பார்வைகள் பதில் சொல்லும்
உன் பார்வை படும் போது
மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு
மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த
பனித்துளி போல் பரவசமாகிறேன்.
கற்பணைக் கருவில் உன் காதலை
சுமந்து கொண்டு தான் கவிதை படைக்கிறேன்.
மௌனம் சாதிக்காதே மலரே!
என் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்,
மனதுக்குள் மௌன மொழிகளில் எரிமலை பதில் சொல்லும்.
என் இதயத் துடிப்புகள் வேலைநிறுத்தம் கூட செய்யலாம்.
கற்பணைக் குதிரைக்கு காவல் வைத்துவிட்டு
தீர்ந்துபோன என் எழுதுகோல் மைக்கு
பதில் தேடி உன் விழியோரம்
என் மனதை தொலைத்த நேரத்தில்
உன் பார்வைக்கு பதில் சொல்ல வந்த வரிகள் இங்கே.
– நீரோடைமகேஷ்
ஜில்லிட வைக்குது வரிகள்… அருமை… வாழ்த்துக்கள்…
கடைசி பத்தி மிகவும் ரசிக்க வைத்தது…
மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு
மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த
பனித்துளி போல் பரவசமாகிறேன்.//
மனத்தை குளிர்வித்துப் போகும் வரிகள்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதை
தொடர வாழ்த்துக்கள்