மூங்கில் வனம் – நூல் விமர்சனம்
கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் எழுதிய “மூங்கில் வனம்” கவிதை நூல் விமர்சனம். இந்நூல் இவருடைய மூன்றாம் கவிதை தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது- moongil vanam puthaga vimarsanam
கவிஞர் கவி தேவிகா அவர்கள் எழுதிய விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும்.
நூலின் பெயர் மூங்கில் வனம் | நூலாசிரியர் கவிஞர் கூடல் தாரிக்
தமிழ் இனிமை கொஞ்சும் அதன் புகழ் விண்ணையும் மிஞ்சும் தமிழ் மொழிக்கே இப் பெருமை என்றால் தமிழில் கவிதை படைத்தால் கேட்கவா வேண்டும் ஆம் நாம் இன்று விமர்சிக்க போவது ஒரு அற்புதமான கவிதை நூலைப் பற்றி சொட்ட சொட்ட பொழியும் தேமதுர கவி மழையில் நனைய அடர்ந்த வனத்திற்குள் கவிபாடும் குருவியாய் அவரோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் மூங்கில் வனத்துக்குள் கவிஞர் கூடல் தாரிக் அவர்கள்.
அழகான மூங்கிலின் வண்ண படத்தோடு ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு அற்புதமான நூல் மூங்கில் வனம்.கவிஞர் கூடல் தாரிக் முனைவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் – moongil vanam puthaga vimarsanam.
மூங்கில் வனம் இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும் முதல் நிலை இரண்டாம் நிலை இவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக வெளிவந்துள்ளது இந்நூல் . அடர்த்தியும் அருவிகளும் வனங்களும் முகில்களும் ஒன்று சேர்ந்து உறவாடும் கம்பம் மேற்கு மலைச்சாரலில் ஒட்டுமொத்த முறையையும் இந்த மூங்கில் மனதிற்குள் புரிய வைத்திருக்கிறார் என்று கவிஞர் பொற்கைப் பாண்டியனின் சிறப்புரையை தாங்கி,
பல நயமான கவித்துவ உரையாடலை பெரும்பாலான வரிகளில் தாங்கி நடக்கிறது மூங்கில் வனம் எனும் இத்தொகுப்பு நவீனத்துவ குறியீடுகளும் இல்லாமல் இயல்பாய் செல்வதை இந்நூலின் வெற்றி, என்று கவிஞர் ஜெய தேவனின் புகழுரை சுமந்து அழகாய் காட்சி தரும் மூங்கில் வனத்திற்குள் வாருங்கள் நாமும் சற்று இளைப்பாறுவோம்….
“மழையின் சாயலில் தான் இருக்கின்றார்கள்
கருணை கொண்ட
மனிதர்கள் யாவரும்”
என கவிஞர் மழையை கருணை நிறைந்தவர்களாகவும், கருணை மிக்கவர்கள் மழையாகவும் ஒப்பிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது மிகச்சிறந்த கவிநயம்
அடுத்து மழையை கவிஞர் நேசிக்கும் காதல் கவியாக
“இரண்டு இதயங்கள் உன்னை நேசிக்கின்றேன்
ஒன்றில் உணவுக்காகவும்
மற்றொன்றில் உயிர்ப்புக்காகவும்
ஒற்றை துளி
பெற்ற பிரபஞ்சத்தை
தவிர என்னிடத்தில்
வேறு எதுவும் இல்லை
நறுமணங்கள் அறிந்திருக்கும்
என் தோட்டத்தின் வாசனை
மேலும் அதிகரிக்கிறது
நீ எனக்கு ரூமியின் மஸ்னவி
இதயத்தில் மட்டும்
உன்னை வாசிக்க இயலும்…..”
“லேசான தூறல்களுக்கு இடையில்
அம்மா கீரை வேண்டுமா என்கிறாள் வாசல் முன் கூடையுடன்
வந்து நிற்பவள்
வேண்டும் வேண்டாம் என நீங்கள் உதிர்க்கும் ஒற்றை சொல்லில்தான் அவள் பசி நீளுதலும்
அடங்குதலும்
இருக்கிறது”
என்னே கவிஞரின் காட்சிபடுத்தல்….
பார்க்கும் காட்சிகளை எண்ணங்களாக்கி பின் அதை மனதில் ஏற்றி தன் மொழியால் வார்த்தைகள் சேர்த்து அழகுபடுத்தி கவி படைப்பது என்றால் …. அசாத்திய திறமை வேண்டும் அதற்கெல்லாம்…
இன்னும் இதுபோல் இயல்பாக இனிமை சேர்க்கும் கவிதைகளின் தொகுப்பு இந்த மூங்கில் வனம்.
சின்னஞ்சிறு கொடிமலர்
நான் சொல்லாமல் சென்ற பல கவிகளின் அர்த்தங்களையும் அனுபவித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள நீங்கள் முற்படுவீர்கள் என்று நம்புகிறேன் பொதுவாக கவிஞர்கள், அவர்கள் நெஞ்சத்தில் தோன்றுவதை காகிதத்தில் கவி படைத்து நம் உள்ளம் கவர்வதில் உயரிய இடம் பெற்றவர்கள் இந்நூலின் ஆசிரியரும் அப்படித்தான் மூங்கில் வனத்தினுள் நம்மை சிறிய சிறிய தூறல்களில் நனைத்து சின்னஞ்சிறு கொடிமலர்களால் நம்மை வருடி அழகாய் எடுத்துச் சென்றிருக்கிறார் கவிதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார்.
இயல்பான சொல்லாடல் ,அழகிய ஒப்பிடல் ,அகமும் புறமும் ஆங்காங்கே விளையாடும் எதுகையும் மோனையும் கவிக்கு இடம் சேர்க்க…. மேலும் இதுபோன்ற கலைஞர் கவிதை தொகுப்புகளை வெளியிட ஆசிரியருக்கு வாழ்த்துக்களை கூறி விமர்சனத்தை நிறைவு செய்கிறேன் -moongil vanam puthaga vimarsanam.
– கவி தேவிகா, தென்காசி
அந்த வனத்தில் பொழிந்த மழையில் சிறு தூறல்களில் நமை நனைத்துச் சென்றிருக்கிறார்.. விமர்சகர்..
லேசான தூறல்களுக்கு இடையில்
அம்மா கீரை வேண்டுமா என்கிறாள் வாசல் முன் கூடையுடன்
வந்து நிற்பவள்
வேண்டும் வேண்டாம் என நீங்கள் உதிர்க்கும் ஒற்றை சொல்லில்தான் அவள் பசி நீளுதலும்
அடங்குதலும்
இருக்கிறது”
அருமை.. அருமை..
வாழ்த்துகள்..
💐💐💐💐
அருமையான விமர்சனம்.மிக்க நன்றியும் அன்பும்
இனிய சாரலோடு..இளங்குயிலின் இன்னிசை யோடு …கவின்மிகு மூங்கில் வனத்துக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பெண் கவி சகோதரி தேவிகா அவர்கள்…கவி தரும் சிறு சாரல்களே இனிமையான தூறல்களாய் இருக்கிறது .நூலாசிரியருக்கும்… விமர்சன ஆசிரியருக்கும்… வாழ்த்துக்கள்.
விமர்சனம் நன்றாக இருக்கிறது
கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துகள். வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி
அருமை. வாழ்த்துகள்