ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya
நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி நூல்களைப் படி அதுவே அறிவின் வாயிற்படி” என்று பாரதிதாசன் கூறியதுபோல நூல்களை தவறாமல் படித்துக் கொண்டே இருப்போம் . நம் வாழ்வியல் நெறிகளை நம்மையும் நெறிப்படுத்துவதில் நூல்கள் பெரும் பங்காற்றுகிறது எனலாம்.
படி படி நூல்களைப் படி அதுவே அறிவின் வாயிற்படி
“ஓடிப்போவது தவறு சந்தியா” சிறுகதை தொகுப்பு ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் நூலாசிரியர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி அருகிலுள்ள மாநாடு சுந்தரபுரம் குதிரைமொழி கிராமத்தில் பிறந்தவர் சிறுவயது முதல் சிறுகதை நாவல் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் இவரது சிறுகதைகள் பல இதழ்களில் வெளிவந்தன பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன – odi povathu thavaru sandhiya
அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞரின் கவிதைத் தொகுப்பைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம் ஓடிப்போவது தவறு சந்தியா புத்தகத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது ஆனால் வெளிப்புறமாக இந்த தலைப்பை பார்த்துவிட்டு நாம் இந்த கதைக்குள் நுழைந்து ஆனால் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் நம் அர்த்தத்தை நமக்கு கூறுகிறார் கதையாசிரியர்
இறப்பை நோக்கி ஓடிப்போவது தவறு சந்தியா
இருபது சிறுகதைகளை கொண்ட அற்புத நூல். முதல் கதையாக ஓடிப்போவது தவறு சந்தியா இந்த கதையில் கதாநாயகனும் அவரது மனைவியும் குடும்பத்தோடு சுற்றுலா பயணிக்கிறார்கள் அங்கே நீர்நிலையில் போட்டிங் செல்லும் பொழுது அவருடைய முன்னாள் காதலியான சந்தியாவை சந்திக்கிறார் . அவள் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்படும் பொழுது இவர் அவளை காப்பாற்றி… இறப்பை நோக்கி ஓடிப்போவது தவறு சந்தியா வாழ்வில் என்றுமே கஷ்டம் ஏற்படும் முன்னேறி அதை கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறும் விதமாக இக்கதை அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
ஒரு மலரின் தீர்ப்பு
அடுத்து “ஒரு மலரின் தீர்ப்பு” கயவர்களால் தன் தோழிக்கு நேர்ந்த அதீத கொடூரத்தை தாங்கிக் கொள்ளாமல் திவ்யா அந்த கயவர்களை அழிக்கும் பொருட்டு முடிவு செய்கிறாள். தன் தோழிக்காக கொலை செய்யும் திவ்யாவை காப்பாற்றும் பொருட்டு அவள் நல்வாழ்விற்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் சுஜிதா. தன் தோழிகள் ஏற்காத ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பெண்களின் அழகிய கதை என்றே கூறலாம் – odi povathu thavaru sandhiya.
பிறந்தநாள்
“பிறந்தநாள்” இக்கதையில் சிறுவயதிலேயே தன் தாய் தந்தையை இழந்து பாட்டியிடம் வளரும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா இந்த வருடம் தனக்கு வரும் பிறந்தநாளை மற்ற தோழிகளை போல கேக் வெட்டி பெரிய விழாவாக கொண்டாட வேண்டும் என்பது அவளுடைய ஆசை. தன் ஆசையை பாட்டியிடம் வெளிப்படுத்த அவளோ தன் நிலை கருதி செய்வதறியாது அந்த ஊர் கவுண்டர் இடம் போய் உதவி கேட்க முதலில் மறுத்த கவுண்டர் பிறகு கிருத்திகாவின் ஆதங்கத்தையும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றிய அவளுடைய பார்வையையும் விளக்கிய போது அவர் அந்த பிறந்தநாள் விழாவை தன் வீட்டிலேயே கொண்டாட ஏற்பாடு செய்வதும் கண்கலங்க வைக்கிறது .
பொதுவாக சிலரால் நிராகரிக்கப்பட்ட பிறந்தநாள் விழா கொண்டாட முடியாமல் போன பிறந்த நாள் விழாக்கள் எத்தனை எத்தனை ஏக்கங்கள் கொண்டாட முடியாத தருணங்களில்…. முடிந்தவரை பிறந்த நாளை கொண்டாடுவோம் சிலர் கொண்டாடுவதற்கும் உதவி செய்வோம் .
ஆஹா அற்புதமான அழகிய கதைகள் ஒவ்வொரு கதைகளும் கருத்தை வாரி அழைத்துச் செல்கின்றது நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றது எங்க கூறிய ஒரு சில கதைகளை போல இன்னும் சுவாரசியமான கதைகளை நீங்களும் படித்து இன்புற வாங்கிப் படியுங்கள். “ஓடிப்போவது தவறு சந்தியா” ….
– கவி தேவிகா, தென்காசி
அருமையான கதைகள்… தெளிவான நூல் விமர்சனம்.. சகோதரி கவி தேவிகாவிற்கு பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும்..
கதை வித்தியாசமாக நன்றாக இருக்கிறது
விமர்சனம் நன்று… வாழ்த்துகள் 💐💐
சிறுகதைகளின் விமர்சனம் நன்று.