“மை” விழிக்கும் வாழ்வின் மொழி – நீரோடை மகேஷ்
அவளின் நாளேட்டின் மை தீர்ந்த பேனா “மை” மொழியும் வார்த்தைகளை கவிதையாக உங்கள் நீரோடை மகேசின் வரிகள் – mai vizhikkum vaazhvin mozhi.
வாசகர்களுக்கு நீரோடையின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
மைகொட்டி எழுதவில்லை!!!…
ரத்தம் சொட்டி தவிக்கிறேன்!!!!….
உன் நினைவுகளால்…..
பெண்ணே
சில தருணங்களில், காதலை
சொல்ல தவிக்கிறாய்,
சொல்லி தவிக்கிறாய்
பலநேரம்
தூது வந்த காதலை
ஏற்றுக்கொ(ல்ல)ள்ள
மறுக்கிறாய்!!!!..
இழந்த காதலை
எண்ணி எண்ணி
நாட்களை பிரபஞ்சத்தில்
தொலைக்கிறாய்,
பூட்டப்படாத வீட்டுக்குள்
பூட்டிய மனதோடு
போலி பிம்பத்துடன் வாழ்வை
நகர்த்துகிறாய்…
விட்டில் பூச்சியாய்..
நினைத்தால் மலரும்
வல்லமையை
மலருக்கு கூட தரவில்லை….
இறைவன்!!!! – mai vizhikkum vaazhvin mozhi
திறன் இருந்தும் கானல் திரவமாக நடிப்பதேன்…..
திங்கள்
சோர்வுடன் போராட
கடந்த
இழந்த
மறைந்த
தொலைத்த
இழைத்த
நாட்களை
நினைத்து அசைபோடும்
கூழாங்கற்களாக நகர்கிறது
நாட்களுடன்
உன் வாழ்வும்.
வாழ்வின் மிச்சங்களையாவது
எழுத்துகளின் இடைவெளிகளில்
தொலைக்காமல்
நீ நீயாக
வாழ்ந்துவிடு!!!
மாண்டுவிடு!!!
இப்படிக்கு
உன் நாளேட்டின் மை
தீர்ந்த பேனா…….
– நீரோடை மகேஷ்
அருமை மகேஷ். வாழ்த்துகள். தொடர்க தமிழ் இட்ட பணியை செம்மையாக…..
மகேஷ் அவர்கள் கவிதை அருமை..நெருப்பென சுடும் பிரிவின் வலி சொல்கிறது.காதலியின் தயக்கத்தால் ஏற்படும் ஆற்றாமையை இயம்புகிறது.கடைசி சில வரிகள் அழகின் உச்சம்.பாராட்டுகள்..
கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நீரோடை மகேஷ் அவர்களின் கவிதை மிகவும் அருமை. பாராட்டுக்கள்
அமையான வரிகள். உங்கள் கவிதை பணி
சிறக்க வாழ்த்துகள்.
கவிதை வரிகள் எதார்த்தமாக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
வரிகளை பார்த்தால் கவிஞர் காதலில் மூழ்கி முத்தெடுத்தவர் போல இருக்கிறது வாழ்த்துக்கள்..
“நீரோடை மகேஷ்” மை க் கவிதை.
கருவறை தெய்வம்
திருவறை நீங்கி-புறம்
அருள் புரிய வந்ததோ?
அருமை!அற்புதம்!!.
“மை”க் கவிதை-ஆங்கில,
“மை”(என்னுடைய) அனுபவங்கள் என,அனைவரையும்,
உணர்ந்துவகை கொள்ள வைத்த,
உண(ல)ராத “மை”-இது!
வளரட்டும் நின் கவிதைப்பணி!
மலரட்டும் புதிய அத்தியாயம்!!
பாரிஸா அன்சாரி.
தங்கள் அனைவரின் அன்பும் ஊக்கமும் நாங்கள் மேலும் வளர படிகட்டுகளாகும்.
– நீரோடை மகேஷ்.
உணர்வு பூர்வமாக கவிதை உள்ளது…… வாழ்த்துக்கள் கவிஞரே……