கவிதை தொகுப்பு 59
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சகா என்ற புனைப்பெயரில் கவிதை எழுதிவரும் சௌந்தர்ய தமிழ் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் kavithai thoguppu 59
வறுமையும் சுகமே
கற்களை உடைத்த கைகளில் காயம் இருந்தும்,
தன் மகளின் கைகளை தீண்டும் பொழுது வலி மறந்திடுமோ என்னோவோ…
தாயின் சேலை ஊஞ்சலாக..
அவள் வேலை கடினமாக..
வளையல் சத்தம் நின்று போக..
ஏனோ!!! ஒரு ஏக்கம்…
மழைநீர் மண்ணுக்கு மட்டும் சொந்தமில்லை,
அந்த பெண்ணுக்கும் சொந்தம் போலும்..
வீதியில் சென்ற நீர்
வீட்டுக்குள் ஏன் வந்தது என்ற வினா??
காகித கப்பல் கற்று கொடுக்கும் தாய்கோ
தன் மகள் இதுபோன்ற கப்பலில் பயணம் செய்யும் கனா..
ஏழ்மையை எதிர்க்கும் நம்பிக்கை தரும் வறுமையும் சுகமே….
– சகா
நான் காட்டுத் தீ
சுடர் விடும் தீபம் போல ஒளி மட்டுமல்ல
வலியும் தருவேன்,
என் தேகம் தீண்ட நினைத்தால்…
என் நிழல் தீண்ட எண்ணினால் நிஜமான நீ நிழலாகி போவாய், பாவை நான் நினைத்தால்..
வஞ்சகன் நீயோ சுதந்திரமாக சுற்றிட..
பட்டாம்பூச்சி போல் சுற்றிய நான் ஜன்னல் கம்பிகளுக்குள்!!
இது சாபம் அல்ல… வஞ்சக பார்வை கொண்டவன் செய்யும் பாவம்….
பாவத்தின் படிப்பினை இந்த பாவை கொடுப்பாள்..
வீரம் நிறைந்த மண்ணில், விதி என இருப்பது நியாயமில்லை…
இனி தாமதிக்க விருப்பமில்லை..
தொட நினைத்தால் தொடரும் இந்த காட்டுத் தீ!!!!!!
– சகா
அழகியே
பாவை நெஞ்சில் காதல் துளிர்த்ததோ..
விழிகள் சிரிக்கின்றதே..
விரல்கள் ரசிக்கின்றதே..
கன்னி இவள் பெண்மை உணர்ந்தாளோ..
கன்னங்கள் சிவக்கின்றதே….
அழகியே…. துளி துளி நீரை கொண்டு,
என் இதழை நனைத்ததின்
ரகசியம் என்னவோ???
உள்ளம் உன் தேடலில்
உயிர்கொண்டு உருகியதோ…
உள்ளங்கையில் உன்னை
அள்ளி கொள்ள எண்ணியதோ..
சாளரத்தின் சாரலே..
மண்ணில் மடிசாயும் போது
வருகை தந்தால் நன்றி…
– சகா
கன்னத்தில் முத்தமிட்டால்..
பனித்துளி முத்தமிட்டால் பூக்களும் வெட்கம் கொள்ளும்..
மழைத்துளி நீ முத்தமிட்டால் வீரம் நிறைந்த மண்ணும் வெட்கம் கொள்ளும்….
நீர்த்துளி முத்தமிட்டாளல் முத்துக்களும் வெட்கம் கொள்ளும்..
நிலவொளி முத்தமிட்டால் நீலவானம் கூட வெட்கம் கொள்ளும்..
தேவதை நீ முத்தமிட்டால் மாலை மல்லிகையும் வெட்கம் கொள்ளும்..
கன்னி நீ முத்தமிட்டால் அறுசுவையும் வெட்கம் கொள்ளும்..
பாவை நீ கன்னத்தில் முத்தமிட்டால் காதலே வெட்கம் கொள்ளும்..
– சகா
உன் சுவாசம்
காதலோடு தொடரும் முதல் பயணம்…
போகும் பாதை எல்லாம் புதிய அனுபவம்..
காரணம் அறியாத ஒரு புன்னகை..
மாலை வெயில் நேரம்
மடி சாய்ந்தேன் ஒரு நாழிகை…
உள்ளத்தின் தேடலில் ஊடல் இருப்பினும்,
உனக்கானவள்
இந்த காரிகை…
துளி துளியாய்
வந்து நெற்றியில் முத்தமிட்டாய்..
தலைவா!! உனது துணை நான் என்று ஒற்றை முத்தம் சொல்லிவிட்டது..
– சகா
உன்னில் தொடங்கட்டும்..
ஆகாயம் நிறம் மாற போவதில்லை..
அறுசுவை தன் சுவையில் மாற்றம் அடைந்ததில்லை..
அடம் பிடிக்காது குழந்தைகள் இருப்பதில்லை..
குற்றங்கள் நியாயமாவதில்லை..
குறைகளை பேசாத
வலைதளங்கள் இல்லை..
இயற்கையது தன் நிலையில் இருந்து மாற்றம் அடைந்ததில்லை..
மாற்றம் வேண்டுமெனில் மனிதா அவை உன்னில் தொடங்கட்டும்..
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் உண்மை,
பள்ளிகளில் உண்மையாகாட்டும்…
சுதந்திர காற்றை சுவாசிக்கும் பெண்மைக்கு, அங்கீகாரம் உண்மையாகட்டும்…
பசி தீர்க்கும் உழவர்களுக்கு வேளாண்மையில் மாற்றம் வேண்டும்..
உனக்கும் எனக்கும் சுவாசம் தரும் மரங்களின் எண்ணிக்கையில் மாற்றம் வேண்டும்.. – kavithai thoguppu 59
மனிதா மாற்றம் உன்னில் வேண்டும் இந்த மண்ணில் அல்ல!!!
– சகா
வாழ்த்துக்கள் சகா
அருமையான கவிதை சகா வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
Arumai.. Thodarnthu pathividungal.. Muthal murai.. Padithathu..
Neerodai naanum vaasikka thodangi ullen.. Vaaipalitha neerodai aasiriyarukku en nandrikal..
அனைத்து கவிதைகளும் அருமை
தமது அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி தோழர்களே..
ஜெயசீலன் அவர்களுக்கும், சந்தோஷ் குமார் அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ்
அவர்களுக்கும் எனது நன்றியே சமர்ப்பிக்கிரேன்..
வாழ்த்துக்கள் அழகியயே சகா
வரிகளும் அருமை அறிமுகமும் அருமை.. நீரோடை மற்றும் சகா கவிஞருக்கும் வாழ்த்துக்கள்
கதிர் அவர்களுக்கும் கஸ்தூரி அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்…