் இதயத்தில்….
    அரை மணி நேரப் பயணத்தில் என் ஆழ்மனத்தில் இடம் பிடித்தவளே!
    உன் கருமுகில் கூந்தலில் என் மனம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றது….
    என்னவள் இல்லை என்று தெரிந்தும் உன்னை பார்க்க என் மனம் துடிக்கின்றது!
    இனிமையான இசை குயிலிசை என்பார்கள்…. அவர்களெல்லாம் உன் குரலை கேட்கவில்லையோ ஏனோ?
    அவர்களின் வரிசையில் நானும் நிற்கின்றேன் உன் குரல் அறியாத செவிடன் போல…..

  10. தாரா says:

    தலைப்பு: திருநங்கை

    பிறந்தாது குழந்தையாக

    வளர்ந்தது ஆணாக

    மாறியது பெண்ணாக

    கடவுளின் விளையாட்டு ஒரு புதிராக
    வாழ்க்கை ஒரு வலியாக

    வாழும் காலம் எல்லாம் தனியாக

    பெற்றோர்களின் வார்த்தை

    கடுமையாக

    எல்லோர் உடையா அன்பும்

    பொய்யாக

    கடவுளின் விளையாட்டு காரணமாக

    திருநங்கையாய் மாறினால் அழகாக

    அன்பு, பாசம், கருணை இதயத்தில்

    இருப்பதாக யாரும் நினைப்பது

    இல்லை உண்மையாக

    திருநங்கை என்பது கடவுளின்

    அம்சமாக

    ஆணும் பெண்ணும் சமமாக கடவுள்

    சொன்ன வார்த்தையாக

    உலகிற்கு உணர்த்தியாது

    அர்த்தனாரீஸ்வரர் அம்சமாக

    அகிலம் ஆளும் சிவன் சாட்சியாக

    அவர்களை நினைக்க வேண்டாம்

    வேறாக

    அவர்களும் வாழும் உலகின்

    மனிதர்ராக

    திருநங்கை என்பது திரு என்றால்

    மகாலட்சுமியை குறிக்கிறது

    நங்கை என்றால் அது மங்கை

    (பெண்)யை குறிக்கிறது பெருமை

    உணர்கிறாது.

  11. தாரா says:

    தலைப்பு: கார்த்திகை தீபம்

    கார்த்திகை தீபம்

    கடவுளின் ஜோதி சொரூபம்

    அகிலம் ஆளும் ஈசனின் ஆனந்த

    வடிவம்

    ஒளிமயமான சிவனின் ருத்ரா

    தாண்டவம்

    மலை மீது எறியும்

    அண்ணாமலையார் சக்தி தீபம்

    காற்று மழை என எது வந்தாலும்

    அணையாத ஜோதி

    ஐஸ்வரியாம் தரும் கார்த்திகை

    மாத தீபா ஜோதி

    கவலை எல்லாம் விலகவேண்டும்

    கடவுளின் அருள் கிடைக்கவேண்டும்

    விடு எல்லாம் வண்ணவிளக்குகளில்

    ஜொலிக்க வேண்டும்

    திரு கார்த்திகை தீபதிருநாள்

    வரவேண்டும்

    தெரு எல்லாம் தீபம் ஏற்றவேண்டும்

    அகல் விளக்கு ஒளி வீசவேண்டும்

    ஆனந்தமாய் நாம் வாழ்க்கை இருக்க

    வேண்டும்

    இறைவன் அருள் பரிபூரணமாய்

    கிடைக்க வேண்டும்

    கார்த்திகை மாதம் கடவுளுக்கு

    உகந்த மாதம் ஆகும்

  12. காயத்ரி மதன் குமார் says:

    விரும்பிய தலைப்பு – நானெனும் பொய்

    பரந்த வெளியில் பறந்து கொண்டிருக்கிறேன்…
    உயிரற்ற என் உடலைப் பார்த்து
    ஊரே வாயடைத்துப் போயிருக்கிறது…
    பஞ்சத்தைத் துடைக்க வேண்டிய நான்
    லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு வஞ்சத்தில் இணைந்தேன்…
    நிதியை வைத்து நீதியை ஜெயித்தேன்…
    கொள்ளையடித்த பணத்தை வைத்து வெள்ளை மாளிகைகள் கட்டினேன்…
    தங்கையாய் பார்க்கவேண்டிய மங்கையின் அழகில் மதிமயங்கி மஞ்சத்திற்கு அழைத்தேன்…
    அடித்துப் பறித்த பணத்தில் – பல
    ஆடி கார்களை வாங்கினேன்…
    வளங்களைக் காக்கவேண்டிய நான் – என்
    நலத்தில் மட்டுமே கவனம் கொண்டேன்…
    பணத்தை வாங்கிக்கொண்டு – பல
    பட்டதாரிகளின் வாழ்க்கையில் பட்டம் விட்டேன்…
    முகத்திற்கு முன் சிரித்துப்பேசி – பலர்
    முதுகில் குத்தினேன்…
    வாய் ஜாலங்களைக் காட்டி – சிலர்
    வாழ்க்கையையே முடித்தேன்…
    கண்ணால் கண்ட கன்னிகளின்மேல் காமவெறிக்கொண்டு – அவர்களை
    என் கட்டிலுக்கு இரையாக்கினேன்…
    மது போதையில் மதியிழந்து கிடந்தேன்…
    இருப்பேன் என்று நினைத்தேன்,
    இயன்றதை எல்லாம் செய்தேன்…
    இறப்பேன் என்பதை மறந்து,
    இரக்கம் காட்டத் தவறினேன்…
    பணம், பணம் என்று பிதற்றித்திரிந்த நான்
    இன்று பிணம் என்று அழைக்கப்படுகிறேன்…
    பொய்யையும் மெய் போல் மெய்மறந்து பேசிய நான்,
    இன்று “நானே பொய்”, “நானெனும் எண்ணம் பொய்” என்று உணர்ந்தும் பயனில்லாமல் பரந்த வெளியில் பறந்து கொண்டிருக்கிறேன்…

  13. சுனந்தா தேவி says:

    தலைப்பு : நான் எனும் பொய்

    எல்லையில்லா வானும் நான்
    முடிவில்லா கடலும் நான்

    விண்ணில் மிளிரும் விண்மீனும் நான்
    ஆழியில் வாழும் மீனும்‌நான்

    வானில்‌ பறக்கும் பட்சியும் நான் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரியும் நான்
    நிலத்தில் வாழும் விலங்குகளும் நான்

    தாகம் தணிக்கும் நீரும் நான்
    மேகம் சிந்தும் மழைநீரும் நான்

    சோதி வடிவில் சுடரும் நான்
    சினத்தின் உருவாய் பிழம்பும் நான்

    உயிர்கள் உண்ணும் உணவும் நான்
    உயிரை உண்ணும் கனவும் நான்

    தீ உமிழும் தனல் நான்
    பூமி கக்கும் அனல் நான்

    கார்முகிலின் மாரியும் நான்
    மும்மாரி தாங்கும் புனலும் நான்

    செந்நெல் ஈட்டும் நிலமும்‌ நான்
    நாட்டில் செழிக்கும் வளமும் நான்

    ஈரப்பதம் ஈட்டிடும் வனமும் நான்
    இயலாதோருக்கு ஈட்டிடும் குணமும் நான்

    உயிரும்‌ நான் தான்
    உடலும்‌ நான்‌ தான்
    சதையும்‌ நான் தான்
    சத்தமும் நான் தான்
    முதலும் நான் தான் முடிவும் நான் தான்

    நிலையில்லா வாழ்வை தந்தது நான்
    அதை நித்தமும் வாழ்ந்திட வைப்பதும் நான்

    ஞாலமும் நான்
    அது இயங்கும் முக்காலமும் நான்

    பருவத்தில் இளமை நான்
    முதுமையில் தனிமை நான்

    பிறப்பின் மகிழ்ச்சி நான்
    இறப்பின் வலியும் நான்

    பிரிவின் சோகமும் நான்
    காதல் கொண்ட‌ மோகமும் நான்

    உயிர்களை இயக்கும் இயக்குனர் நான்
    பிறவியின் கீதங்கள் செய்திடும்‌ இசையரசன் நான்

    குழவியின் சிரிப்பும் நான்
    கிழமையின் பூரிப்பு நான்
    விதியும்‌ நான்தான்
    பிறரின் சதியும் நான் தான்

    நம்பிக்கையில் சகலமும் நான்
    அல்லார்க்கு கல்தான் நான்

    உயிர் என்னும் பொய்யை
    உடலில் மெய்யாய்‌ தந்து
    பிறப்பை தருவது நானே!

    காற்றை நீக்கிய பந்தாய்
    மனிதனை உருமாறி பொருள் மாறி
    இறப்பை தருவதும் நானே!

    அகிலமே நான் என்ற மெய்யும் நான் தான்
    “நான்” இல்லை என்ற பொய்யும் நான் தான்!!!!

  14. கீர்த்தனாதேவி says:

    தலைப்பு : நானெனும் பொய்.

    ஊனெனும் உடலினுள்
    துடிக்கின்ற உயிரும் பொய்
    கடலெனும் நீரினில்
    வழிகின்ற அலைகளும் பொய்
    அழத்துடிக்கும் கண்களை
    ஆறப்படுத்தும் இமைகளும் பொய்
    வழிந்தோடும் துன்பத்தில்
    வாழ்கின்ற இதயமும் பொய்
    கரைந்தோடும் காலத்தில்
    கலைகின்ற கனவும் பொய்
    காதலிக்கும் நேரத்தில்
    நுழைகின்ற காற்றும் பொய்
    யாசிக்கும் நேரத்தில்
    நகைக்கின்ற சிரிப்பும் பொய்
    வாசிக்கும் நேரத்தில்
    யோசிக்கும் யாவும் பொய்
    விலைகின்ற நேரத்தில்
    வளர்கின்ற களைகளும் பொய்
    வயதான நேரத்தில்
    வளர்த்(ந்)துவிட்ட இளமையும் பொய்
    பாதைகள் பல செல்லும்
    பாதங்கள் சிலவும் பொய்
    கண்மூடும் நேரத்தில்
    மிளிர்கின்ற இரவும் பொய்
    கதறி அழும் நேரத்தில்
    கட்டியனைக்கும் கைகளும் பொய்
    எரிகின்ற தனலில்
    உமிழப்படும் வாரத்தைகளும் பொய்
    குளிர்கின்ற ஜாமத்தில்
    படர்கின்ற பனியும் பொய்
    பார்க்கின்ற நேரத்தில்
    பறந்து போகும் கோவமும் பொய்
    பற்றி எரியும் நெஞ்சத்தில்
    பரவுகின்ற நீரும் பொய்
    மடிந்து போகும் யாக்கைக்கு
    மயங்குகின்ற வேட்கையும் பொய்
    நேரத்தில் உள்ள நொடிகளும் பொய்
    உலகத்தில் உள்ள யாவும் பொய்
    சிறைவைப்பதோ வானெனும் பொய்
    இதை வடித்ததோ நானெனும் பொய்.

  15. தாரா says:

    தலைப்பு: மகாகவி

    பெண்கள் நாம் நாட்டின் கண்கள்

    என சொன்னவர்

    அழ்மனதில் நின்றவர்

    பேச்சில் சிறந்தவர்

    பெண்கள் முன்னேற்றம் அடைய

    வேண்டும் என சொன்னவர்

    முண்டாசு அணிந்த கவிஞர்

    கவிதை பாடும் புலவர்

    பல காலம் வென்ற ஒருவர்

    புதுமை பெண் என்று சொன்ன

    மனிதர்

    மகாகவி பாரதி மண்ணில் வாழும்

    உன் கவி

    சரித்திரம் சொல்லும் பாரதி

    விடுதலைக்கு காரணம் உன் கவி

    மனதில் உறுதி வேண்டும் பாரதி

    அதற்கு காரணம் உன் கவி

  16. வே. ஹேமலதா says:

    கார்த்திகை தீபம்
    ——————————–
    சேலையில் முடிந்துவைத்த
    காலணா காசிற்கு
    வாங்கிவந்த இரண்டு
    தேக்கரண்டி எண்ணெய்யும்
    தீடீரென வீடு வந்த
    பேரன் பேதிக்கு
    தோசை வார்க்கவே செலவாக
    கார்த்திகை நாளன்று
    வெறிச்சோடி கிடந்த
    பூக்கார பாட்டியின் வாசலில்
    தற்காலிகமாக தங்கிவிட்டு
    சென்றது நிலவு.
    ஒளியின் வெள்ளத்தில் முன்றில்.

    – வே. ஹேமலதா

  17. காயத்திரி குமரன் says:

    போராடும் மனங்கள்

    வார்த்தைகள் தடித்து அடித்துக்கொண்டன..
    வன்மங்கள் முற்றி முறுகிக் கொண்டன..
    மனங்கள் மௌனித்து ரணங்களை நிரப்பிக்கொண்டன..
    இரவுகளைத் தின்று ஏப்பம் விட்டது கோபம்..
    ஈற்றினில் பயனின்றிப் பாவமாயின பொழுதுகள்.

    மறுபடி ஒருமுறை சிந்திக்கையில்
    சிக்காமல் ஓடும் காரணங்களுக்காய்
    வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் விரிசல்கள்..
    இதை மேலும் விரிக்கவென -கூடவே
    அலையும் ஒரு பட்டாளம்.

    நீ வேறோ, நான் வேறோ என்று
    ஒன்றாய் கலந்து நின்ற காதல்,
    மெல்லக் காலத்தில் கரைந்து போய்
    நீ யாரோ நான் யாரோ என்று
    தப்புத்தாளம் கொட்டியது.

  18. ம மு சதிஷ் குமார் ( அம்மையார் குப்பம்) says:

    திருநங்கை
    பிழையின் நொடியில் நுழைந்தேனோ
    விதைத்த தவறால் திரிந்தேனோ
    விஞ்சிய பெரும்பாவம் புரிந்தேனோ
    தன்னின் வினையால் தலைகீழானதோ
    நகரும் நாளெலாம் நானுமோர்
    மானிட மெனவுமக்கு புரியாதோ
    உன்னுள் உலவும் ஆசைதானே
    என்னுள் நிலவும் மறந்தாயோ
    கண்ணால் தீண்டி வதைப்போரே
    பேச்சால் வெட்டிக் கொள்வோரே
    பொழியும் கண்ணீர் மறைத்தேனே
    ஊனனாய் மண்ணில் தவழ்ந்தேனே

    ம மு சதிஷ் குமார்

  19. M.Manoj Kumar says:

    கவிதையின் பெயர்:- தமிழ் ஜாதி
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

    தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது! வட இந்தியர் இருப்பார்! மலையாளிகள் இருப்பார்! மராத்தியர் இருப்பார்! தெலுங்குக்காரரும் இருப்பார்! எல்லாம் மக்களும் இணைந்து வாழும் தமிழகம் நமதே நமதே நமதே டா!

    ஊர்கள் வேறானாலும் நமது எண்ணம் ஒன்றே அண்ணா! மொழிகள் வேறு இருந்தாலும் நமது மொழி தமிழ் அண்ணா! யார் வந்தாலும், யார் போனாலும்
    வாழவைத்திடும் தமிழகம் அண்ணா!
    தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    ராமாயணம் பிறந்தது தேரழுந்தூரில்! சீறாப்புராணம் பிறந்தது ஏட்டயபுரத்தில்! இந்த படைப்புகள் யாவும் இல்லையென்றால் நமது கலாச்சாரம் பெரிய பூஜ்ஜியம்! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    வைகை அணை எவரது? ஆழியார் அணை எவரது? மேட்டூர் அணை எவரது? கரிகாலனின் கல்லணை எவரது? எல்லாம் வளங்களும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழும் தமிழ் அன்னையின் செல்ல குழந்தைகள் 72 கோடி பேருக்கு! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    சிப்பாய் கலகம் வேலூரில் நடத்தி சிங்கங்களாய் கர்ஜித்தோமே!
    வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி மாபெரும் புரட்சி செய்தோமே! வந்தே மாதரம்! ஜெய வந்தே மாதரம்!
    ஜல்லிக்கட்டாலே மல்லுக்கட்டி உலகை திரும்பி பார்க்க செய்தோமே! தேச பக்தியில் தமிழனுக்கு ஈடு இணையில்லை என உலகிற்கு நிரூபித்தோமே! தமிழ் ஜாதி நமது!
    வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    வள்ளுவன் தந்த திருக்குறளை உலகத்திற்கு அர்பணித்தோமே! சங்க தமிழை மதுரையில் உருவாக்கி உலகிற்கு அர்பணித்தோமே!
    சண்டை போட்டு கொண்டு தமிழ் ஜாதியை அசிங்கப்படுத்தவேண்டாம்! நான்கு பேரிடம் நம் ஜாதி பெயர் கேலி கிண்டல் ஆக்கவேண்டாம்!
    தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

  20. M.Manoj Kumar says:

    கவிதையின் பெயர்:- தமிழ் ஜாதி!
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

    தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது! வட இந்தியர் வாழ்வார்! மலையாளிகள் வாழ்வார்! மராத்தியர் வாழ்வார்! தெலுங்காரரும் வாழ்வார்! எல்லாம் மக்களும் இணைந்த தமிழகம் நமதே, நமதே, நமதே டா!
    தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    ஊர்கள் வேறானாலும் நமது எண்ணம் ஒன்றே அண்ணா! மொழிகள் வேறு இருந்தாலும் நமது மொழி தமிழ் அண்ணா! யார் வந்தாலும், யார் போனாலும் வாழவைத்திடும் தமிழகம் அண்ணா! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    ராமாயணம் பிறந்தது தேரழுந்தூரில்! சீறாப்புராணம் பிறந்தது ஏட்டயபுரத்தில்! இந்த படைப்புகள் யாவும் இல்லையென்றால் நமது கலாச்சாரம் பெரிய பூஜ்ஜியம்! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    வைகை அணை எவரது? ஆழியார் அணை எவரது? மேட்டூர் அணை எவரது? கரிகாலனின் கல்லணை எவரது? எல்லாம் வளங்களும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழும் தமிழ் அன்னையின் செல்ல குழந்தைகள் 72 கோடி பேருக்கு! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    சிப்பாய் கலகம் வேலூரில் நடத்தி சிங்கங்களாய் கர்ஜித்தோமே!
    வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி மாபெரும் புரட்சி செய்தோமே! வந்தே மாதரம்! ஜெய வந்தே மாதரம்! ஜல்லிக்கட்டாலே மல்லுக்கட்டி உலகை திரும்பி பார்க்க செய்தோமே!
    தேச பக்தியில் தமிழனுக்கு ஈடு இணையில்லை என உலகிற்கு நிரூபித்தோமே! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!

    வள்ளுவன் தந்த திருக்குறளை உலகத்திற்கு அர்பணித்தோமே! சங்க தமிழை மதுரையில் உருவாக்கி உலகிற்கு அர்பணித்தோமே!
    சண்டை போட்டு கொண்டு தமிழ் ஜாதியை அசிங்கப்படுத்தவேண்டாம்! நான்கு பேரிடம் நம் ஜாதி பெயர் கேலி கிண்டல் ஆக்கவேண்டாம்! தமிழ் ஜாதி நமது! வென்றிடும் வேங்கை ஜாதி நமது!