காதல் வழக்கு
மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை
இம்மண்ணில் வாழ வைப்போம்.
பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே
உளறல்கள் சொந்தமில்லை!
நீயென்ற இலக்கினிலே
போராடி நான் வெல்வேன்.
நீயில்லாப் பாதையிலே
மணலோடு மணலாக நான்.
நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில்
என் பார்வை படும் போதெல்லாம்,
வெட்கத்தில் சுளிக்கும் உன் உதடுகள்.
உறவுகள் தந்த சரீரம் இது என்றாலும்,
உனக்காக உலகம் வந்த ஆன்மா எனதே.!
இக்கவிதை எழுதிய கணம் “நீ” என்ற
எழுத்தின் மேல் விழுந்த
அந்த வேப்பம்பூ அறியும்
உன் மேல் நான் கொண்ட உடைமை!
முன்பெல்லாம் உன் காதலுடன் போட்டியிடும்
என் காதலும் பாசமும் உன்னை மிஞ்சிய கணம்
உன்னிடம் காதல் வளராத காரணம் கேட்டு
வழக்கு தொடுத்துக் கொண்டே.
//நீயென்ற இலக்கினிலே
போராடி நான் வெல்வேன்.
நீயில்லாப் பாதையிலே
மணலோடு மணலாக நான்.//
உயிர் கொண்ட காதலுக்கு என்றும் அழிவில்லை.
அறிமுகப்படுத்த அன்பு தேவையில்லை….
அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை….
உங்களது கவிதை மிகவும் அற்புதம்……