பாலைவனத்தின் தாகம் கூட தீரும்
தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love
என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை !
உன்னை நினைப்பதால் அந்த
பாலைவனத்தின் தாகம் கூட தீரும் !
நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும்
தாகம் கொள்ளும்.
நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய
நாட்கள் சொல்லும்,
புயல்-மழை எதிலும் நீர் வடியாத கூரை
உந்தன் முந்தானைக் கூரை என்று.
குறிப்பு : படிப்பதற்கு அழகாக உள்ளது என்று கருத்து வாங்க மட்டுமே அம்மாவைப் பற்றி எழுதவில்லை, நமக்காக வயிற்றை வதைத்து (ம) ரணத்தை வென்று நம்மைக் காத்த தாயை எத்தனை பேர் வளர்ந்த பின்னும் நேசிக்கின்றனர் ? தனக்கென ஒரு குடும்பம் என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு சுயநலக் குதிரையில் பயணிக்கின்றனர்.
தாயைப் பற்றி இன்னும் எழுத முடியும் வார்த்தைகளை தேடித்தொலைகிறேன் தினமும்.
amma kavithai mother love
– நீரோடைமகேஷ்
vaalththukkal
கவிதையும் உங்கள் கருத்தும் நன்றாக உள்ளது ! தாயை ஒப்பிட இந்த உலகத்தில் எதுவுமே இல்லை நண்பரே ! நன்றி !
அன்பு…அருமை!