ஒரு கொலை செய்யுங்கள்

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal

நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்த செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை,மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம்.அந்த “ஒருவனை” அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா!நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு,வாழ்வு,இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது,வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது.இங்கே சிலரின் கனவுகள் மட்டுமே நிஜமாகிறது,பல கனவுகள் நினைவாகின்றன!

அச்சம்,நாணம்,தோல்வி,குடும்ப சூழல்,சமுதாயம் இவற்றுள் ஒன்று மேலேகுறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள்,குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

வரலாறு உங்கள் பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது,ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

பூமாலைகள் கிடைப்பதற்கு தாமதமாகிற வேளையில் கல்லாலான மாலையை ஏற்றுக்கொளவது எப்படி சரியாகும்?

கொலை செய்யுங்கள்

நாளைய உலகின் வழிகாட்டி நீ,வலுவிழந்து கிடக்கிறாய்!

போராளி நீ,போருக்கு பயந்து பொய் கிடக்கிறாய் ?

சூரியனே !உன்னை பாய் என்று உலகம் சொன்னதால் நீ சுருண்டு போய் கிடக்கிறாய்!

உலகத்தின் பழிச்சொல்லுக்கு செவிசாய்த்து,உன் கனவுகளை மறுதலித்து போயிருக்கிறாய்!

உன்னை எழ விடமால் சமுதாயம் உன் கால்களை முடமாகியதால்,நான்கு சுவற்றுக்குள் நீ நலிவடைந்து போயிருக்கிறாய்!

இப்போதைய நீ,நீ இல்லை .அது உலகத்தின் சாதாரண மனித பிம்பம்.நீ ஆள்வதற்காக படைக்க பட்டவன்,அழுவதற்காக அல்ல..!

உனக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும்,ஒற்றை உலகத்திற்கு உன்னை மொத்த பலம் எப்படி தெரியும்…!

குருட்டு உலகத்தின் நியாயமில்லா வார்த்தைகளுக்கு நீ செவிடனாகா மாறிருக்கவேண்டும்!

இனியேனும் துயில் களை,இயற்கையின் எந்த படைப்பும் வீணாக போவதில்லை,நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா?கைவிட்ட கனவுகளை மறுமணம் செய்து கொள்.காலம் ஒருநாள் உன் பெயரை உச்சரிக்கும்!

இந்த இயற்கை உனக்கென அழகிய உலகத்தினை படைத்திருக்கிறது,நீ தான் உன் கண்களை மூடி கொண்டிருக்கிறாய்!இமைகளையும்,இதயத்தையும் ஒருசேர திற,வசந்தங்களின் வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்!

அன்று தேவதைகள் உங்கள் மேல் பூமாரி பொலிந்து புதிய உலகத்திற்கு வரவேற்கும்.அதற்காக உங்களிடம் நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.கவலை,தாழ்வுமனப்பான்மை,துரோகம்,காயம்,கண்ணீர் ஆகியவற்றால் நீங்கள் கட்டுண்டுகிட க்கிறீர்கள்.

நம்பிக்கையின்மை என்ற சாத்தான் உங்களுள் சென்று உங்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.அந்த சாத்தானை உங்கள் மனபலத்தால் கொன்றுவிடுங்கள்.அவனை கொலை செய்து விடுங்கள்.பிறகு உண்மையான நீங்கள் உங்களிடமிருந்து தோன்றுவீர்கள்.அந்த நொடியிலிருந்து வாழ்க்கை அர்த்தப்படும்.

– சரவணப்பிரகாஷ்

 

பொறுப்பாகாமை

You may also like...