ஜவ்வரிசி அல்வா செய்முறை
சமையல் வல்லுநர், கதாசிரியர் பிருந்தா இரமணி அவர்களின் சத்தான, ஆரோக்கியமான அல்வா செய்முறை – Javvarisi Halwa.
தேவையானவை
ஜவ்வரிசி – 1 கப் (5- 6 மணி நேரம் ஊற வைக்கவும்).
கேரட் – 1 (துருவி வைக்கவும்)
கற்கண்டு பொடித்தது – 3/4 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு -6
ஏலக்காய் தூள் – 1/ 4 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதில் கேரட் துருவலைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டுக் கிளறவும். ஒரு நிமிடம் கிளறி, பிறகு ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும். வெந்தவுடன் கற்கண்டுப் பொடியைப் போட்டுக் கிளறவும். நன்கு கெட்டியாகிச் சுருள வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு போட்டுக் கலந்தால் சுவையான, கலர்ஃபுல்லான ஜவ்வரிசி அல்வா ரெடி! – Javvarisi Halwa
பி.கு
கற்கண்டுப் பொடிக்குப் பதிலாகக் கருப்பட்டி/வெல்லம் சேர்த்துச் செய்யலாம்.
– ஆர். பிருந்தா இரமணி , மதுரை
மிக அருமையான எளிமையான சுவையான சிற்றுண்டி..ஜவ்வரிசி உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது மேலும் சிறப்பு .சகோதரி பிருந்தா ரமணி அவர்களுக்கு மிக்க நன்றி
ஜவ்வரிசி அல்வா அருமை. புது வரவு.பாராட்டுகள்.
மிக நல்ல பதார்த்தம்
எளிய முறை..வித்தியாசமான சுவை.கலர்புல் ஸ்வீட்.