என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum

என் காதல் கருவுற்றாலும்,
மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும்,
நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய்
பறந்து திரிகிறாய்.

en penmai kaadhal karuvutraalum

ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது.
உன் ஆண்மையின்  அழகு என்னை, என் ரசிப்புத் தன்மையை விலை பேசிவிட்டது.

தாயன்பை மட்டுமே உலகமாய் நினைத்து வாழ்ந்த என்னில்,
காதலனாய், காவியனாய் இடம் பிடித்தாய்.
நான் இழந்த என் தந்தை பாசம் உன்னில் கண்டேன் ….

உனக்காக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும் என் இரத்த நாளங்கள்,
நீ இல்லை என்று தெரிந்தாலும் ,
நீ இல்லை என்று மறுத்தாலும்,
உறைந்து விடும் அக்கணமே.

உனைக்கண்ட நிமிடமே என் பெண்மைக்கு
உன்னை அடையாளப்  படுத்திவிட்டேன்.

En penmai kaadhal karuvutraalum

 – நீரோடைமகேஷ்

You may also like...

6 Responses

 1. vidivelli says:

  உனக்காக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கும் என் இரத்த நாளங்கள்,
  நீ இல்லை என்று தெரிந்தாலும் ,
  நீ இல்லை என்று மறுத்தாலும்,
  உறைந்து விடும் அக்கணமே.

  அழகான கவிதை,,
  வாழ்த்துக்கள்,,,

 2. vidivelli says:

  அழகான கவிதை,,
  வாழ்த்துக்கள்,,,

 3. கவிதை அருமை.

 4. நல்ல கவிதை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *