நாலடியார் (19) பெருமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-19

naladiyar seiyul vilakkam

பொருட்பால் – அரசியல்

19. பெருமை

செய்யுள் – 01

“ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்
காதலவரும் கருத்து அல்லர் காதலித்து
ஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்”
விளக்கம்
பொருள் இன்மையால் பிறர்க்கு ஒன்றைக் கொடுக்கவும் இயலவில்லை. இளமையும் வீணாகக் கழிந்துவிட்டது. முன்பு தம்மிடம் பற்று கொண்டிருந்த மனைவி மக்களும் இப்போது அப்படி இல்லை. ஆதலால் இன்னும் நாம் வாழ்வோம் என்னும் ஆசையை விட்டு துறந்து போவதே நல்ல செயலாகும்.


செய்யுள் – 02

“இச் சார்வின் ஏமாந்தேம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணிய
பொச்சாந்து ஒழுகுவர் பேதையாரச் சார்வு
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார்
என்றும் பரிவது இலர்”
விளக்கம்
இல்வாழ்க்கையை மேற் கொண்டதனால் இன்புற்றோம். அந்த இல்வாழ்க்கையில் ஒரு குறையுமின்றி இருக்கிறோம் என்று எண்ணி பின்னர் வரப் போகும் துன்பத்தை மறந்து நடப்பர் அறிவிலாதார். இல்வாழ்க்கை இன்பங்கள் நிலை பெற்றன போல் காணப்பட்டு திலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒருபோதும் வருந்தார் இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையார் எதிலும் பற்றற்று இருப்பர் என்பது பெருமையாம்.


செய்யுள் – 03

“மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் – அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம்
இன்றிப் பலவும் உள”
விளக்கம்
இருந்த இடத்திலிருந்தே இளமை முதலான பருவங்கள் மாறி போகும் காரணம் தோன்றாமல் இன்னும் பல வேறுபாடுகளும் உண்டாகும். ஆதலால் மறுமைக்கு வித்தாகிய நல்லறங்களை மயக்கமின்றி செய்து அறிவுடையோராய் வாழுங்கள்!


செய்யுள் – 04

உறைப்பு அருங் காலத்தும் ஊற்று நீர்க் கேணி
நிறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக் கடனும்
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையர்
ஆஅயக் கண்ணும் அரிது”
விளக்கம்
மழை இல்லாத கோடை காலத்தும், நீர் சுரக்கும் கிணறு தன்னிடம் உள்ள தண்ணீரை பிறர் இறைத்து குடிக்க கொடுத்து ஊரை காப்பற்றும் அதுபோல பெரியோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறருக்கு கொடுப்பர் ஆனால் பெருமையற்ற சிறுவர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்கு தரமாட்டார்கள்.


செய்யுள் – 05

“உறு புனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும்
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம்
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்ககண்ணும் சிலர்க்கு ஆற்றி
செய்வர் செயற்பாலவை”
விளக்கம்
மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போது மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது நீரற்ற போதும் தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில் நீர் சொரிந்து உதவி செய்யும்.அதைப் போல பெரியோர் தம் செல்வத்தை பிறருக்கு கொடுத்து வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்கு கொடுப்பர். ஆனால் பெருயையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்கு தரமாட்டார்கள்.


செய்யுள் – 06

“பெரு வரை நாட பெரியார்கண் தீமை
கரு நரைமேல் சூடேபோல் தோன்றும் கரு நரையை
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார் மேல்
ஒன்றனும் தோன்றக் கெடும்”
விளக்கம்
பெரிய மலைகளை கொண்ட நாட்டை உடைய வேந்தனே! பெரியோரிடம் உண்டான குற்றம் பெரிய வெள்ளை எருதின் மீது போடப்பட்ட சூடு போல விளங்கித் தோன்றும் சிறந்த வெள்ளை எருதை கொன்றது போன்ற கொடிய குற்றத்தை சிறியோர் செய்தாலும் அது ஒரு குற்றமாக தோன்றாமல் மறையும்.


செய்யுள் – 07

“இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண்
பசைந்த துணையும் பரிவு ஆம் – அசைந்த
நகையேயும் வேண்டாத அறிவினார்கண்
பகையேயும் பாது பெறும்”
விளக்கம்
அற்பத்தனம் மிக்க நற்குணம் இல்லாதவரிடம் நட்புக் கொண்டிருக்கும் வரை துன்பமே மிகும். விளையாட்டாக கூடத் தீயனவற்றைச் செய்ய விரும்பாத நல்லறிவாளரிடம் கொண்ட பகையேனும் பெருமையைத் தரும்.


செய்யுள் – 08

“மெல்லிய லாருள் மென்மை அது இறந்து
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம்
சலவருள் சாலச் சலமே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்”
விளக்கம்
மென்மைத் தன்மை கொண்ட மகளிடம் மென்மை குணம் உடையவராக திகழ்க! பகைவரிடத்தில் அந்த மென்மையை விட்டு விட்டு எமனும் அஞ்சத் தக்க குணம் உடையவராக தோன்றுக!பொய்யர் தம் கூட்டத்தில் பொய்யராக மாறுக! நல்லவர் குழாத்தில் நன்மையின் வரம்பாக விளங்குக!


செய்யுள் – 09

“கடுக்கி ஒருவன் கடுங் குறளை பேசி
மயக்கிவிடினும் மனம் பிரிப்பு ஒன்று அன்றி
துளக்கம் இலாதவர் தூய மனத்தார்
விளக்கினுள் ஒண் சுடரே போன்று”
விளக்கம்
ஒருவன் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு பிறர் பற்றி இல்லாத கோள் சொற்களை சொல்லி மயங்க செய்தாலும், அப்பிறர்பால் சிறிதும் மன வேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே விளக்கில் சுடர் போல தூய மனத்தவராவர்.


செய்யுள் – 10

“முன் துற்றும் ஒனறினை நாளும் அறம் செய்து
பின் துற்று துற்றுவர் சான்றோர் அத் துற்று
புக்வகுற்றம் நீக்கீ முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும்”
விளக்கம்
சான்றோர்கள் உண்ணத் தரும் உணவை நாள் தோறும் அறம் செய்த பின்னர் உண்பர். அப்படி உண்ட உணவு, காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களை போக்குவதனுடன் வாழ்நாள் தோறும் அவர்களைத் துன்பத்தினின்றும் காப்பாற்றும் – naladiyar seiyul vilakkam-19.

– கோமகன்

You may also like...