விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே- பாகம் 1
தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன்.
நீ போகும் இடமெல்லாம் நிழலாக
நான் வர வேண்டும். இல்லையென்றால்
நிழல் விழாத அளவு வெளிச்சத்தில்
உன் பயணம் இருக்க வேண்டியிருக்கும்.
சிக்கெடுக்கும் உன் கூந்தலுக்கு
சீப்பாக இருக்க வேண்டும்.
சிதறி விழும் உன் கூந்தல் மயிரிளைகலாக
வேண்டாம் என் பந்தம்.
நான் கண் கொண்டதே, இதுவரை
இலை மறைக்காயாய் நீ இருந்ததால்.
மற்றவர் பார்வைக்கு நீ ஒரு ஊடகமாய்
மேடையில் நிற்கையில், பிழை செய்கிறேனோ
இன்னும் என் கண்களை விட்டு வைத்த வன்னம்.
என் புலம்பல்களை இந்த நீரோடையில்
கலக்கிறேன். உன்னைச் சேர்கையில் பார்
இதன் நிறம் சிவப்பாக மாறி இருக்கலாம்.
இந்த காதலுக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியும்
மன்னிக்க தெரியாது.
நீ ஓடிக் கலைத்து வந்து இழைப்பார
அமரும் நிழலடி அசையா
மரமாக இருக்க விரும்பவில்லை நான் !.,
ஆயிரம் மரங்களை நாடும்
வல்லமை கொண்ட அரவான் நான்.