ஆரோக்யத்துடன் நோயின்றி வாழ சில குறிப்புகள்

நலமுடன் வாழ சில குறிப்புகள்

 • விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம் nalam vaazha sila kurippugal.
 • சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
 • உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
 • முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
 • கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
 • தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
 • பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
 • கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
 • அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
 • எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
 • குடல்புண் குண மாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
 • தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
 • அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
 • பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

nalam vaazha sila kurippugal

ஆரோக்யத்துடன் வாழ சில குறிப்புகள்

 • உப்பு, தயிர், வெங்காயக் கலந்த சாலட் உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும் nalam vaazha sila kurippugal.
 • மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும் இல்லை என்றால் இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பின்னாலும் நாக்கு/வாய் புண் சீக்கிரம் ஆறும்.
 • எலுமிச்சை தோல் கொண்டு பல் தேய்க்க பற்கள் பளபளக்கும்.
 • காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.
 • அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
 • விஸ்வா இலுப்பை எண்ணை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) கொண்டு எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து தடவி வர நகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது.
 • எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.
 • கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.
 • வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்
 • கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
 • சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட பல்லில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

You may also like...