கொரோனா எச்சரிக்கை – 5

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக.. – corona kavithaigal tamil.

கொரோனா கவிதை

பறந்து வந்தாயோ?
மிதந்து வந்தாயோ?
மகுடம் அணிந்த
கலியுக அரக்கனாய்
காட்சி தருகின்றாய்….

நீ பார்வை பதித்த
நாடெல்லாம்
சாம்பல் மேடுகள்…
வீதியில் உலாவும் உன்னால் வீட்டில் முடங்கினோம் நாங்கள்!

மனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர்!
தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்!

தெருவிலே தேடி நீயும் தொலைந்து போவாய்
விரைவினிலே…
உன்னால்பட்டது அதிகமெனினும் …..
பெற்றதும் உண்டு சில பாடங்கள்…

சேகரிக்கும் நாள்தனிலே, சேமிப்பும் அவசியமே!
பணம் இருந்தாலும்
பலமற்றுப் போகும் சமயங்களிலே!

corona kavithaigal tamil

ஆணவம் அதிகாரம் அனைத்தும் ஆளரவமற்று அடங்கிடுமே!
ஆறடி நிலம் கிடைப்பதும் அரிதாகிவிடும் சமயத்திலே!

உணர்ந்து கொண்டோம்! உளம் தெளிந்தோம்!
உடலால் தனித்திருப்போம்
உணர்வால் ஒன்றிடுவோம்!!!

– தி.வள்ளி, திருநெல்வேலி


You may also like...

3 Responses

  1. Vysali says:

    மனித தெய்வங்களாய் மருத்துவத் துறையினர்!
    தொழும் தெய்வங்களாய் துப்புரவு தொழிலாளர்கள்!…

    மிக சிறப்பான வரிகள்..
    அற்புதமான கவிதை..

  2. Siva says:

    கவிதை மிக அருமை!!

  3. R. Brinda says:

    மருத்துவத்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள்–இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அவர்களுக்கு ஆண்டவன் நல்ல தேக ஆரோக்கியத்தையும் மனோதிடத்தையும் வழங்கட்டும்.