நாலடியார் (16) மேன்மக்கள்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-16

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – அரசியல்

16. மேன்மக்கள்

செய்யுள் – 01

“அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறு ஆற்றும் சான்றோர் அஃது அற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசு உறின்”
விளக்கம்
வானத்தில் நின்று ஒளிபரப்பும் சந்திரனும், மேன் மக்களும் ஒப்பானவையே. ஆனால் சந்திரன் தினமும் தேய்கிற களங்கத்தைப் பொறுத்துக் கொள்ளும். மேன் மக்களோ தன் ஒழுக்கத்தில் சற்று தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.

செய்யுள் – 02

“இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ
அரிமா பிழைப்ப எய்த கோல்”
விளக்கம்
விரைவோடு நரியின் மார்பை பிளந்து சென்ற அம்பை விட சிங்கத்தை நோக்கி விடப்பட்ட அம்பு உயர்ந்ததாகும். அதனால் முடிந்தாலும், முடியாவிட்டாலும் சான்றோர்கள் அரிய செயல்களையே எண்ணிச் செய்வர்.

செய்யுள் – 03

“நரம்பு எழுந்து கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் – உரம் கவறா
உள்ளம் எனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பாலவை”
விளக்கம்
நரம்புகள் மேலே தோன்றுமாறு உடல் மெலிந்து வறுமையுற்ற போதிலும், மேன்மக்கள், நல்லொழுக்த்தின் வரம்பு கடந்து இரத்தல் ஆகிய குற்றத்தை செய்ய மாட்டார்கள். அவர்கள் தன் அறிவை கவறாக கொண்டு முயற்சி என்னும் நாரினால் இரத்தல் எனும்ஙதீய நினைவை அடக்கி தன்னிடமுள்ள பொருள்களுக்கு ஏற்ப நற்செயல்களைச் செய்வார்கள். (கவறு – பிளவுபட்ட பனை மட்டையை கொண்டு ஒன்றை பிடுத்து இறுக்கி கயிற்றால் கட்டுதல்).

செய்யுள் – 04

“செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர்
தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்து யாப்பர்
நல்வரை நாட சிலநாள் அடிபடின்
கல் வரையும் உண்டாம் நெறி”
விளக்கம்
நல்ல மலைகள் உள்ள நாட்டை உடைய மன்னனே! மேன் மக்கள் ஒருவரை ஒருநாள் கண்டாலும், பலநாள் பழகியவர் போல அவரை நட்பினராக ஆக்கிக் கொள்வர். சில நாட்கள் காலடிபட்டு நடந்தால் கல் மிகுந்த மலையிலும் தேய்ந்து வழி உண்டாவது போல திடமான நட்பு கொள்வதே மேன் மக்கள் இயல்பாம்.

செய்யுள் – 05

“புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங் கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன்
பல்லாருள் நாணல் புரிந்து”
விளக்கம்
கல்வியறிவு இல்லாத ஒருவன் கற்றோர் அவையில் பொருத்தமற்று உரைப்பனவற்றை சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடைய அவமானப்படுவதை எண்ணி மேன்மக்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பர்.

செய்யுள் – 06

“கடித்து கரும்பினைக் கண் தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்
வடுப்பட வைது இறந்தக் கண்ணும் குடி பிறந்தார்
கூறார் தம் வாயின் சிதைந்து”
விளக்கம்
கரும்பை பல்லால் கடித்தாலும், அதன் கணுக்கள் நெரியுமாறு ஆலையிட்டு அரைத்தாலும், உரலிலிட்டு சிதைத்தாலும் அதன் சாற்றின் சுவை இனிப்பாகவே இருக்கும். அதுபோல மேன் மக்களின் மனம் வருந்துமாறு பேசினாலும் அவர்கள் தம் வாயால் தீயன சொல்ல மாட்டார்கள்.

செய்யுள் – 07

“கள்ளார் கள் உண்ணார் கடிவக் கடிந்து ஒரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார் – தள்ளியும்
வாயின் பொய் கூறார் ஒடு அறு காட்சியார்
சாயின் பரிவது இலர்”
விளக்கம்
குற்றமற்ற அறிவுடைய மேலோர், திருடார், கள் அருந்தார், விலக்க தக்க தீயனவற்றை விலக்குவர். அவமதித்து இகழ்ந்து உரையார், தன் வாயால் பொய் கூறார். ஊழ்வினையால் வறுமை உற்றாலும் அதற்காஎ வருந்த மாட்டார்.

செய்யுள் – 08

“பிறர் மறையின் கண் செவிடு ஆய் மிறன் அறிந்து
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய
புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானைல் யாதும்
அறம் கூற வேண்டா அவற்கு”
விளக்கம்
ஒழுக்கத்தின் மேன்மை உணர்ந்து ஒருவன் பிறருடைய ரகசியங்களை கேட்பதில் செவிடாகவும், அயலார் மனைவியை காண்பதில் குருடனாகவும்,பிறர் இல்லாத போது அவரைப் பற்றி பழித்து பேசுவதில் ஊமையாகவும் இருப்பான் ஆனால் அவனுக்குவேறெந்த அறமும் கூற வேண்டியதில்லை.

செய்யுள் – 09

“பல் நாளும் சென்றக் கால் பண்பு இலார் தம் முழை
என்னானும் வேண்டுப என்று இகழ்ப – என்னானும்
வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு”
விளக்கம்
அவமதிப்பும், மிக்க மதிப்பும் மேன் மக்களாகிய பெரியோர்களால் மதிக்க தக்கனவாகும். ஒழுக்கமில்லா கீழ் மக்களின் பழிப்புரையும், பாராட்டையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். சான்றோர்களின் ஏற்றமிகு செயல் கண்டு உள்ளத்தில் மகிழ்வர். நிகழ்வது மற்றவையாயின் அவற்றை மதியாமல் விட்டு விடுவர்.

செய்யுள் – 10

“உடையார் இவர் என்று ஒருதலையாப் பற்றி
கடையாயார் பின் சென்று வாழ்வர் – உடைய
பிலம் தலைப்பட்டது போலாதே நல்ல
குலம் தலைப்பட்ட இடத்து”
விளக்கம்
படம் வரிக்கும் நாகப்பாம்பு நிலத்தில் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசை கண்டு அஞ்சும். அதுபோல, மேன்மை மிக்க பெரியோர் சினம் கொள்வாராயின், தவறு செய்தவர் பாதுகாப்பான இடத்தை சேர்ந்திருத்தாலும் தப்பி பிழைக்க மாட்டார்.

– கோமகன்

You may also like...