என் மின்மினி தொடர்கதை (பாகம் – 78)


சுவாரசியமாக செல்லும் தொடர்கதை மின்மினிக்கு வாசகர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவுக்கு நன்றி !, ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-78

en minmini kathai paagam serial

En minmini thodar kadhai

மீண்டும் கொஞ்சம் யோசித்துக்கொண்டே ஏன் தம்பி.,நீங்க இந்த வீட்டிலேயே இருந்து அவனை பார்த்து கொள்ளலாம் தானே.நேரம் இருக்கும் போது எல்லாம் நானும் வந்து அவ்வப்போது பார்த்து கொள்வேன் என்றாள் டீச்சர்…

ஏன் டீச்சர் அப்போ நீங்க இன்னும் என்னை நம்பாமல் தானே இப்படி கேட்கிறீங்க.உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் முகில் கூடவே நான் இங்கே இருக்கேன் டீச்சர் என்றான் பிரஜின்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை தம்பி.இருந்தாலும் நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தால் இந்த ஊரும்,ஊரு மக்களும் என்று பேச்சை இழுத்தாள் டீச்சர்…

ஒரு பிரச்சனையும் இல்லை டீச்சர். எனக்குன்னு ஒரு உறவுகளும் இல்லை அம்மா,அப்பா கூட விட்டுட்டு போயாச்சு.இப்போ ஒரு வீடு மட்டும் தா இருக்கு.அதுவும் ஊருல தான் இருக்கு.அதனால் நான் இங்கேயே இருந்து முகிலை நன்றாக பாத்துக்குறேன் என்றான் பிரஜின்…

ரொம்ப சந்தோசம் தம்பி.என்னதான் நாம அவனை நல்லா பாத்துகிட்டாலும் அவன் அம்மா மாறி வாராது தானே என்றபடி முகிலின் தலையை கோதியபடியே நான் கிளம்பட்டுமா தம்பி என்று கிளம்ப தயாரானாள் டீச்சர்…

ம்ம்…போய்ட்டு வாங்க டீச்சர்.அப்பப்போ நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து அவனை கொஞ்சம் பாருங்க டீச்சர் என்றான் பிரஜின்.

இதையெல்லாம் அமைதியாக கவனித்து கொண்டிருந்த முகில் அவனது அம்மாவின் நினைவு வர.,டீச்சர் அம்மாகிட்டே போகனும் என்றபடி அழ ஆரம்பித்தான்.லேசாக அழ ஆரம்பித்து சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு விசும்பி விசும்பி சத்தமாக அழ தொடங்கினான்.

டீச்சரும்,பிரஜினும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றே போயினர்.

கூப்பாடு போட்டு முகில் அழ.,அந்த சத்தத்தில் ஊரில் இருந்த அக்கம் பக்கத்தினர் பாரதியின் வீட்டின் முன்பு கூடி.,என்ன ஆச்சு… புள்ளைக்கு என்ன ஆச்சு என்று ஒவ்வொருவரும் கொலுகொலுவென சமாதானப்படுத்த தொடங்கினர்…

கூட்டம் கூடி காற்று கூட புக முடியாத அளவுக்கு ஆட்கள் சேர்ந்துவிட்டனர்.இடையில் புகுந்த பிரஜின்.,கண்ணீருடன் இருந்த முகிலை கையில் எடுத்து தனது தோளில் சாய்த்து,முதுகில் தட்டி அம்மா வந்துடுவாங்க பிள்ளை தூங்கும்மா…என்றபடி சமாதானப்படுத்த ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினான் முகில்…

டீச்சரின் கண்களும் கலங்கி குளமாகி இருந்தது.தனது முந்தானையால் அழுகையை துடைத்துவிட்டு அமைதியாக நின்றாள்.

ஊர்மக்கள் ஓவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க அந்த இடம் மீண்டும் அமைதியாக ஆனது – என் மின்மினி தொடர்கதை பாகம்-78.

அம்மா இல்லாத பையனை நான் எப்படித்தான் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே இறைவா.நீ தான் காப்பாத்தணும் என்று பிரஜின் மனசுக்குள் நினைத்துக்கொண்டிருந்த அதே நேரம் கற்பூரபொம்மை பாடலில் உள்ள தாயன்பிற்க்கே ஈடேதம்மா வரிகள் எங்கோ ஒலித்தபடி கேட்க வானத்தை பார்த்து மனதுக்குள் சிரித்தான்.

பாகம் 79ல் தொடரும்…

– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)

You may also like...