மார்கழி மாத கோலப்போட்டி 2020

மார்கழி மாதத்தில் தங்களின் வீட்டின் முன் போடப்படும் கோலங்களும் தங்களுக்கு பரிசை பெற்றுத்தரும். ஆம், தங்களின் கோலங்களின் புகைப்படத்துடன் கீழ்க்காணும் பிரிவுகளில் சில வரிகள் எழுதி அனுப்பி நீரோடையின் மார்கழி மாத சிறப்பு போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் – kolam potti 2020,

  1. பெண்களுக்கான குறிப்புகள் (அழகு, உடல் நலம் மற்றும் வழிபாட்டு முறைகள்)
  2. சமையல் குறிப்புகள்
  3. நமது பாரம்பரியம் (உதாரணம்: பாட்டி வைத்தியம்)

முக்கிய குறிப்புகள்

கோலத்தின் புகைப்படத்துடன் கண்டிப்பாக ஏதேனும் குறிப்பு இருக்க வேண்டும். குறிப்புகளுடன் வரும் பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மார்கழி 29 (ஜனவரி 14 2020) அன்று போட்டி முடிவடையும். செயற்கை வண்ணத்தை பயன்படுத்தாமல் அரிசி மாவில் இயற்கையான வண்ணங்களுடன் போடப்படும் கோலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


போட்டியில் கலந்துகொள்ள,

  • கோலங்களின் புகைப்படம்
  • மேலே குறிப்பிட்ட குறிப்புகள்
  • தங்களின் மின்னஞ்சல் (Email)
  • தங்களின் அலைபேசி (Mobile) எண்
  • பெயர் மற்றும் ஊர் போன்ற

விபரங்களுடன் info@neerodai.com க்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது கீழே குறிப்பிட்டுள்ள வாட்சாப் பொத்தானை சொடுக்கி எங்களுக்கு நேரடியாக அனுப்பலாம் – kolam potti 2020.

கோலப் போட்டி 2020 நிறைவு பெற்றது. வாசகர்கள் தங்களின் படைப்புகளை தொடர்ந்து நீரோடைக்கு (info@neerodai.com) அனுப்பலாம். நீரோடையில் அது கட்டுரையாக வெளியிடப்படும்.

முடிவுகள் தை மாத மத்தியில் வெளியிடப்படும்.


கோலமிடுவதன் நன்மைகள்

மார்கழி கோலத்திற்கு சிறப்பான மாதம், தெருவெங்கும் கோலமயமாக தென்படும். பொதுவாக வீட்டின் முன் கோலமிடுவது பூமித்தாய்க்கு செய்யும் மரியாதையாகும். சாணம் தெளிப்பது எதிர்ப்பு சக்தி உண்டாக அதே மாதிரி அரிசி மாவினால் கோலம் போடுதல் அன்ன தானத்திற்கு சமமாகும். கோலம் போடும்முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள். சூரிய உதயத்திற்கு கோலம் போட வேண்டும். வீட்டில் மகாலக்ஷ்மி விஜயம் செய்வது ஐதீகம் எனவே புதிய தண்ணீரில் வாசல் தெளிக்கவேண்டும் மேலும் சாணம் கலந்து தெளிப்பது மேலும் சிறப்பு kolam potti 2020.

எப்படி கோலமிடுவது ?

இறந்தவர்கள் தொடர்பான எந்த விசேஷ நாட்களிலும் கோலம் போடா கூடாது. பெண்கள் உட்காராமல் குனிந்து நின்றே கோலமிடவேண்டும் குறிப்பாக தரையில் . மேலும் ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும் kolam potti 2020.

கோலம் போடுதலின் காரணங்கள்

வீடு கட்டி இருப்பிடம் அமைத்து வாழ ஆரமித்த நம் ஆதி மக்கள் விரல் எடுக்காமல் கோலமிடுவதும் ஒரு மிகச்சிறந்த யோகா காலை போன்ற பலன்களை தருவதாக உணர்ந்தவர்கள் சொன்னதுண்டு. நுண்ணுயிரிகள் தன்னால் அளிக்கப்பட்டதை உணர்ந்ததால் அரிசி மாவினால் கோலமிடுவதை தொடங்கினர் என்று சொல்லப்படுகிறது. கோலமிடுவது குறிப்பாக நமது பண்பாட்டின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. அரிசி கோலம் தற்காலத்தில் குறிப்பாக எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் உணவாக, வாழ்வாதாரமாக திகழ்கிறது


2018-2019

You may also like...