கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி
நிலா மகளை நிலத்தில், இப்பூமியில்
தவழவிட்டு ! searching my lover poem nila
நினைவுகளை வருடிய கற்பனைகளால்,
காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை
தீட்டி வரும் வருணனைகள் தான்
அவளின் அழகு.

searching my lover poem nila

அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில்
ஒரு காதல் கோட்டை கட்டி வருகிறேன்.
கட்டுமானப் பணிகளின் ஓய்வு நேரங்களில்
என் கற்பனை குதிரையில்
அவளைத் தேடி பயணிக்கிறேன்.

பூமிக்கு பிரம்மன் படைத்த நிலவை
வானில் கண்டபோதெல்லாம்,
வானில் நட்சத்திரங்களும் என்னவளைத்
தேடத் தொடங்கியது !.

searching my lover poem nila

– நீரோடை மகேஷ்

You may also like...

4 Responses

 1. Sekar says:

  அருமை அருமை

 2. நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

 3. arunkumar says:

  very nice……..

 4. //பூமிக்கு பிரம்மன் படைத்த நிலவை
  வானில் கண்டபோதெல்லாம்,
  வானில் நட்சத்திரங்களும் என்னவளைத்
  தேடத் தொடங்கியது //.
  உங்க நிலவை பத்திரமா பார்த்துக்குங்க.கவிதை அருமை.